பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 2, 2020

அல்குர்ஆன வசனமும் -23

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    ✍🏻....தொடர் : 23

*☄️நபித்துவமும்*
               *நபிகளாரின்*
                       *வாழ்க்கையும் { 14 }*

*☄️இறைத்தூதரிடம்*
           *தேவையற்ற*
                  *கேள்விகளைக் கேட்டல்*

_*🍃நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மையுள்ளவன்.*_

      *📖அல்குர்ஆன் 5:101 📖*

ﺣﺪﺛﻨﺎ ﻣﻨﺬﺭ ﺑﻦ اﻟﻮﻟﻴﺪ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ اﻟﺠﺎﺭﻭﺩﻱ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻲ، ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ، ﻋﻦ ﻣﻮﺳﻰ ﺑﻦ ﺃﻧﺲ، *ﻋﻦ ﺃﻧﺲ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: ﺧﻄﺐ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺧﻄﺒﺔ ﻣﺎ ﺳﻤﻌﺖ ﻣﺜﻠﻬﺎ ﻗﻂ، ﻗﺎﻝ: «ﻟﻮ ﺗﻌﻠﻤﻮﻥ ﻣﺎ ﺃﻋﻠﻢ ﻟﻀﺤﻜﺘﻢ ﻗﻠﻴﻼ، ﻭﻟﺒﻜﻴﺘﻢ ﻛﺜﻴﺮا»، ﻗﺎﻝ: ﻓﻐﻄﻰ ﺃﺻﺤﺎﺏ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﺟﻮﻫﻬﻢ ﻟﻬﻢ ﺧﻨﻴﻦ، ﻓﻘﺎﻝ ﺭﺟﻞ: ﻣﻦ ﺃﺑﻲ؟ ﻗﺎﻝ: ﻓﻼﻥ، ﻓﻨﺰﻟﺖ ﻫﺬﻩ اﻵﻳﺔ: {ﻻ ﺗﺴﺄﻟﻮا ﻋﻦ ﺃﺷﻴﺎء ﺇﻥ ﺗﺒﺪ ﻟﻜﻢ ﺗﺴﺆﻛﻢ} [اﻟﻤﺎﺋﺪﺓ: 101] ﺭﻭاﻩ اﻟﻨﻀﺮ، ﻭﺭﻭﺡ ﺑﻦ ﻋﺒﺎﺩﺓ، ﻋﻦ ﺷﻌﺒﺔ*

_அனஸ் (ரலி) அறிவித்தார்._

_*🍃இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், ‘நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்’ என்று குறிப்பிட்டார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒருவர், ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘இன்னார்’ என்று கூறினார்கள். அப்போதுதான் ‘நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும்’ எனும் இந்த (5:101) இறைவசனம் அருளப்பட்டது.*_

     *📚நூல்: புகாரி 4621📚*

ﺣﺪﺛﻨﺎ اﻟﻔﻀﻞ ﺑﻦ ﺳﻬﻞ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﻨﻀﺮ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺧﻴﺜﻤﺔ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﺠﻮﻳﺮﻳﺔ، *ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﻗﺎﻝ: ﻛﺎﻥ ﻗﻮﻡ ﻳﺴﺄﻟﻮﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ اﺳﺘﻬﺰاء، ﻓﻴﻘﻮﻝ اﻟﺮﺟﻞ: ﻣﻦ ﺃﺑﻲ؟ ﻭﻳﻘﻮﻝ اﻟﺮﺟﻞ ﺗﻀﻞ ﻧﺎﻗﺘﻪ: ﺃﻳﻦ ﻧﺎﻗﺘﻲ؟ " ﻓﺄﻧﺰﻝ اﻟﻠﻪ ﻓﻴﻬﻢ ﻫﺬﻩ اﻵﻳﺔ: {ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﺬﻳﻦ ﺁﻣﻨﻮا ﻻ ﺗﺴﺄﻟﻮا ﻋﻦ ﺃﺷﻴﺎء ﺇﻥ ﺗﺒﺪ ﻟﻜﻢ ﺗﺴﺆﻛﻢ} [اﻟﻤﺎﺋﺪﺓ: 101] ﺣﺘﻰ ﻓﺮﻍ ﻣﻦ اﻵﻳﺔ ﻛﻠﻬﺎ "*

_இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்._

_*🍃சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் (நபி(ஸல்) அவர்களிடம்), ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். தம் ஒட்டகம் காணாமற் போய்விட்ட இன்னொருவர் ‘என் ஒட்டகம் எங்கே?’ என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்களின் விஷயத்தில் இந்த (5:101) வசனத்தை அருளினான்.*_

        *📚நூல்: புகாரி 4622📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment