பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, December 24, 2020

நன்மைகளை - 6

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🥀 நன்மைகளை அள்ளிக் 🥀*
                               ⤵️ 
              *🥀 கொள்வோம் 🥀*

                *✍🏻.... தொடர் { 06 }*

*🥀எல்லாச் செயலுக்கும்*
                      *நன்மைகள்🥀*

*🏮🍂வழிபாடுகள், கடமைகள் போன்றவற்றிற்கு மட்டுமல்ல, உலகத்தில் எந்தச் செயலைச் செய்தாலும் அதற்கும் அல்லாஹ்விடம் நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியும்.* இதோ அல்லாஹ்வின் தூதர் சொல்வதைக் கேளுங்கள்.

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا وَاصِلٌ، مَوْلَى أَبِي عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ، *عَنْ أَبِي ذَرٍّ…إِنَّ بِكُلِّ تَسْبِيحَةٍ صَدَقَةً، وَكُلِّ تَكْبِيرَةٍ صَدَقَةً، وَكُلِّ تَحْمِيدَةٍ صَدَقَةً، وَكُلِّ تَهْلِيلَةٍ صَدَقَةً، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنْ مُنْكَرٍ صَدَقَةٌ، وَفِي بُضْعِ أَحَدِكُمْ صَدَقَةٌ، قَالُوا: يَا رَسُولَ اللهِ، أَيَأتِي أَحَدُنَا شَهْوَتَهُ وَيَكُونُ لَهُ فِيهَا أَجْرٌ؟ قَالَ: «أَرَأَيْتُمْ لَوْ وَضَعَهَا فِي حَرَامٍ أَكَانَ عَلَيْهِ فِيهَا وِزْرٌ؟ فَكَذَلِكَ إِذَا وَضَعَهَا فِي الْحَلَالِ كَانَ لَهُ أَجْرٌ*

_🍃இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு ஓரிறை உறுதிமொழியும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே;_ _*உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு” என்று கூறினார்கள்.*_

_*மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா❓” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தடைசெய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! சொல்லுங்கள்! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்’’ என்று விடையளித்தார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
               *அபூதர் (ரலி)*

    *📚நூல்: முஸ்லிம் (1832)📚*

*🏮🍂பசி, தாகம், தூக்கம் போன்று பாலுணர்வு என்பதும் பருவம் அடைந்தவர்களுக்கு முக்கியத் தேவையாக இருக்கிறது. அந்தத் தேவையை மார்க்க வரம்புக்குள் நின்று முறையாகத் தீர்த்துக் கொள்பவருக்கும் அல்லாஹ் நன்மையைத் தருவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.*

*🏮🍂இவ்வாறு, அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டுச் செய்கிற செயல்கள் அனைத்திற்கும் மறுமையில் நன்மைகள் கிடைக்கும்.* இதைப் பின்வரும் செய்தி மூலமும் புரிந்து கொள்ள முடிகிறது.

حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ، *عَنْ أَبِي مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ صَدَقَةٌ*

_*🍃‘ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகிவிடும்’என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
               *அபூமஸ்வூத் (ரலி)*

       *📚நூல்: புகாரி (55)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment