பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 2, 2020

நாவை பேனுவோம் - 20

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

               *🔥 நாவை*
                                ⤵️
                        *பேனுவோம் 🔥*

                 *✍🏻....தொடர் { 20 }*

              *⛱️ இறுதி பாகம் ⛱️*

*🏮🍂இதுவரை நாவினால் ஏற்ப்படும் விபரீதத்தைப் பற்றித் தெரிந்தோம். இதே நாவை நல்ல காரியங்களில் பயன்படுத்தினால் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன.* நாவைக் கொண்டு தஸ்பீஹ் செய்யலாம்;, குர்ஆன் ஓதலாம், நன்மையை ஏவி தீமையைத் தடுக்கலாம். இன்னும் இவைகள் போன்ற எத்தனையோ நல்ல காரியங்களில் ஈடுபடலாம். *நாவை நல்ல வழிகளில் பயன்படுத்துவதினால் கிடைக்கும் நன்மைகளில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*📖1 . குர்ஆன் ஓதுதல் 📖*

 _*🍃நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்கு (அதை ஓதியவர்களுக்கு) பரிந்துரை செய்யக்கூடியதாக வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

 *📚 நூல் : முஸ்லிம் 1470 📚*

 _*🍃குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். ''அலிஃப்,லாம்,மீம் என்பது ஓர் எழுத்து'' என்று நான் சொல்லமாட்டேன். அலிஃப் என்பது ஓர் எழுத்து, லாம் என்பது ஓர் எழுத்து, மீம் என்பது ஓர் எழுத்தாகும் என நபி ஸல்  அவர்கள் கூறினார்கள்.*_

    *📚 நூல் : திர்மிதி 2910 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*📿2 . தஸ்பீஹ் செய்தல் 📿*

_*🍃இரு வார்த்தைகள் (சொல்வதற்கு) நாவுக்கு மிக இலகுவானவை, இறைவனின் தராசில் மிக கனமானவை, இறைவனிடம் மிக விருப்பத்திற்குரியவை (அவ்விரு வார்த்தை) சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

      (புகாரி, முஸ்லிம்)

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️ நன்மையை ஏவி,*
            *தீமையைத் தடுத்தல்☄️*
   
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُم ۚ مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ

_*🍃நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.*_

*📖திருக்குர்ஆன்  3:110📖*

*🏮🍂நாவு மனிதனை சுவர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ கொண்டு செல்லக்கூடிய உறுப்பு என்பதைத் அறிந்துக் கொண்டோம். ஆகவே நரகம் செல்லக்கூடிய (சொல்) செயல்களிலிருந்து நம் நாவைப்பாதுகாத்து சுவர்க்கம் செல்லக்கூடிய (சொல்) செயல்களைச் செய்து நாவினால் சுவர்க்கம் செல்ல நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

*தொடர் முடிந்தது*
                    ⤵️⤵️⤵️
              *அல்ஹம்துலில்லாஹ்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment