பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, December 22, 2020

நன்மைகளை - 4

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🥀 நன்மைகளை அள்ளிக் 🥀*
                               ⤵️ 
              *🥀 கொள்வோம் 🥀*

                *✍🏻.... தொடர் { 04 }*

*🌺இரு மடங்கு*
                   *நன்மைகள்🌺*

*🏮🍂பத்து முதல் எழுநூறு மடங்கு வரை தருகிற நன்மையை சிலருக்கு, சில காரியங்களுக்கு அல்லாஹ் இரண்டு மடங்கு பெருக்கித் தருகிறான். இதற்குப் பின்வரும் காரியத்தை உதாரணமாக கூறலாம்.*

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ: سَمِعْتُ زُرَارَةَ بْنَ أَوْفَى، يُحَدِّثُ عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، *عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «مَثَلُ الَّذِي يَقْرَأُ القُرْآنَ، وَهُوَ حَافِظٌ لَهُ مَعَ السَّفَرَةِ الكِرَامِ البَرَرَةِ، وَمَثَلُ الَّذِي يَقْرَأُ، وَهُوَ يَتَعَاهَدُهُ، وَهُوَ عَلَيْهِ شَدِيدٌ فَلَهُ أَجْرَانِ»*

_*🍃குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதி வருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
                 *ஆயிஷா(ரலி)*

     *📚நூல்: புகாரி (4937)📚*

*🏮🍂திருக்குர்ஆனை ஓதும் போது ஒரு எழுத்துக்கு அல்லாஹ் பத்து நன்மைகளை வழங்குகிறான். இது பற்றி நபியவர்கள் நமக்கு தெளிவுபடுத்தி உள்ளார்கள். ஒருவர் குர்ஆனை ஓதுவதற்கு முயற்சிக்கிறார்.* சிரமாக இருந்தாலும் துவண்டு விடாமல் தொடர்ந்து ஓதுகிறார்.

*🏮🍂இவர் குர்ஆனில் ஒவ்வொரு எழுத்தை படிக்கும் போதும் இருபது நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான்.இவ்வாறு நன்மைகளை இரண்டு மடங்காகப் பெற்றுத் தரும் காரியங்கள் பற்றி மார்க்கத்தில் நிறைய கூறப்பட்டுள்ளன.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment