*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🌺மறுமையில் அல்லாஹ்*
*பார்க்காத பேசாத*
*நபர்கள்🌺*
*✍🏻... தொடர் ➖0️⃣9️⃣*
*🗣️பொய் சொல்லும்*
*🤴 அரசன் 🤴*
*🏮🍂சிறிய சிறிய விஷயங்களுக்கு எல்லாம் இன்று நாம் சாதாரணமாக பொய் சொல்கின்றோம். நல்ல வார்த்தைகளைக் கூறுவதைப் போல் பொய்களை அள்ளி வீசுகின்றோம். நாம் பேசும் பேச்சில் உண்மைகளை விடப் பொய்யே மிகைத்திருக்கிறது. இதை நாம் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை.* ஆனால் இவ்வாறு பொய் சொல்வது நயவஞ்சகர்களின் குணம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
حَدَّثَنَا سُلَيْمَانُ أَبُو الرَّبِيعِ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا نَافِعُ بْنُ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ "*
_*🍃‘நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய்யையே பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். அவனை நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙️அறிவிப்பாளர்:*
*அபூஹுரைரா (ரலி)*
*📚நூல்: புகாரீ 33📚*
*🏮🍂நாம் சொல்லும் பொய்கள் நம்மை நரகத்திற்குக் கொண்டு சென்று விடும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.*
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، *عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا، وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ، حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا "*
_*🍃‘உண்மை நிச்சயமாக நன்மைக்கு வழி காட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழி காட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளராக ஆகி விடுவார். பொய் நிச்சயமாக தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யர் எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙️அறிவிப்பாளர்:*
*அப்துல்லாஹ் பின்*
*மஸ்ஊத் (ரலி)*
*📚நூல்: புகாரீ 6094📚*
*🏮🍂சாதரண மக்களே பொய் சொல்லக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்.*
*🏮🍂ஒரு நாட்டின் அரசன் குடி மக்களில் யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் குளிர வைத்து காரியம் சாதிக்க வேண்டிய நெருக்கடியும் அவனுக்குக் கிடையாது.* அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் அவன் பொய் சொல்லத் தேவையில்லை. *இந்நிலையில் அவன் பொய் சொல்வது, பொய் சொல்வதில் அவனுக்கு அதிகம் துணிவு இருப்பதைக் காட்டுகிறது. பல நிர்ப்பந்தங்கள் உள்ள சாதாரண மக்கள் கூட பொய் சொல்லக் கூடாது என்றிருக்கும் போது, எந்த நிர்ப்பந்தமும் இல்லாத ஓர் அரசன் பொய் சொல்வது அதிக குற்றமாக உள்ளது. இந்தக் காரணத்தால் இவனும் இந்த மோசமான நிலையை அடைகின்றான்.*
*وَمَلِكٌ كَذَّابٌ وَعَائِلٌ مُسْتَكْبِرٌ "*
_*🍃‘மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். (அவர்களில் ஒருவன்) பொய் கூறும் அரசன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙️அறிவிப்பாளர்:*
*அபூஹுரைரா (ரலி)*
*📚நூல்: முஸ்லிம் 172📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment