பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 9, 2020

மறுமையில் - 10

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🌺மறுமையில் அல்லாஹ்*
             *பார்க்காத பேசாத*
                           *நபர்கள்🌺*

           *✍🏻... தொடர் ➖1️⃣0️⃣*

              *🥀 இறுதி பாகம் 🥀*

*👑 பெருமையடிக்கும் ஏழை 👑*

*🏮🍂பொதுவாக தற்பெருமை கொள்வதற்குக் காரணமாக அமைவது செல்வாக்கு தான். அந்தச் செல்வாக்கு இல்லாத ஏழை தற்பெருமை கொள்கின்றான் என்றால் அவன் வறட்டு கவுரவம் கொள்கின்றான் என்றே பொருள். ஆக, சந்தர்ப்ப சூழ்நிலையைக் கூட காரணம் காட்ட முடியாத இவன் இப்பாவத்தில் ஈடுபடுவதற்குக் காரணம், அல்லாஹ் விஷயத்தில் அவனுடைய அலட்சியப் போக்கு தான். எனவே இவன் மீதும் அல்லாஹ் கோபம் கொள்கிறான்.*

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏‏ ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يُزَكِّيهِمْ - قَالَ أَبُو مُعَاوِيَةَ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ - وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ شَيْخٌ زَانٍ وَمَلِكٌ كَذَّابٌ وَعَائِلٌ مُسْتَكْبِرٌ ‏"*

_*🍃‘மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். பெருமையடிக்கும் ஏழை (அவர்களில் ஒருவன்)’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பாளர்:*
             *அபூஹுரைரா (ரலி)*

    *📚நூல்: முஸ்லிம் 172📚*

*🏮🍂இவை தவிர பெற்றோரை விட்டு விலகியவன், பிள்ளையை விட்டு விலகியவன், நன்றி மறந்தவன் ஆகியோரையும் அல்லாஹ் பார்க்க மாட்டான், பேச மாட்டான், தூய்மைப்படுத்த மாட்டான் என்று கூறும் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமானதாகும்.*

*🏮🍂‘எனவே இதுவரை பட்டியளிட்ட அனைத்து விஷயங்களிலும் தவிர்த்துக் கொண்டு மறுமையில் அல்லாஹ்வின் திருமுகத்தை பார்க்கின்ற பாக்கியம் உடைய நன் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புறிவானாக’!*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

*தொடர் முடிந்தது*
                    ⤵️⤵️⤵️
              *அல்ஹம்துலில்லாஹ்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment