*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🌺மறுமையில் அல்லாஹ்*
*பார்க்காத பேசாத*
*நபர்கள்🌺*
*✍🏻... தொடர் ➖0️⃣8️⃣*
*🔥விபச்சாரம் செய்யும்*
*முதியவன் 🔥*
*🏮🍂பொதுவாக வயோதிகம் என்பது அனைத்தையும் அனுபவித்து ஆசை உணர்வுகள் எல்லாம் அடங்கி விட்ட நிலையாகும். ஒரு வாலிபனுக்கு இருக்கும் ஆசை வயோதிகனுக்கு இருக்காது.* அவனைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவனிடத்தில் அதிகமாகவே இருக்கும். *இந்தக் கால கட்டத்தில் அவன் விபச்சாரம் செய்வது அல்லாஹ்வின் பயம் இல்லாமல் துணிந்து பாவம் செய்வதைக் காட்டுகிறது. எனவே தான் அல்லாஹ் இவனுக்கு இந்தத் தண்டனையை வழங்குகிறான்.*
*🏮🍂இளைய வயதினர் விபச்சாரம் செய்தாலும் அவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு. ஆனால் வயது முதிர்ந்த நிலையில், விபச்சாரம் செய்வதற்குத் தகுதியற்ற நிலையில், தவிர்ந்து கொள்ள முடியும் என்ற நிலையில் இந்தப் பாவத்தைச் செய்வதால் கடும் தண்டனை விபச்சாரம் செய்யும் முதியவனுக்கு கிடைக்கிறது.*
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يُزَكِّيهِمْ - قَالَ أَبُو مُعَاوِيَةَ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ - وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ شَيْخٌ زَانٍ* وَمَلِكٌ كَذَّابٌ وَعَائِلٌ مُسْتَكْبِرٌ "
_*🍃‘மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். (அவர்களில் ஒருவன்) விபச்சாரம் செய்யும் கிழவன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙️அறிவிப்பாளர்:*
*அபூஹுரைரா (ரலி)*
*📚நூல்: முஸ்லிம் 156📚*
*🏮🍂ஒரு முஸ்லிம் விபச்சாரம் செய்யும் நேரத்தில் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகின்றான். அந்நேரத்தில் அவனுக்கு மரணம் சம்பவித்தால் காஃபிராக இருக்கும் நிலையிலே அவன் மரணிக்கின்றான்.* அவன் முன்பு ஈமான் கொண்டதற்கு எந்தப் பலனும் இருக்காது. காலமெல்லாம் பாவியாக இருந்து விட்டு மரண வேளையில் *திருந்தி சொர்க்கத்திற்குச் செல்லும் மனிதர்களும் இருக்கிறார்கள். காலமெல்லாம் நல்லமல்களைச் செய்து விட்டு இறுதி நேரத்தில் பாவியாக மரணிக்கும் துர்பாக்கியவான்களும் உண்டு.*
*🏮🍂நமது இறுதி நிலையே நம்மை சுவர்க்கவாதியாகவோ அல்லது நரக வாதியாகவோ நிர்ணயிக்கிறது. ஆக இந்தக் கொடிய பாவத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது நமது முதல் வேலையாக இருக்க வேண்டும்.*
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنَا عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، *عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهْوَ مُؤْمِنٌ "* وَعَنْ سَعِيدٍ وَأَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ إِلاَّ النُّهْبَةَ
_*🍃‘விபச்சாரம் செய்பவன், விபச்சாரம் புரியும் போது முஃமினாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும் மது அருந்தும் போது ஒருவன் முஃமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகின்ற போது முஃமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க (பிறரது பொருளை அபகரித்து) கொள்ளை யடிக்கும் போது முஃமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙️அறிவிப்பாளர்:*
*அபூஹுரைரா (ரலி)*
*📚நூல்: புகாரீ 2475📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment