பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 2, 2020

மறுமையில் - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🌺மறுமையில் அல்லாஹ்*
             *பார்க்காத பேசாத*
                           *நபர்கள்🌺*

           *✍🏻... தொடர் ➖0️⃣3️⃣*

*🌺பொய் சத்தியம் செய்து*
             *வியாபாரம் செய்பவன்*

*🏮🍂இன்று பொய் இல்லாமல் வியாபாரம் கிடையாது என்று கூறும் அளவுக்குப் பொய் வியாபாரத்தில் கலந்து விட்டது. உண்மையைக் கூறி, நியாயமாக வியாபாரம் செய்பவன் பிழைக்கத் தெரியாதவன் என்றும் பொய் சொல்லி ஏமாற்றுபவன் அறிவாளி என்றும் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்நியாயமாக பிழைப்பவனுக்குக் குறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் நிறைவான பரக்கத்தை வழங்குகிறான்.* அநியாயமாகப் பிழைப்பவனுக்கு நிறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் பரக்கத்தை அழித்து விடுகின்றான்.

حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ قَتَادَةُ أَخْبَرَنِي عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، *قَالَ سَمِعْتُ حَكِيمَ بْنَ حِزَامٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏‏ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَذَبَا وَكَتَمَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا ‏"*

_*🍃விற்பவரும் வாங்குபவரும் பிரியும் வரை (வியாபாரத்தை முறித்துக் கொள்ளும்) உரிமை படைத்திருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மையைக் கூறி (பொருளின் குறையைத்) தெளிவு படுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் செய்யப்படும். அவர்கள் பொய் கூறி (பொருளின் குறையை) மறைத்தால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் நீக்கப்படும்.*_

*🎙️அறிவிப்பாளர்:*
            *ஹகீம் பின்*

                    *ஹிஸாம் (ரலி),*

          *📚 நூல்: புகாரீ 2110 📚*

*🏮🍂வியாபாரிகள் அனைவரும் பொய் சொல்வார்கள் என்பதை மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளார்கள். வியாபாரி விலை 50 ரூபாய் என்று கூறினால் வாங்குபவர் 30 ரூபாய்க்குத் தாருங்கள் என்று கேட்கிறார். மக்கள் யாரும் அவர்கள் கூறுவது உண்மை என்று நம்பத் தயாராக இல்லை.* அந்தளவுக்கு வியாபாரத்தில் பொய்யும் புரட்டும் நிறைந்து விட்டது.

*🏮🍂இதைப் போன்று சில நேரங்களில் கூடுதல் இலாபம் பெற வேண்டும் என்பது போன்ற எண்ணத்தில் வாங்குபவரை நம்ப வைப்பதற்காக, கூடுதல் விலை கொடுத்து வாங்கியதாக அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு விற்பவர்கள் இருக்கிறார்கள்.* வாங்குபவரும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறியதால் நம்பி வாங்கிச் சென்று விடுவார். ஆனால் *மறுமையில் இதற்குரிய தண்டனையை வியாபாரி யோசித்துப் பார்ப்பதில்லை.அல்லாஹ் பார்க்காத பேசாத கடும் தண்டனைக்குரிய நபர்களில் இவ்வாறு பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்தவனும் ஒருவனாவான்.*

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، *عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏‏ ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ رَجُلٌ حَلَفَ عَلَى سِلْعَةٍ لَقَدْ أَعْطَى بِهَا أَكْثَرَ مِمَّا أَعْطَى وَهْوَ كَاذِبٌ،*

_*🍃மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். (ஒருவன் தன் பொருளை அதிக விலைக்கு) விற்பதற்காக வாடிக்கையாளர் கொடுக்கும் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன்.*_

*🎙️அறிவிப்பாளர்:*
              *அபூஹுரைரா (ரலி)*

        *📚நூல்: புகாரீ 2369📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment