*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 ஜின்களும் 🔥*
⤵
*🔥ஷைத்தான்களும்🔥*
*✍🏻...... தொடர் ➖2⃣2⃣*
*☄ஜின்களை*
*வசப்படுத்த முடியுமா❓*
*🏮🍂ஜின்களை வசப்படுத்த முடியும் என்று கூறி பலர் பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள். நாம் நினைக்கின்ற காரியங்களை ஜின்களால் செய்து கொள்ள முடியும் என்ற தவறான எண்ணம் தான் மக்கள் ஏமாறுவதற்குக் காரணமாகும்.*
*🏮🍂இறைவன் நமக்கு வழங்கிய அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார்த்தால் ஜின்களை மனிதனால் ஒருபோதும் வசப்படுத்த முடியவே முடியாது என்பதை சந்தேகமற புரியலாம்.*
*🏮🍂ஜின்கள் என்பவர்கள் மிருகங்களை போன்று பகுத்தறிவு வழங்கப்படாதவர்கள் இல்லை. மனிதர்களைப் போன்று பகுத்தறிவு வழங்கப்பட்டவர்களாவர். மனித ஆற்றலோடு ஜின்களுக்கு வழங்கப்பட்ட ஆற்றலை ஒப்பிட்டுப் பார்த்தால் ஜின்களின் ஆற்றல் பன்மடங்கு உயர்ந்ததும் வியக்கத்தக்கதுமாகும்.*
*🏮🍂மனிதனை விட வலுமையான படைப்பான ஜின்களை பலவீனமான மனிதனால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பதை யோசித்தால் ஜின்களை வசப்படுத்துவதாக கூறுவது வடிகட்டிய பொய் என்பதை அறியலாம்.*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄சுமைலமான் நபிக்கு*
*வழங்கப்பட்ட தனிச்சிறப்பு*
*🏮🍂ஜின்களை மனிதர்களால் வசப்படுத்த முடியாது. இறைவன் சுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டுமே ஜின்களை வசப்படுத்திக் கொடுத்திருந்தான் என்று திருக்குர்ஆனும் திருநபி (ஸல்) அவர்களின் போதனையும் கூறுகிறது.*
*🏮🍂இறைவன் வசப்படுத்திக் கொடுத்த ஒரே காரணத்தால் தான் ஜின்கள் சுலைமான் நபிக்கு கட்டுப்பட்டு நடந்தன. இறைவன் வசப்படுத்தித் தராமல் சுயமாக ஜின்களை வசப்படுத்த முடியுமா என்றால் இது சுலைமான் (அலை) அவர்களாலும் முடியாது.*
*🏮🍂காற்றை வசப்படுத்துவது எறும்புகளின் பாஷையை அறிவது இதுவெல்லாம் எந்த மனிதனாலும் முடியாத காரியமாகும். ஆனால் இவற்றை இறைவன் சுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டும் வழங்கினான். சுலைமான் நபிக்கு ஜின்கள் கட்டுப்பட்டு நடந்ததும் இந்த அடிப்படையில் தான்.*
_*🍃“என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்” எனக் கூறினார். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப் படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது. ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம். “இது நமது அருட்கொடை! கணக்கின்றி மற்றவருக்குக் கொடுக்கலாம்! அல்லது நீரே வைத்துக் கொள்ளலாம்!” (என்று கூறினோம்.)*_
*📖 அல்குர்ஆன் (38 : 35.36.37.38.39)*
*🏮🍂எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு என்று சுலைமான் (அலை) பிரார்த்தனை செய்கிறார்கள்.* சுலைமான் (அலை) அவர்களுக்குப் பிறகு வேறு யாரருக்கும் *ஜின்களை வசப்படுத்தும் ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை என்பதை அவர்கள் கேட்ட பிரார்த்தனை* ஆணித்தரமாக விவரிக்கிறது.
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment