*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 ஜின்களும் 🔥*
⤵
*🔥ஷைத்தான்களும்🔥*
*✍🏻...... தொடர் ➖1⃣2⃣*
*☄ ஜின்களின் இருப்பிடம் ☄*
*🏮🍂மனிதர்களைப் போலவே ஜின்களும் பூமியில் ஆங்காங்கே வசிக்கின்றன. குறிப்பாக ஓடைகள் மற்றும் மலைக்கணவாய்களில் தங்கி இருக்கின்றன.*
_அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :_
_*🍃வயோதிகராக இருந்த அப்துர் ரஹ்மான் பின் கம்பஷ் (ரலி) அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தை அடைந்தவரா❓ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்று கூறினார்கள். ஷைத்தான்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (தாக்குவதற்காக) நெருங்கிய போது நபியவர்கள் என்ன செய்தார்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் அந்த இரவில் ஷைத்தான்கள் ஓடைகளிலிருந்தும் மலைக் கணவாய்களிலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி (தாக்குவதற்காக) விரைந்தன. அவர்களில் ஒரு ஷைத்தானுடைய கையில் தீப்பந்தம் இருந்தது. அதன் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தை கரிப்பதற்கு அந்த ஷைத்தான் நினைத்தது. அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானிலிருந்து இறங்கி வந்து முஹம்மதே நான் கூறுவதை நீங்களும் கூறிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும் வானிலிருந்து இறங்குபவற்றின் தீங்கிலிருந்தும் வானில் ஏறுபவற்றின் தீங்கிலிருந்தும் இரவு பகலில் ஏற்படும் குழப்பதின் தீங்கிலிருந்தும் நன்மையை விளைவிக்கும் நட்சத்திரத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து தாரகைகளின் தீங்கிலிருந்தும் அளவற்ற அருளாளனே (உன்னிடம்) பாதுகாப்புத் தேடுகிறேன் என்று ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். உடனே ஷைத்தான்களின் நெருப்பு அனைக்கப்பட்டு பாக்கியமும் உயர்வும் மிக்க அல்லாஹ் அவர்களை தோல்வியுறச் செய்தான்.*_
*📚நூல் : அஹ்மத் (14914)📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment