பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, December 30, 2019

ஜின்களும் - 20

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖2⃣0⃣*

  *☄ ஒட்டுக்கேட்ட ஜின்கள் ☄*

*🏮🍂பின்வரும் வசனங்களும் ஹதீஸ்களும் வானுலக ஆட்சியைப் பற்றிக் கூறுகின்றன. வானவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பற்றிப் பேசும் போது, ஜின்கள் வானத்தின் அருகே சென்று அங்கு பேசுவதை செவியுறக் கூடியவர்களாக இருந்தனர்.* இறைவனும் இதைத் தடுக்காமல் இருந்தான்.
நபிகள் நாயகம் அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட பிறகு *இவ்வாறு ஒட்டுக் கேட்பதை விட்டும், வானுலக இரகசியத்தை செவியேற்பதை விட்டும் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டனர்.*

*وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ وَمَا يَنبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ*

_*🍃இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.*_

*📖 அல்குர்ஆன் (26 : 210) 📖*

_*🍃வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.*_

*📖 அல்குர்ஆன் (72 : 8) 📖*

*🏮🍂ஜின்கள் ஒட்டுக்கேட்பதை விட்டும் தடுக்கப்பட்டதால் மறைவான விஷயங்கள் எதுவும் அவர்களால் அறிந்துகொள்ள முடியாது. இதை ஜின்களே கூறுகின்றன.*

*وَأَنَّا لَا نَدْرِي أَشَرٌّ أُرِيدَ بِمَن فِي الْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا*

_*🍃பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா❓ அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர் வழியை நாடியிருக்கிறானா❓ என்பதை அறிய மாட்டோம்.*_

*📖 அல்குர்ஆன் (72 : 10) 📖*

ﺣﺪﺛﻨﺎ ﻣﻮﺳﻰ ﺑﻦ ﺇﺳﻤﺎﻋﻴﻞ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﻋﻮاﻧﺔ، ﻋﻦ ﺃﺑﻲ ﺑﺸﺮ، ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺟﺒﻴﺮ، *ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ، ﻗﺎﻝ: اﻧﻄﻠﻖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﻃﺎﺋﻔﺔ ﻣﻦ ﺃﺻﺤﺎﺑﻪ ﻋﺎﻣﺪﻳﻦ ﺇﻟﻰ ﺳﻮﻕ ﻋﻜﺎﻅ ﻭﻗﺪ ﺣﻴﻞ -[161]- ﺑﻴﻦ اﻟﺸﻴﺎﻃﻴﻦ ﻭﺑﻴﻦ ﺧﺒﺮ اﻟﺴﻤﺎء، ﻭﺃﺭﺳﻠﺖ ﻋﻠﻴﻬﻢ اﻟﺸﻬﺐ، ﻓﺮﺟﻌﺖ اﻟﺸﻴﺎﻃﻴﻦ، ﻓﻘﺎﻟﻮا: ﻣﺎ ﻟﻜﻢ؟ ﻓﻘﺎﻟﻮا: ﺣﻴﻞ ﺑﻴﻨﻨﺎ ﻭﺑﻴﻦ ﺧﺒﺮ اﻟﺴﻤﺎء، ﻭﺃﺭﺳﻠﺖ ﻋﻠﻴﻨﺎ اﻟﺸﻬﺐ، ﻗﺎﻝ: ﻣﺎ ﺣﺎﻝ ﺑﻴﻨﻜﻢ ﻭﺑﻴﻦ ﺧﺒﺮ اﻟﺴﻤﺎء ﺇﻻ ﻣﺎ ﺣﺪﺙ، ﻓﺎﺿﺮﺑﻮا ﻣﺸﺎﺭﻕ اﻷﺭﺽ ﻭﻣﻐﺎﺭﺑﻬﺎ، ﻓﺎﻧﻈﺮﻭا ﻣﺎ ﻫﺬا اﻷﻣﺮ اﻟﺬﻱ ﺣﺪﺙ، ﻓﺎﻧﻄﻠﻘﻮا ﻓﻀﺮﺑﻮا ﻣﺸﺎﺭﻕ اﻷﺭﺽ ﻭﻣﻐﺎﺭﺑﻬﺎ، ﻳﻨﻈﺮﻭﻥ ﻣﺎ ﻫﺬا اﻷﻣﺮ اﻟﺬﻱ ﺣﺎﻝ ﺑﻴﻨﻬﻢ ﻭﺑﻴﻦ ﺧﺒﺮ اﻟﺴﻤﺎء، ﻗﺎﻝ: ﻓﺎﻧﻄﻠﻖ اﻟﺬﻳﻦ ﺗﻮﺟﻬﻮا ﻧﺤﻮ ﺗﻬﺎﻣﺔ ﺇﻟﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻨﺨﻠﺔ، «ﻭﻫﻮ ﻋﺎﻣﺪ ﺇﻟﻰ ﺳﻮﻕ ﻋﻜﺎﻅ ﻭﻫﻮ ﻳﺼﻠﻲ ﺑﺄﺻﺤﺎﺑﻪ ﺻﻼﺓ اﻟﻔﺠﺮ ﻓﻠﻤﺎ ﺳﻤﻌﻮا اﻟﻘﺮﺁﻥ ﺗﺴﻤﻌﻮا ﻟﻪ»، ﻓﻘﺎﻟﻮا: ﻫﺬا اﻟﺬﻱ ﺣﺎﻝ ﺑﻴﻨﻜﻢ ﻭﺑﻴﻦ ﺧﺒﺮ اﻟﺴﻤﺎء، ﻓﻬﻨﺎﻟﻚ ﺭﺟﻌﻮا ﺇﻟﻰ ﻗﻮﻣﻬﻢ، ﻓﻘﺎﻟﻮا: ﻳﺎ ﻗﻮﻣﻨﺎ {ﺇﻧﺎ ﺳﻤﻌﻨﺎ ﻗﺮﺁﻧﺎ ﻋﺠﺒﺎ، ﻳﻬﺪﻱ ﺇﻟﻰ اﻟﺮﺷﺪ ﻓﺂﻣﻨﺎ ﺑﻪ ﻭﻟﻦ ﻧﺸﺮﻙ ﺑﺮﺑﻨﺎ ﺃﺣﺪا} [اﻟﺠﻦ: 2] " ﻭﺃﻧﺰﻝ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ ﻋﻠﻰ ﻧﺒﻴﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: {ﻗﻞ ﺃﻭﺣﻲ ﺇﻟﻲ ﺃﻧﻪ اﺳﺘﻤﻊ ﻧﻔﺮ ﻣﻦ اﻟﺠﻦ} [اﻟﺠﻦ: 1] ﻭﺇﻧﻤﺎ ﺃﻭﺣﻲ ﺇﻟﻴﻪ ﻗﻮﻝ اﻟﺠﻦ "*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் “உக்காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்களைத் தடுக்கப் பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்கüடம்) திரும்பி வந்தன. அப்போது தலைவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், “வானகத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டு விட்டது; எங்கள் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன” என்று பதிலளித்தனர். “புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்கவேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்துவிட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்” என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.*_

_*“திஹாமா’ எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்தபோது “உக்காழ்’ சந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “நக்லா’ எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு “ஃபஜ்ரு’த் தொழுகையை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார்கள்.அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்ட போது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) “வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்” என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று, “எங்கள் கூட்டத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர் வழியைக் காட்டுகின்றது. எனவே நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒருபோதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்” என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, “(நபியே!) நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்…” என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருளினான்.*_

_*ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி “வஹி’யின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.*_

*🎙அறிவிப்பவர் :*
             *இப்னு அப்பாஸ் (ரலி)*

*📚 நூல் : புகாரி (4921) 📚*

*🏮🍂மேலுள்ள ஆதாரங்கள் ஒட்டுக்கேட்பதை விட்டும் ஜின்கள் தடுக்கப்பட்டுவிட்டனர் என்று தெளிவாக எடுத்துரைக்கிறது.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment