பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 11, 2019

ஈமானை புதுப்பிக்கும் வழி என்ன❓❓

*🍄🍄🍄மீள் பதிவு🍄🍄🍄* 

*📚 📚 📚 ஈமானை புதுப்பிக்கும் வழி என்ன❓❓❓ஒரு இஸ்லாமிய பார்வையில்📚📚📚* 

 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈* 

 *📚📚📚அல்குர்ஆன் மற்றும் 📚 📚 📚 📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇👇👇* 

 *👉 👉 👉 எவ்வளவு தான் இருந்தாலும் ஈமான்* *கூடிகுறைகிறது.அதிகமாக* *ஷைத்தானிய எண்ணங்களில்* *மூழ்கடிக்கப்படுகிறோம்,ஈமானை புதுப்பிக்கும் வழி என்ன❓❓❓*

உலகில் உள்ள பெரும்பாலான மூஃமீனுக்கும் பொதுவாக காணப்படும் விஷயங்களில் ஈமான் கூடி குறையும் பிரச்சனை உள்ளது.

  பொதுவாக நமக்கு சோதனைகள் ஏற்படும் சமயங்களில்,ஏதேனும் திடுக்கிடும் விபத்துகளை பற்றி கேள்விப் படும்போது,ரமலான் மாதங்களில் ஈமான் சற்று கூடுவதையும்,
சாதாரண சமயங்களில் ஈமானிய சிந்தனை குறைவதையும் அறியலாம்.

  இது இயற்கையான ஒன்றுதான் எனினும் மரணத்தை எதிர்நோக்கியும்,கியாமத்து நாளை எண்ணிப் பார்த்தும் இருந்தால் ஈமானிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

மூஃமீன்களுக்கு இந்த உலகம் ஒரு சிறைச்சாலை ஆகும்,சிறைச்சாலயில் சில பல கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும்,சுதந்திரமாக செயல்பட இயலாது, என்பதை நினைவில் வைத்தாலே உலக ஆசைகளை கட்டுப்படுத்த இயலும்.
மேலும் உலகத்தில் நாம் சாதாரண வழிப்போக்கர்கள்,இதில் எப்போது வேண்டுமானால் செல்ல தயாராக இருக்க வேண்டி வரும் என்பதை நினைவில் அவ்வப்போது கொண்டு வந்தாலே ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து விடுபடலாம்.

  ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்கள்தாம்,ஆனால் அந்த தவறிலிருந்து விடுபட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி மீண்டுவிட வேண்டும்.

ஒவ்வொரு முறை ஈமானில் உறுதி குறையும்போதும் படைத்த இறைவன் நம்மை எல்லா நிலைகளிலும் கண்கானித்துக் கொண்டிருக்கின்றான் என சிந்திக்கும் மனிதன் தவறுகள் செய்வதிலிருந்தும், தனது இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்தும் தன்னை தற்காத்துக் கொண்டு மறுமை வெற்றியை நோக்கி விரைந்து செல்கிறான்.

மறைவான நிலையிலும், வெளிப்படையான நிலையிலும் மனிதன் இறை விருப்பத்திற்க்கு எதிரான காரியங்கள் செய்வதை விட்டும் இந்த தஃக்வா அவனை காக்கின்றது. அதன் மூலம் நிரந்தரமான வெற்றியின் பக்கம் அவனை கூட்டிச் செல்கிறது.

அல்லாஹ்வின் பாதையில் தம்முடைய வாழ்க்கையை சீராக்கிக் கொள்ளும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இவ்வுலக சோதனை என்பது நிச்சயம். அதனை மறுமை பயன்களுக்காக சகித்துக் கொள்ளும் சகிப்புத்தன்மையே பக்குவப்பட்ட ஈமானுக்கு உகந்ததாகும். மறுமை வெற்றிக்கும் உரியதாகும்.

சோதனைகளின் போது இறைவனை நினைவு கூறுவதை போலவே சந்தோஷத்தின் போதும் நினைவு கூறினால்,வழி மாறுவதிலிருந்து பாதுகாக்கப்படுவோம்.

இதற்கு தான் இஸ்லாம் வகுத்திருக்கும் அருமையான வழி தொழுகை,ஒவ்வொரு தொழுகையின் போதும் அல்லாஹ்வை ஆழமாக நினைவு கூறுவதால் ஈமான் உறுதிப்படும்.

நோன்பு அவ்வப்பொழுது வைப்பதன் மூலமும் பாட்டரி சார்ஜ் ஆவது போல் உள்ளம் தூய்மை படுத்தப்படும்.

கோபத்தின் போதும்,அச்சத்தின் போதும் ஷைத்தான் ஊசலாடி உள்ளத்தை கெடுப்பான். இதுபோன்ற சமயத்தில் நெருப்பை நீரை கொண்டு அனைக்கும் விதமாக உளூ செய்து கோபத்தை தணிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் நேசத்தை பெறுவதற்கு  தொழுகை,நோன்பில் மட்டும்தான் என்றில்லை,.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உதாரணமாக கணவன், குழந்தைகளை கவனிப்பது, உறவினர்களை நேசிப்பது,அண்டை வீட்டாருடன் நட்பு,நோயாளியை சென்று பார்ப்பது,தாய் தந்தையை அழகிய முறையில் கவனிப்பது,சுத்தமாக நாம் இருப்பது, சுற்று புறத்தை சுத்தமாக வைப்பது,பொது சேவை இப்படி நாம் வாழும் நம் வாழ்க்கையில் அனைத்து செயல்களிலும் உள்ளது. இஸ்லாம் கூறிய வழியில் நம் ஒவ்வொரு செயல்களை அமைத்தாலே ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

ஒரு வேலையும் செய்யும்போதும் அல்லாஹ்வை நினைவு கூறுவதின்(திக்ரு)மூலம் ஈமான் உறுதிப்படும்.

மனம் ஷைத்தானால் ஊசலாடும்போது அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரி மீண்டால் வாழ்க்கை முழுதும் ஈமானோடு இருப்பது உறுதி.

எல்லா நிலைகளிலும் ஏற்றுக்கொண்ட ஈமானில் உறுதியாக இருப்பது மிகவும் அவசியமானதாகும். உறுதியான நம்பிக்கைக் கொண்டு, அதில் நிலையாக நிற்க கூடியவர்களையே அல்லாஹ் வெற்றியாளர்கள் என கூறுகிறான்.

 *📚📖 குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள்.* 

📘 அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகி றது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான்.

 *(அல்குர்ஆன் 13:17)* 

📘
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَنَبْلُوكُم بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ  ﴿21:35﴾

 *அல்குர்ஆன் 21:35.*

 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

📘 *6479* . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  (தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு போருக்கு அல்லாஹ் தன்னுடைய (அரியாசத்தின்) நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். (தனிமையில்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடிப்பவர் (அவர்களில் ஒருவராவார்.)  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 *ஸஹீஹ் புகாரி 6479* *அத்தியாயம் : 81* . நெகிழ்வூட்டும் அறவுரைகள்

📘 *7405* . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:  என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 *ஸஹீஹ் புகாரி 7405 அத்தியாயம் : 97.* ஓரிறைக் கோட்பாடு

📘 *6416* . அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு“ என்றார்கள்.  (அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)  “நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு“ என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.
 *9 ஸஹீஹ் புகாரி 6416 அத்தியாயம் : 81.* நெகிழ்வூட்டும் அறவுரைகள்

📘 *6417* . அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.  (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:  (நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம் தான் அவனைச் “சூழ்ந்துள்ள“ அல்லது “சூழ்ந்து கொண்டுவிட்ட“ வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும். 11
 *ஸஹீஹ் புகாரி 6416 அத்தியாயம் : 81.* நெகிழ்வூட்டும் அறவுரைகள்

📘 *6436* . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.  என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

 *ஸஹீஹ் புகாரி 6436 அத்தியாயம் : 81.* நெகிழ்வூட்டும் அறவுரைகள்

📘 *6485* . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 *ஸஹீஹ் புகாரி 6485 அத்தியாயம் : 81.* நெகிழ்வூட்டும் அறவுரைகள்

📘 *6487* . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 *ஸஹீஹ் புகாரி 6487 அத்தியாயம் : 81.* நெகிழ்வூட்டும் அறவுரைகள்

📘
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ  ﴿3:200﴾

 *அல்குர்ஆன் 3:200* .

 முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!

📘 *6664*      
                              
என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை , அவர்கள் அதன்படி செயல்படாத வரை , அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை) மன்னித்துவிடுகிறான்.

 *இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.* 

 *நூல்: புகாரி 6664* 

📘 *4061*
 யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக மறுக்கிறாரோ அவர் தான் ஈமானை புரணப்படுத்திக் கொண்டவர்.
 *அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி)* 
 *ஆதாரம்: அபூதாவூத்(4061)* 

📘 *3276* . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, “இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?“ என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், “உன் இறைவனைப் படைத்தவர் யார்?“ என்று கேட்கிறான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 *ஷஹீஹ் புகாரி 3276 அத்தியாயம் : 59.* படைப்பின் ஆரம்பம்

📘 *3285* . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும்போது ஷைத்தான் சத்தத்துடன் காற்றைவிட்டுக் கொண்டு திரும்பி ஓடி விடுகிறான். பாங்கு சொல்லி முடித்து விடும்போது திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் திரும்பி ஒடி விடுகிறான். இகாமத் சொல்லி முடித்து விடும்போது திரும்பி வருகிறான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதனின் உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, “இப்படி இப்படியெல்லாம் நினைத்துப் பார்” என்று கூறுகிறான். (அதன் விளைவாக) தொழுகையாளிக்கு நாம் மூன்று ரக்அத்துகள் தொழுதோமா, நான்கு ரக்அத்துகள் தொழுதோமா என்று தெரியாமல் போய் விடுகிறது. மூன்று ரக்அத்துக்கள் தொழுதோமா, நான்கு ரக்அத்துக்கள் தொழுதோமா என்று தொழுகையாளிக்குத் தெரியாமல் போய்விட்டால் அவர் (மறதிக்குப் பரிகாரமாக) சஹ்வுடைய இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 *ஷஹீஹ் புகாரி 3285 அத்தியாயம் : 59.* படைப்பின் ஆரம்பம்

எனவே மேலே 🔝 சொல்லப்பட அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களை நம்பி இந்த உலகத்திலும் நாளை மறுமையில் நல்ல வாழ்க்கை அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருப்போமாக 


அல்லாஹுவே மிகவும் அறிந்தவன் 

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment