பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, December 31, 2019

வட்டியை பெற்று தானம் செய்யலாமா❓👹👹*

*👹👹மீள் பதிவு👹👹* 


 *🏓🏓இது ஒரு நீண்ட கட்டுரை🏓🏓* 


*👹👹வட்டியை பெற்று தானம் செய்யலாமா❓👹👹*


 *👉👉👉அல்குர்ஆனில் இருந்து👇👇👇* 


 *✍✍✍போஸ்ட் ஆபீஸில் மற்றும் வங்கியில் சிறு சேமிப்பு அக்கவுண்ட் சேர்ந்துள்ளோம். அதற்கு சிறிதளவு வட்டி வரும். அந்தப் பணத்தை தானம் செய்தால் அதில் தவறு உள்ளதா❓ இது தவறு என்றால் சிறு சேமிப்பு எப்படிச் சேருவது❓✍✍✍* 


 *👹👹வட்டியை பெறவே கூடாது👹👹* 


📕📕📕அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.📕📕📕


 *(அல்குர்ஆன் 2:275)* 


 *✍✍✍இந்த வசனத்தில் வட்டி வாங்குபவர்களுக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் கூறுகின்றான். இது போன்று வட்டியைத் தடை செய்து ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் உள்ளன.✍✍✍* 


 *👉👉👉கூடுதல் விளக்கம்👇👇👇* 


 *👹👹வட்டிக்கு அறவே அனுமதி இல்லை!👹👹* 


📘📘📘இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டிக்கு அறவே அனுமதி இல்லை. வட்டியில் இருந்து முற்றிலுமாக முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும்.📘📘📘


 *✍✍✍வட்டியைக் குறித்து இஸ்லாம் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. வட்டி வாங்குவோர் அல்லாஹ்வுடன் போர் செய்பவர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். மேலும் வட்டி வாங்குவோருக்கு நிரந்தர நரகம் எனவும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.✍✍✍* 


📙📙📙நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.📙📙📙


 *திருக்குர்ஆன் 2:278, 279* 


 *✍✍✍கொடும் வட்டிதான் தடுக்கப்பட்டுள்ளது; சிறிய அளவிலான வட்டிக்குத் தடை இல்லை என்று சிலர் வாதிட்டு இதற்கு ஆதாரமாகப் பின்வரும் வசனத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.✍✍✍* 


📗📗📗நம்பிக்கைகொண்டோரே! பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.📗📗📗


 *திருக்குர்ஆன் 3:130* 


 *✍✍✍பன்மடங்கு வட்டி கூடாது என்றுதான் அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்; எனவே சிறிய வட்டிக்கு அனுமதி உள்ளது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.✍✍✍* 


📒📒📒பன்மடங்காகப் பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள் என்ற சொற்றொடர் இவர்கள் கூறும் கருத்தில் பயன்படுத்தப்படவில்லை. சிறிய வட்டியாக இருந்தாலும், பெரிய வட்டியாக இருந்தாலும் வட்டியின் தன்மையே பன்மடங்காகப் பெருகுவதுதான்.📒📒📒


 *✍✍✍ஒரு பொருளை ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார். அதில் அவருக்கு ஐம்பது ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ஐம்பது ரூபாய் லாபத்துடன் அந்த வியாபாரம் முடிந்து விடுகிறது✍✍✍.* 


📓📓📓ஆனால் ஆயிரம் ரூபாயை ஒருவர் மாதம் ஐம்பது ரூபாய் என்று வட்டிக்குக் கொடுக்கிறார். மாதாமாதம் ஐம்பது ரூபாய் என்று அது பன்மடங்காகிக் கொண்டே இருக்கும். பத்து ரூபாய் வட்டி என்று வைத்தாலும் அதுவும் பன்மடங்காகப் பெருகிக் கொண்டுதான் இருக்கும். வட்டியின் தன்மையே அதுதான். பெரிய வட்டி பெரிய அளவில் பன்மடங்காகும். சிறிய வட்டி சிறிய அளவில் பன்மடங்காகப் பெருகும்📓📓📓.


 *👹👹👹இதுதான் சிறிய வட்டிக்கும் பெரிய வட்டிக்கும் உள்ள வேறுபாடு👹👹👹.* 


 *✍✍✍எனவேதான் பன்மடங்காகப் பெருகிக் கொண்டுள்ள நிலையில் வட்டியை உண்ணாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். சிறிய வட்டியை அனுமதிக்கும் வகையில் இந்த வாசகம் அமையவில்லை✍✍✍.* 


📔📔📔நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வரவேண்டிய வட்டியை விட்டு விடுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.📔📔📔


 *பார்க்க திருகுர்ஆன் 2:278,279* 


 *✍✍✍சிறிய வட்டி கூடும் என்றால் வரவேண்டிய வட்டியில் பெரிய வட்டியை விட்டு விடுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பான். வரவேண்டிய வட்டி சிறிதாக இருந்தாலும், பெரிதாக இருந்தாலும் அதை விட்டுவிட வேண்டும் என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளதால் வட்டி முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.✍✍✍* 


حدثنا أبو الوليد، حدثنا شعبة، عن عون بن أبي جحيفة، قال: رأيت أبي اشترى عبدا حجاما، فسألته فقال: : نهى النبي صلى الله عليه وسلم عن ثمن الكلب وثمن الدم، ونهى عن الواشمة والموشومة، وآكل الربا وموكله، ولعن المصور


📚📚📚அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது :
பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றையும் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.📚📚📚


 *நூல் : புகாரி 2086 5347 5945* 


 *4177* – حدثنا محمد بن الصباح وزهير بن حرب وعثمان بن أبى شيبة قالوا حدثنا هشيم أخبرنا أبو الزبير عن جابر قال لعن رسول الله -صلى الله عليه وسلم- آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء.


 *✍✍✍ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது :* 
 *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதை எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர் என்று கூறினார்கள்✍✍✍.* 


 *நூல் : முஸ்லிம்: 4177* 


⛱⛱⛱நிரந்தர நரகம் என்று திருக்குர்ஆன் கூறுகின்ற இந்த வட்டி விஷயத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறு சேமிப்பாக இருந்தாலும், பெரிய அளவில் வட்டிக்கு விட்டுப் பணம் சம்பாதித்தாலும் இஸ்லாத்தின் பார்வையில் இரண்டும் சமம் தான். ஒரு பைசா அதிலிருந்து கிடைத்தாலும் அது ஹராம் தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.⛱⛱⛱


 *✍✍✍வட்டி ஹராம் என்று ஆகி விடும் போது, அது நம்முடைய பணம் இல்லை என்று ஆகி விடுகிறது. நம்முடைய பணம் இல்லை எனும் போது அதை வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதை வாங்காமலிருப்பது தான் கடமையாகும். அதை வாங்கி தர்மம் செய்யலாம் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.✍✍✍* 


🌈🌈🌈ஏனெனில் அதை வாங்கி பிறருக்குக் கொடுக்கலாம் என்றால் அந்தப் பொருள் நம்முடையது என்று வாக்குமூலம் தந்ததாகவே அர்த்தம். அடுத்தவர் பொருளை நாம் தர்மம் செய்ய முடியாது. எனவே அதை வாங்கி தர்மம் செய்தாலும் வட்டி வாங்கிய குற்றத்திற்குத் தண்டனை பெற வேண்டியது ஏற்படும்.🌈🌈🌈


 *✍✍✍இது போன்ற அக்கவுண்ட் தொடங்கித் தான் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே ஒரு சிறு தொகையை ஒதுக்கி வைத்து சேமிக்கலாம்.✍✍✍* 


🕋🕋🕋அல்லது வங்கிகளிலேயே வட்டி வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து சேமிப்பதற்கான வழிமுறைகள் உள்ளதா❓ என்பதை விசாரித்து அதன் படி செய்யலாம். அவ்வாறு செய்யும் போது நாம் சேமிக்கும் பணத்தை அவர்கள் வட்டிக்கு விடுவார்களா❓ என்பதையும் விசாரித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் வட்டி வாங்காவிட்டாலும் வட்டிக்குத் துணை புரிந்த குற்றத்திற்கும் ஆளாகி விடக் கூடாது.🕋🕋🕋


 *✍✍✍வட்டி எனும் பெரும் பாவத்தைச் செய்து தான் சேமிக்க முடியும் என்றால் அந்தச் சேமிப்பே நமக்குத் தேவையில்லை என்ற முடிவுக்குத் தான் இறையச்சமுள்ள ஒருவர் வர வேண்டும். சிறு சேமிப்பைக் காரணம் காட்டி வட்டியை நியாயப்படுத்த முடியாது.✍✍✍*


அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்


 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment