*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 ஜின்களும் 🔥*
⤵
*🔥ஷைத்தான்களும்🔥*
*✍🏻...... தொடர் ➖1⃣4⃣*
*☄ஜின்களை காண முடியாது☄*
*🏮🍂இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள்.* கண்களுக்குத் தென்பட மாட்டார்கள் என்ற விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம்.
*ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானும் அவனது கூட்டத்தாரும் மனிதர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் இவர்களை பார்க்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.*
*يَا بَنِي آدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُم مِّنَ الْجَنَّةِ يَنزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا ۗ إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ۗ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ*
_*🍃ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பி விட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.*_
*📖 அல்குர்ஆன் (7 : 27) 📖*
*🏮🍂நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதியபோது குர்ஆனை கேட்பதற்காக அவர்களை சுற்றி ஜின்கள் அமர்ந்திருந்தனர். இதை நபி (ஸல்) அவர்களால் சுயமாக அறிந்துகொள்ளமுடியவில்லை. அல்லாஹ் அவர்களுக்கு வஹியின் மூலம் இதை அறிவித்துக்கொடுத்த பின்பே இதை நபியவர்கள் அறிந்துகொண்டார்கள்.*
*قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا*
_*🍃ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று “நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்’ எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது” என (முஹம்மதே!) கூறுவீராக!*_
*📖 அல்குர்ஆன் (72 : 1) 📖*
*🏮🍂இறைவனுடைய உதவியின்றி சுயமாக நபி (ஸல்) அவர்களாலேயே அறிந்துகொள்ள முடியாது என்றால் வேறு எவராலும் நிச்சயமாக ஜின்களை பார்க்கவே முடியாது.* இதை நாம் விளங்கிக்கொண்டால் ஜின்களின் பெயரால் நடக்கும் பித்தலாட்டங்களில் நாம் விழுந்து விட மாட்டோம்.
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment