பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, December 12, 2019

ஜின்களும் - 3

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖0⃣3⃣*

   *☄ஜின்கள் இருப்பது*
                    *உண்மை ☄*

*🏮🍂ஜின் என்ற ஒரு படைப்பு உலகத்தில் இருப்பதாக திருக்குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாக கூறுகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் நம்பிக்கைக்கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களிலும் இதுவும் ஒன்றாகும்.*
வானவர்கள் சொர்க்கம் நரகம் இவற்றை நாம் யாரும் கண்களால் பார்த்துவிட்டு நம்பவில்லை. மாறாக குர்ஆனும் ஹதீஸ்களும் இவற்றை நம்புமாறு கூறுவதால் நம்புகிறோம். இது போன்று ஜின்களை நம் கண்களால் காணாவிட்டாலும் மறைவான நம்பிக்கை என்ற அடிப்படையில் ஜின்கள் இருப்பதாக நம்புபவரே உண்மையான இறைநம்பிக்கையாளராக இருக்க முடியும்.

*🏮🍂இதுவரை மனிதனுடைய அறிவுக்குப் புலப்படாமல் உள்ள பல விஷயங்களில் இதுவும் ஒன்று என்று கருதுவதே ஈமானிற்கு உகந்தது. சில வழிகெட்ட கூட்டங்கள் ஜின்கள் என்று ஒரு படைப்பே இல்லை என்று கூறி மக்களை வழிகெடுத்துக்கொண்டிருக்கிறது. ஜின்கள் தொடர்பாக இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு ஆதாரமும் இவர்களின் தவறான நம்பிக்கையை தகர்க்கக்கூடியதாக இருக்கிறது.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄மனிதர்களுக்கு முன்னால்*
            *உருவாக்கப்பட்ட படைப்பு*

*🏮🍂மனித குலம் அனைத்திற்கும் தந்தையும் முதல் மனிதருமான ஆதம் (அலை) அவர்களை படைப்பதற்கு முன்பே ஜின்களை அல்லாஹ் படைத்துவிட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.*

*وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ وَالْجَانَّ خَلَقْنَاهُ مِن قَبْلُ مِن نَّارِ السَّمُومِ*

_*🍃சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு மனிதனைப் படைத்தோம். கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.*_

*📖 அல்குர்ஆன்(15 : 27) 📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment