பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 4, 2019

மறுமையின்⛱* ⤵ *⛱ சாட்சிகள் - 15

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

          *⛱ மறுமையின்⛱*
                             ⤵
                    *⛱ சாட்சிகள் ⛱*

           *✍🏻...தொடர் ➖1⃣5⃣*

*☄உயிரற்ற பொருட்களின்*
                     *சாட்சிகள் { 02 } ☄*

ﺣﺪﺛﻨﺎ ﻣﻌﺎﺫ ﺑﻦ ﻓﻀﺎﻟﺔ، ﺣﺪﺛﻨﺎ ﻫﺸﺎﻡ، ﻋﻦ ﻳﺤﻴﻰ، ﻋﻦ ﻫﻼﻝ ﺑﻦ ﺃﺑﻲ ﻣﻴﻤﻮﻧﺔ، ﺣﺪﺛﻨﺎ ﻋﻄﺎء ﺑﻦ ﻳﺴﺎﺭ، *ﺃﻧﻪ ﺳﻤﻊ ﺃﺑﺎ ﺳﻌﻴﺪ اﻟﺨﺪﺭﻱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻳﺤﺪﺙ: ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺟﻠﺲ ﺫاﺕ ﻳﻮﻡ ﻋﻠﻰ اﻟﻤﻨﺒﺮ ﻭﺟﻠﺴﻨﺎ ﺣﻮﻟﻪ، ﻓﻘﺎﻝ: «ﺇﻧﻲ ﻣﻤﺎ ﺃﺧﺎﻑ ﻋﻠﻴﻜﻢ ﻣﻦ ﺑﻌﺪﻱ، ﻣﺎ ﻳﻔﺘﺢ ﻋﻠﻴﻜﻢ ﻣﻦ ﺯﻫﺮﺓ اﻟﺪﻧﻴﺎ ﻭﺯﻳﻨﺘﻬﺎ» ﻓﻘﺎﻝ ﺭﺟﻞ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﺃﻭﻳﺄﺗﻲ اﻟﺨﻴﺮ ﺑﺎﻟﺸﺮ؟ ﻓﺴﻜﺖ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﻘﻴﻞ ﻟﻪ: ﻣﺎ ﺷﺄﻧﻚ؟ ﺗﻜﻠﻢ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻻ ﻳﻜﻠﻤﻚ؟ ﻓﺮﺃﻳﻨﺎ ﺃﻧﻪ ﻳﻨﺰﻝ ﻋﻠﻴﻪ؟ ﻗﺎﻝ: ﻓﻤﺴﺢ ﻋﻨﻪ اﻟﺮﺣﻀﺎء، ﻓﻘﺎﻝ: «ﺃﻳﻦ اﻟﺴﺎﺋﻞ؟» ﻭﻛﺄﻧﻪ ﺣﻤﺪﻩ، ﻓﻘﺎﻝ: «ﺇﻧﻪ ﻻ ﻳﺄﺗﻲ اﻟﺨﻴﺮ ﺑﺎﻟﺸﺮ، ﻭﺇﻥ ﻣﻤﺎ ﻳﻨﺒﺖ اﻟﺮﺑﻴﻊ ﻳﻘﺘﻞ ﺃﻭ ﻳﻠﻢ، ﺇﻻ ﺁﻛﻠﺔ اﻟﺨﻀﺮاء، ﺃﻛﻠﺖ ﺣﺘﻰ ﺇﺫا اﻣﺘﺪﺕ ﺧﺎﺻﺮﺗﺎﻫﺎ اﺳﺘﻘﺒﻠﺖ ﻋﻴﻦ اﻟﺸﻤﺲ، ﻓﺜﻠﻄﺖ ﻭﺑﺎﻟﺖ، ﻭﺭﺗﻌﺖ، ﻭﺇﻥ ﻫﺬا اﻟﻤﺎﻝ ﺧﻀﺮﺓ ﺣﻠﻮﺓ، ﻓﻨﻌﻢ ﺻﺎﺣﺐ اﻟﻤﺴﻠﻢ ﻣﺎ ﺃﻋﻄﻰ ﻣﻨﻪ اﻟﻤﺴﻜﻴﻦ ﻭاﻟﻴﺘﻴﻢ ﻭاﺑﻦ اﻟﺴﺒﻴﻞ - ﺃﻭ ﻛﻤﺎ ﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻭﺇﻧﻪ ﻣﻦ ﻳﺄﺧﺬﻩ ﺑﻐﻴﺮ ﺣﻘﻪ، ﻛﺎﻟﺬﻱ ﻳﺄﻛﻞ ﻭﻻ ﻳﺸﺒﻊ، ﻭﻳﻜﻮﻥ ﺷﻬﻴﺪا ﻋﻠﻴﻪ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ»*

_*🍃ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் "என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலகவளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்'' எனக் கூறினார்கள்.*_

_*ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா❓'' எனக்கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் மௌனமாகிவிட்டார்கள். உடனே அந்த நபரிடம், " என்ன ஆனது உமது நிலைமை❓ நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!'' எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி(ஸல்)  அவர்களுக்கு வஹீ அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, "கேள்வி கேட்டவர் எங்கே❓'' என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள்.*_

_*பிறகு, "நன்மையானது தீமையை உருவாக்காது தான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்றுவிடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன;  பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்'' எனக் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
           *அபூசயீத்*
                  *அல்குத்ரீ (ரலி)*

*📚நூல்: புகாரி (1465, 2842)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment