பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, December 21, 2019

ஜம்வு கஸர் எங்கே எப்போது செய்யலாம்❓🌎🌎*

*📚📚மீள் பதிவு📚📚* 


*📚📚📚நபிவழியில்📚📚📚 தொழுகை சட்டங்கள் என்ற📚📚📚 நூலில் இருந்து📚📚📚* 


*🌐🌐ஜம்வு கஸர் எங்கே எப்போது செய்யலாம்❓🌎🌎*


 *📚📚📚ஸஹியான📚📚📚 ஹதீஸ்களில் இருந்து📚📚📚*


 *👉👉👉இது ஒரு நீண்ட பதிவு பொறுமையாக படிக்கவும்👈👈👈* 


 *🌐🌐பயணத்தில் கஸர் செய்தல்🌐🌐* 


 *✍✍✍எவ்வளவு தொலைவு பயணம் செய்தால் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரகத்களாகத் தொழும் சலுகை உண்டு❓ எத்தனை நாட்கள் இச்சலுகையைப் பயன்படுத்தலாம்❓ பல வருடங்கள் வெளியூரில் இருப்பவர்கள் இவ்வாறு சுருக்கித் தொழலாமா❓* 
 *ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரகத்களாகத் தொழலாம்.✍✍✍* 


و حدثناه أبو بكر بن أبي شيبة ومحمد بن بشار كلاهما عن غندر قال أبو بكر حدثنا محمد بن جعفر غندر عن شعبة عن يحيى بن يزيد الهنائي قال سألت أنس بن مالك عن قصر الصلاة فقال كان رسول الله صلى الله عليه وسلم إذا خرج مسيرة ثلاثة أميال أو ثلاثة فراسخ شعبة الشاك صلى ركعتين


📕📕📕கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று மைலோ, அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்''  என்று பதிலளித்தார்கள்.📕📕📕


 *அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்* 

 *நூல்: முஸ்லிம் 1230* 


 *✍✍✍இந்தச் செய்தியின் அறிவிப்பாளர், மூன்று மைலோ, அல்லது மூன்று பர்ஸக் அளவோ என்று ஐயத்துடன் அறிவிக்கிறார். மூன்று பர்ஸக் என்பது ஒன்பது மைல்களாகும்.* 
 *காலத்தைக் குறித்தோ, அளவைக் குறித்தோ குறிப்பிடும் போது இதையோ, அதையோ கூறினார்கள் என்று அறிவிப்பாளர் கூறினால் அந்தச் சந்தேகத்தைப் போக்கி உறுதியாக ஒரு அளவைக் குறிப்பிடும் ஹதீஸ் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு கிடைத்தால் அந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு சந்தேகத்துடன் அறிவிக்கப்படும் செய்தியை விட்டுவிட வேண்டும். அவ்வாறு கிடைக்காவிட்டால் இரு அளவுகளில் எது உறுதியானதோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும்,✍✍✍* 


و حدثني محمد بن أحمد بن أبي خلف حدثنا موسى بن داود حدثنا سليمان بن بلال عن زيد بن أسلم عن عطاء بن يسار عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم إذا شك أحدكم في صلاته فلم يدر كم صلى ثلاثا أم أربعا فليطرح الشك وليبن على ما استيقن ثم يسجد سجدتين قبل أن يسلم فإن كان صلى خمسا شفعن له صلاته وإن كان صلى إتماما لأربع كانتا ترغيما للشيطان حدثني أحمد بن عبد الرحمن بن وهب حدثني عمي عبد الله حدثني داود بن قيس عن زيد بن أسلم بهذا الإسناد وفي معناه قال يسجد سجدتين قبل السلام كما قال سليمان بن بلال


 *📘📘📘ஹதிஸின் சுருக்கம்* 
தொழுகையில் மறதி ஏற்பட்டு நாம் தொழுதது நான்கா மூன்றா என்று சந்தேகம் வந்தால் மூன்று என்று முடிவு செய்து மற்றொரு ரக்அத் தொழ வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.📘📘📘


 *பார்க்க : முஸ்லிம் 990* 


 *✍✍✍நான்கை விட மூன்று என்று முடிவு செய்வது உறுதியானது. ஏனெனில் நாம் மூன்று தொழுதது நிச்சயம். நான்காவது ரக்அத் தொழுதோமா என்பதில் தான் சந்தேகம். எனவே உறுதியானதை எடுத்துக் கொள்ள வேண்டும்.* 
 *அது போல் ஒன்பது மைல் தொலைவில் கஸர் செய்தது உறுதியானது. மூன்று மைலில் கஸர் செய்தார்களா என்பது சந்தேகத்திற்கு இடமானது. எனவே உறுதியானதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் மூன்று ஃபர்ஸக் என்பதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.✍✍✍* 


📙📙📙அன்றைய கால மூன்று பர்ஸக் என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கி.மீ. ஆகும்.
ஒருவர் 25 கி.மீ. தூரமுள்ள ஊருக்குப் பயணம் செல்ல நாடி ஊர் எல்லையை அவர் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.📙📙📙


 حدثنا أبو نعيم قال حدثنا سفيان عن محمد بن المنكدر وإبراهيم بن ميسرة عن أنس بن مالك رضي الله عنه قال صليت الظهر مع النبي صلى الله عليه وسلم بالمدينة أربعا وبذي الحليفة ركعتين


 *✍✍✍மதீனாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் லுஹர் தொழுகையை நான்கு ரக்அத்களாகத் தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா புறப்பட்டார்கள். (இடையில் உள்ள ஊரான) துல்ஹுலைஃபாவில் அஸர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.''✍✍✍* 


 *அறிவிப்பவர்: அனஸ் (ரலி)* 

 *நூல்: புகாரீ 1089' முஸ்லிம் 1113* 


📗📗📗பயணத்தில் இருப்பவர் விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் லுஹருடைய நேரத்தில் தொழலாம்.
விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் அஸருடைய நேரத்தில் தொழலாம்.📗📗📗


 *✍✍✍அதே போல் மக்ரிப் தொழுகையையும், இஷா தொழுகையையும் மஃரிபுடைய நேரத்தில் தொழலாம். அல்லது இஷாத் தொழுகையின் நேரத்தில் தொழலாம்* .
 *அப்போது நான்கு ரக்அத் தொழுகைகளை (லுஹர், அஸர், இஷா) இரண்டு ரக்அத்களாகச் சுருக்கியும் தொழலாம். சுப்ஹுத் தொழுகையை இரண்டு ரக்அத்தாகவும், மஃரிப் தொழுகையை மூன்று ரக்அத்களாவும் தொழ வேண்டும்.✍✍✍* 


حدثنا حسان الواسطي قال حدثنا المفضل بن فضالة عن عقيل عن ابن شهاب عن أنس بن مالك رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا ارتحل قبل أن تزيغ الشمس أخر الظهر إلى وقت العصر ثم يجمع بينهما وإذا زاغت صلى الظهر ثم ركب


📒📒📒சூரியன் சாய்வதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும் வரை தாமதப்படுத்தி பின்னர் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். (பிரயாணத்தைத் துவங்கும் முன்) சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரைத் தொழுது விட்டுப் புறப்படுவார்கள்.📒📒📒


 *அறிவிப்பவர்: அனஸ் (ரலி)* 

 *நூல்: புகாரீ 1111* 


 *✍✍✍நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் தொழுகையையும், இஷாத் தொழுகையையும் சேர்த்து தொழுதார்கள். மஃரிப் மூன்று ரக்அத்களாகவும் இஷா இரண்டு ரக்அத்களாகவும் ஒரே இகாமத்தைக் கொண்டு தொழுதார்கள்.✍✍✍* 

 *அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)* 

 *நூல்: முஸ்லிம் 2268* 


و حدثني حرملة بن يحيى أخبرنا ابن وهب أخبرني يونس عن ابن شهاب قال أخبرني سالم بن عبد الله أن أباه قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا أعجله السير في السفر يؤخر صلاة المغرب حتى يجمع بينها وبين صلاة العشاء


📓📓📓நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மக்ரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள்📓📓📓.


 *அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)* 

 *நூல்: புகாரீ 1091, முஸ்லிம் 1142* 


 *✍✍✍இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழும் போது இரண்டு தொழுகைக்கும் சேர்த்து ஒரு பாங்கு சொல்ல வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியாக இகாமத் சொல்லியோ, அல்லது இரண்டு தொழுகைக்கும் ஒரேயொரு இகாமத் மட்டும் சொல்லியோ தொழலாம்.* 
 *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவில் மஃரிபையும், இஷாவையும் ஒரு பாங்கு இரண்டு இகாமத் சொல்லி தொழுவித்தார்கள்.✍✍✍* 


 *அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)* 

 *நூல்: முஸ்லிம் 2137* 


📔📔📔நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் தொழுகையையும், இஷாத் தொழுகையையும் சேர்த்துத் தொழுதார்கள். மஃரிப் மூன்று ரக்அத்களாகவும் இஷா இரண்டு ரக்அத்களாகவும் ஒரே இகாமத்தைக் கொண்டு தொழுதார்கள்.📔📔📔


 *அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)* 

 *நூல்: முஸ்லிம் 2268* 


 *🕋🕋சுருக்கித் தொழுவது கட்டாயம் இல்லை🕋🕋* 


 *✍✍✍பயணியாக இருப்பவர் தொழுகையைச் சுருக்கித் தொழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. விரும்பினால் முழுமையாகவும் தொழலாம்.✍✍✍* 


أخبرني أحمد بن يحيى الصوفي قال حدثنا أبو نعيم قال حدثنا العلاء بن زهير الأزدي قال حدثنا عبد الرحمن بن الأسود عن عائشة أنها اعتمرت مع رسول الله صلى الله عليه وسلم من المدينة إلى مكة حتى إذا قدمت مكة قالت يا رسول الله بأبي أنت وأمي قصرت وأتممت وأفطرت وصمت قال أحسنت يا عائشة وما عاب علي


⛱⛱⛱நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்த போது, அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை. நான் நோன்பு நோற்கிறேன்'' என்று நான் கேட்ட போது ஆயிஷாவே! சரியாகச் செய்தாய்!'' என்றார்கள். என்னைக் குறை காணவில்லை.⛱⛱⛱


 *அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)* 

 *நூல்: நஸாயீ 1439* 


 *✍✍✍ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை. எனவே இத்தனை நாள் தங்கினால் மட்டுமே கஸ்ர் செய்ய வேண்டும்; அதற்கு மேல் தங்கினால் கஸ்ர் செய்யக் கூடாது என்று கூறுவதற்கு மார்க்கத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை.✍✍✍* 


صحيح البخاري

 *1080* – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَاصِمٍ، وَحُصَيْنٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «أَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعَةَ عَشَرَ يَقْصُرُ، فَنَحْنُ إِذَا سَافَرْنَا تِسْعَةَ عَشَرَ قَصَرْنَا، وَإِنْ زِدْنَا أَتْمَمْنَا»


🌈🌈🌈நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாட்கள் தங்கினார்கள். அந்நாட்களில் கஸ்ர் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாட்களுக்குப் பிரயாணம் செய்தால் கஸ்ர் செய்வோம். அதிகமானால் முழுமையாகத் தொழுவோம்.🌈🌈🌈


 *அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)* 

 *நூல்: புகாரி 1080* 


 *✍✍✍இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தொன்பது நாட்கள் தான் கஸ்ராகத் தொழுதுள்ளார்கள் என்பதால் அதற்கு மேல் தங்குபவர்கள் முழுமையாகத் தொழ வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.* 
 *ஆனால் பத்தொன்பது நாட்களுக்கு மேல் முழுமையாகத் தொழுவோம் என்பது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவே கூறப்பட்டுள்ளது.* 
 *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியூரில் அதிகப்பட்சமாகத் தங்கியது பத்தொன்பது நாட்கள்; அவர்கள் தங்கிய அத்தனை நாட்களிலும் சுருக்கித் தொழுதுள்ளார்கள் என்பதைத் தான் இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.✍✍✍* 


📕📕📕அதற்கு மேல் தங்கினால் சுருக்கித் தொழக் கூடாது என்றால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியிருப்பார்கள். அவ்வாறு வரையறை எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறாததிலிருந்து, இதற்குக் காலவரை இல்லை என்பதை அறியலாம்.
அதே சமயம் வெளியூரில் தங்குபவர்கள் சுருக்கித் தொழுவது கட்டாயமில்லை. விரும்பினால் முழுமையாகத் தொழுவதற்குத் தடையில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.📕📕📕


سنن النسائي

 *1456* – أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يَحْيَى الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا الْعَلَاءُ بْنُ زُهَيْرٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا اعْتَمَرَتْ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ حَتَّى إِذَا قَدِمَتْ مَكَّةَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، بَأَبِي أَنْتَ وَأُمِّي قَصَرْتَ، وَأَتْمَمْتُ، وَأَفْطَرْتَ، وَصُمْتُ، قَالَ: «أَحْسَنْتِ يَا عَائِشَةُ»، وَمَا عَابَ عَلَيَّ


 *✍✍✍நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்த போது, 'அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள்; நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை; நான் நோன்பு நோற்கிறேன்' என்று நான் கேட்ட போது 'ஆயிஷாவே! சரியாகச் செய்தாய்!' என்றார்கள். என்னைக் குறை காணவில்லை.✍✍✍* 


 *அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)* 

 *நூல்: நஸாயீ 1456* 


 *🏓🏓🏓உள்ளூரில் ஜம்வு செய்தல்🏓🏓🏓* 


📘📘📘ஒருவர் உள்ளூரில் இருக்கும் போதும் எப்போதாவது ஜம்வு செய்து (சேர்த்துத்) தொழுவதற்கு அனுமதி உள்ளது. எனினும் இதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.📘📘📘


حدثنا أبو النعمان قال حدثنا حماد هو ابن زيد عن عمرو بن دينار عن جابر بن زيد عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم صلى بالمدينة سبعا وثمانيا الظهر والعصر والمغرب والعشاء فقال أيوب لعله في ليلة مطيرة قال عسى


 *✍✍✍நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும், அஸ்ரையும், மஃரிபையும், இஷாவையும் ஏழு, மற்றும் எட்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.✍✍✍* 


 *அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)* 

 *நூல்: புகாரீ 543* 


حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك عن أبي الزبير عن سعيد بن جبير عن ابن عباس قال صلى رسول الله صلى الله عليه وسلم الظهر والعصر جميعا والمغرب والعشاء جميعا في غير خوف ولا سفر


📙📙📙நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ, பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை.📙📙📙


 *அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)* 

 *நூல்: முஸ்லிம் 1267* 


 *✍✍✍இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு காலமெல்லாம் உள்ளூரில் ஜம்வு செய்யலாம் என்று யாரும் புரிந்து கொள்வதில்லை. எப்போதாவது சில நேரங்களில் உள்ளூரில் ஜம்வு செய்யும் நிலை ஏற்படலாம். அது போன்ற நேரங்களில் இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்கிறோம். எல்லா நேரத்திலும் ஒருவர் இச்சலுகையைப் பயன்படுத்தி வந்தால் அவரைப் பொருத்தவரை காலமெல்லாம் மூன்று வேளைத் தொழுகையாகி விடும்.✍✍✍* 


📗📗📗இந்தச் சலுகையைப் புரிந்து கொள்வது போல் மாதக் கணக்கில் வெளியூரில் இருப்பவர்கள் அன்றாடம் இச்சலுகையைப் பயன்படுத்தாமல் அரிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.📗📗📗


 *✍✍✍ஏனெனில் தொடர்ந்து ஜம்வு செய்து வந்தால் தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும் என்ற இறைவனின் கட்டளைக்குப் பொருள் இல்லாமல் போய்விடும்.✍✍✍* 


அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment