*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*⛱ மறுமையின்⛱*
⤵
*⛱ சாட்சிகள் ⛱*
*✍🏻...தொடர் ➖1⃣6⃣*
*☄ குர்ஆனின் சாட்சிகள் ☄*
*⛱ இறுதி பாகம் ⛱*
_*🍃தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். "அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். "சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி' (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக் கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். தான தர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக் கொள்கின்றனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*_
*🎙அறிவிப்பவர்:*
*அபூமாலிக்*
*அல்அஷ்அரீ (ரலி)*
*📚நூல்: முஸ்லிம் (381)📚*
_*🍃குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனை ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான "அல்பகரா' மற்றும் "ஆலு இம்ரான்' ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். "அல்பகரா' அத்தியாயத்தை ஓதி வாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*_
*🎙அறிவிப்பவர்:*
*அபூஉமாமா*
*அல்பாஹிலீ (ரலி)*
*📚நூல்: முஸ்லிம் (1470)📚*
*🏮🍂ஒவ்வொரு மனிதனுக்கும் இத்தனை சாட்சிகளை இறைவன் கண்டிப்பாகக் கொண்டு வருவான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. நல்ல விதமான காரியங்களைச் செய்த ஒருவர் தமக்கு வழங்கப்படும் கூலி சரியானதுதான் என்று ஏற்றுக்கொள்வதற்கு எத்தனை சாட்சிகள் தேவைப்படுமோ அந்தளவிற்கு இறைவன் சாட்சிகளைக் கொண்டு வருவான்.*
*🏮🍂அதுபோன்று கெட்ட செயல்களைச் செய்த ஒருவர் தமக்குக் கொடுக்கப்படும் தண்டனை நியாயமானதுதான் என்று ஏற்றுக்கொள்வதற்கு எத்தனை சாட்சிகள் தேவைப்படுமோ அதற்குரிய வகையில் அவன் சாட்சிகளை ஏற்படுத்துவான்.* சிலருக்கு ஒரு சாட்சியே போதுமானதாக இருக்கும். சிலருக்கு இரு சாட்சிகள் தேவைப்படலாம்.
*🏮🍂இவ்வாறு மறுமை நாளில் நமது செயல்களுக்கு சான்றுகள், சாட்சிகள், ஆதாரங்கள் இருக்கும் என்று மார்க்கம் சுட்டிக் காட்டுவதற்கும் நோக்கம் இருக்கிறது. நல்ல காரியங்களைச் செய்பவர்கள் நமது செயல்களுக்குத் தக்க வெகுமதிகள் கிடைக்காதோ என்று தவறுதலாக நினைத்து தளர்ந்து விடக்கூடாது. கெட்டவர்கள் எவரும் நம்மை எதுவும் செய்ய முடியாது என்று தைரியமாக இருந்துவிடாது. ஒவ்வொரு நேரத்திலும் நாம் கவனிக்கப்படுகிறோம்; நம்மைச் சுற்றி சாட்சிகள் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.* இதைக் கவனத்தில் கொண்டு நல்ல முறையில் செயல்பட்டு *மறுமையில் மகத்தான வெற்றி பெறுவதற்கு இறைவன் நமக்கு அருள்புரிவானாக!*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*தொடர் முடிந்தது*
⤵⤵⤵
அல்ஹம்துலில்லாஹ்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment