பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, December 12, 2019

ஸலவாத் எப்படி கூறுவது

*🕋🕋மீள் பதிவு🕋🕋* 


*📚📚📚ஸலவாத் எப்படி கூறுவது❓📚📚📚*


 *📚📚📚ஸஹியான ஹதீஸ்களில் இருந்து📗📗📗*


 *✍✍✍தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் ஓதும் போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தான் ஓத வேண்டும். மற்ற நேரங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்றோ கூறிக் கொள்ளலாம்✍✍✍.* 


 *👉👉👉பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது👇👇👇* 

 *(17072) 17200* - حَدَّثَنَا يَعْقُوبُ ، حَدَّثَنَا أَبِي ، عَنِ ابْنِ إِسْحَاقَ ، قَالَ : وَحَدَّثَنِي – فِي الصَّلاَةِ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا الْمَرْءُ الْمُسْلِمُ صَلَّى عَلَيْهِ فِي صَلاَتِهِ – مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيُّ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ الأَنْصَارِيِّ ، أَخِي بَلْحَارِثِ بْنِ الْخَزْرَجِ ، عَنْ أَبِي مَسْعُودٍ عُقْبَةَ بْنِ عَمْرٍو ، قَالَ : أَقْبَلَ رَجُلٌ حَتَّى جَلَسَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ عِنْدَهُ ، فَقَالَ :
يَا رَسُولَ اللهِ ، أَمَّا السَّلاَمُ عَلَيْكَ ، فَقَدْ عَرَفْنَاهُ ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ إِذَا نَحْنُ صَلَّيْنَا فِي صَلاَتِنَا صَلَّى اللَّهُ عَلَيْكَ ؟ قَالَ : فَصَمَتَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَحْبَبْنَا أَنَّ الرَّجُلَ لَمْ يَسْأَلْهُ . فَقَالَ : إِذَا أَنْتُمْ صَلَّيْتُمْ عَلَيَّ فَقُولُوا : اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الأُمِّيِّ ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.

📕📕📕ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் முன்னால் அமர்ந்தார். அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது ஸலாம் கூறுவதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். நாங்கள் தொழும் போது எங்கள் தொழுகையில் எப்படி உங்கள் மீது ஸலவாத் கூறுவது? ஸல்லல்லாஹு அலைக்க என்று கேட்டார். இந்த மனிதர் இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே என்று நாங்கள் நினைக்குமளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தனர். பின்னர் நீங்கள் என் மீது ஸலவாத் கூறும் போது அல்லாஹும்ம் ஸல்லி அலா முஹம்மதின் அன்னபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் அன்னபிய்யில் உம்மிய்யி கமா பாரக்த அலா இப்ராஹீம் வ வலா ஆலி இப்ராஹீம் இன்னக ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள் என விடை அளித்தார்கள்.📕📕📕

 *நூல் : அஹ்மத் 16455*


 *✍✍✍கேள்வி கேட்ட மனிதர் தொழுகையின் போது ஸலவாத் கூறுவது எப்படி என்று கேட்டார். அப்படிக் கேட்கும் போதே ஸல்லல்லாஹு அலைக்க என்று ஸலவாதும் கூறினார். (நேரடியாக ஸலவாத்து கூறும் போது அலைக (உங்கள் மீது) என்றும் படர்க்கையாகக் கூறும் போது அலைஹி (அவர் மீது) என்று கூற வேண்டும்.)✍✍✍* 


📘📘📘ஸல்லல்லாஹு அலைக்க என்று அவர் ஸலவாத் கூறியதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மறுக்கவில்லை. திருத்தவில்லை. தொழுகையில் எப்படி ஸலாவாத் ஓதுவது என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள்.📘📘📘


 *✍✍✍எனவே தொழுகை அல்லாத நேரங்களில் ஸலவாத் கூறும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறலாம்.* 
 *நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் இப்படி நபித்தோழர்கள் கூறியுள்ளதே இதற்குச் சான்று.✍✍✍* 


 *2818* - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ عَنْ ابْنِ الْقَاسِمِ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ ، قَالَ : أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ ، عَنْ عُمَيْرِ بْنِ سَلَمَةَ الضَّمْرِيِّ أَنَّهُ أَخْبَرَهُ ، عَنِ الْبَهْزِيِّ ،
أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم خَرَجَ يُرِيدُ مَكَّةَ وَهُوَ مُحْرِمٌ حَتَّى إِذَا كَانُوا بِالرَّوْحَاءِ إِذَا حِمَارُ وَحْشٍ عَقِيرٌ ، فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ : ودَعُوهُ فَإِنَّهُ يُوشِكُ أَنْ يَأْتِيَ صَاحِبُهُ فَجَاءَ الْبَهْزِيُّ وَهُوَ صَاحِبُهُ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ : يَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْكَ وَسَلَّمَ شَأْنَكُمْ بِهَذَا الْحِمَارِ ، فَأَمَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَبَا بَكْرٍ فَقَسَّمَهُ بَيْنَ الرِّفَاقِ ، ثُمَّ مَضَى حَتَّى إِذَا كَانَ بِالأُثَايَةِ ، بَيْنَ الرُّوَيْثَةِ وَالْعَرْجِ ، إِذَا ظَبْيٌ حَاقِفٌ فِي ظِلٍّ وَفِيهِ سَهْمٌ ، فَزَعَمَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ، أَمَرَ رَجُلاً يَقِفُ عِنْدَهُ لاَ يُرِيبُهُ أَحَدٌ مِنَ النَّاسِ ، حَتَّى يُجَاوِزَهُ.

 *நஸயீ 2768* 

1667- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بُجَيْدٍ ، عَنْ جَدَّتِهِ أُمِّ بُجَيْدٍ ،
وَكَانَتْ مِمَّنْ بَايَعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ، أَنَّهَا قَالَتْ لَهُ : يَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْكَ ، الْمِسْكِينَ لَيَقُومُ عَلَى بَابِي ، فَمَا أَجِدُ لَهُ شَيْئًا أُعْطِيهِ إِيَّاهُ ، فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : إِنْ لَمْ تَجِدِي لَهُ شَيْئًا تُعْطِينَهُ إِيَّاهُ إِلاَّ ظِلْفًا مُحْرَقًا ، فَادْفَعِيهِ إِلَيْهِ فِي يَدِهِ.

 *அபூதாவூத் 1419* 


 *✍✍✍இந்த ஹதீஸ்களிலும் ஸல்லல்லாஹு அலைக்க என்று நபித்தோழர்கள் நேருக்கு நேராக ஸலவாத் கூறியுள்ளனர். அதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மறுக்கவில்லை.✍✍✍* 

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment