பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, December 7, 2019

நன்மைகளை வாரி - 51

_*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*_

_*✍🏼...நன்மைகளை வாரி*_
                          ⤵
         _*வழங்கும் தொழுகை*_

         _*✍🏼...தொடர் [ 51 ]*_

   *☄ருகூவின் சிறப்புகள் {01}*

*🏮🍂தொழுகை என்ற வணக்கம் அதனை முறையாகப் பேணி நிறைவேற்றுபவர்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியங்களை வாரி வழங்குகிறது என்பதை நாம் தொடராகப் பார்த்து வருகின்றோம்.*

*🏮🍂அதன் வரிசையில் நாம் தற்போது தொழுகையின் மிக முக்கியமான ஒரு நிலையான "ருகூவு'' என்ற நிலையைப் பற்றியும் அதனால் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றியும் பார்க்கவிருக்கின்றோம்.*

*🏮🍂திருமறைக் குர்ஆனில் பல்வேறு இடங்களில் அல்லாஹ் ருகூவு செய்வதைப் பற்றியும், ருகூவு செய்யக் கூடியவர்களைப் பற்றியும் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளான்.*

_*🍃தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்!*_

*📖 அல்குர்ஆன் 2:43 📖*

_*🍃நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்*_

  *📖 அல்குர்ஆன் 22:7 📖*

_*🍃அல்லாஹ்வும், அவனது தூதரும், தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிற நம்பிக்கை கொண்டோருமே உங்கள் உதவியாளர்கள்.*_

   *📖 அல்குர்ஆன் 5:55 📖*

_*🍃அவர்கள்) மன்னிப்புத் தேடுபவர்கள்; வணங்குபவர்கள்; (இறைவனைப்) புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; ருகூவு செய்பவர்கள்; ஸஜ்தாச் செய்பவர்கள்; நன்மையை ஏவுபவர்கள்; தீமையைத் தடுப்பவர்கள்; அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிக் கொள்பவர்கள். (இத்தகைய) நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!*_

*📖அல்குர்ஆன் 9:112📖*

_*🍃முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிலிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம்.*_

*📖அல்குர்ஆன் 48:29📖*

*🏮🍂மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் "ருகூவு'' செய்வது ஒருவன் இறை நம்பிக்கையாளன் என்பதற்கு அடையாளமாகும் என்பதை நமக்குத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.*

*🏮🍂நாம் தொழுகையை நிறைவேற்றும் போது ருகூவையும் நிறைவேற்றுகிறோம். எனவே மேற்கண்ட வசனங்களில் ருகூவு செய்வோருக்கு என்னென்ன சிறப்புகளையும் பாக்கியங்களையும் அல்லாஹ் வாக்களிக்கின்றானோ அவை அனைத்தையும் பெறக்கூடிய நன்மக்களாக தொழுகை என்ற வணக்கம் அமைந்துள்ளது.*

*🏮🍂தொழுகை என்ற வணக்கம் எவ்வளவு நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது என்பதை இதன் மூலமும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment