பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, December 7, 2019

கணவன் ஏதாவது பிடிக்காத தோ , தவறோ,

*👄👄👄மீள் பதிவு👄👄👄* 


*🚶🚶🚶கணவன் ஏதாவது பிடிக்காத தோ , தவறோ, வருத்தம் ஏற்படும் அளவிற்கு பேசினாலோ 🧕🧕🧕மனைவி எப்படி அதை அனுகுவது❓❓❓📚📚📚*

 *👉 👉 👉 நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழியில் இருந்து உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇*

இஸ்லாத்தை பொறுத்தவரை அல்லாஹ்விற்கும்,அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவதற்கு பிறகு நாம் கட்டுப்படவேண்டிய நபர் கணவர் மட்டுமே!

கணவர்தான் மனைவியை நிர்வகிக்ககூடியவர்.
அதனால் மனைவி கணவர் கூறுவதற்கு கட்டுப்படவேண்டும்.,ஆனாலும் மார்க்கத்தில் சொல்லாத விஷயங்களை சொல்லும்போது கட்டுப்பட தேவையில்லை.

அவரின் செயல்கள், பேச்சுக்கள் வருத்தத்தை ஏற்படுத்தினால் அவரிடம் அதை சண்டையிடும் தோரணையில் இல்லாமல் மென்மையான முறையில் கேட்கவேண்டும்.
அவர் கூறுவது ஏற்றுக்கொள்ளும் விஷயமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வது சிறந்தது.

நபி(ஸல்) அவர்கள் மனைவிமார்களுக்கு கொடுத்த அன்பையும்,விட்டுக்கொடுத்தலையும் எடுத்து கூறுங்கள்.

பிடிக்காத விஷயங்களை செய்யும்போது பிடிக்காத காரணத்தை தெளிவாக சொல்லுங்கள்.,அழகிய முறையில் அணுகுங்கள்.

இஸ்லாத்துக்கு முரணான காரியமாக இருந்தால்,அதை பக்குவமாக புரிய வைக்கவேண்டும்.

கணவன், மனைவிக்கிடையேயான பிரச்சினைகளை பொறுமையுடன் தான் கையாள வேண்டும்.
ஏனெனில் கணவன், மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனை சில நேரம் மட்டுமே!

சரியான நேரத்தில் சரியான முறையில் கடைபிடிக்கும் பொறுமை பல பெரிய பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும்.

அந்த நேரத்தில் நாம் எதிர்க்கும் செயல் பல தவறான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
இதை வளரவிடாமல் அப்பொழுதே அதை பேசித்தீர்ப்பதுதான் சிறந்த வழியாக இருக்கும்.

நம்மீது தவறு இருந்தால் ஆம் என அதை ஏற்றுக்கொண்டு அதை மாற்றிக்கொள்ளும் இந்த பண்பு,அவர்கள் தவறு செய்யும்போது அவர்களும் தன்னை மாற்றிக்கொள்வதற்கு வழிவகுக்கும்.

வாதங்களை தவிர்த்துக்கொண்டு,உரையாடலின்போது தவறை சுட்டிக்காட்டுங்கள்.
யாருமே தான் செய்த தவறை தவறு என ஒப்புக்கொள்ள மாட்டார்கள்,”நீங்கள் இப்படி செய்வதற்கு பதில் இப்படி செய்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்”எனும் விதமாக உரையாட வேண்டும்.

நம்வாழ்க்கைக்கு சிறந்த வழி விட்டுக்கொடுத்தல்தான்.,
நடந்ததை எண்ணி வருந்தாமல்,மாற்றுத்தீர்வு யோசித்து பொறுமையை கடைபிடித்து சாதுர்யமான முறையில் அவர்களிடம் பேசி இஸ்லாம் கூறிய அடிப்படையில் கணவன் மனைவிக்கு ஆடையாகவும்,மனைவி கணவனுக்கு ஆடையாகவும் ஒருவருக்கொருவர் பாதுகாக்கவும்,குறைகளை மறைக்கவும் எல்லாம் வல்ல இறைவன் க்ற்றுக்கொடுத்ததை செயல்படுத்துவோம்.,இன்ஷா அல்லாஹ்

 *👉 👉 👉 ஹதீஸ் ஆதாரங்கள்👇👇👇*ஹய்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங்கள் மனைவிமார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன? என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள் (உங்கள் மனைவிமார்கள்) உங்கள் விளைநிலங்கள் உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்றுகொள்ளுங்கள். (அவளை கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதே அவளை அசிங்கமாகத் திட்டாதே நீ உண்ணும் போது  அவளையும் உண்ணச் செய் நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு. வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம் வெறுப்பைக் காட்டாதே. , நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு ஆகுமானவை தவிர மற்ற விஷயங்களில் எப்படி நீங்கள் (அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முடியும்?) என்று கூறினார்கள்.

 *_(நூல் : அஹ்மத் (19190)_* 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பதுபோல் அடிக்க வேண்டாம். (ஏனெனில்) பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவு கொள்வீர்கள் 

 *_நூல் : புகாரி (5204)_* 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இறைநம்பிக்கை கொண்ட ஒரு ஆண் இறைநம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கொண்டு திருப்தி‎கொள்ளட்டும். 

 *_நூல் : முஸ்லிம் 2915_* 

நபி (ஸல்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள் ஒரு மனிதனுடைய பொக்கிஷங்களில் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கவா ? (அதுதான் நல்ல மனைவியாவாள்) நல்ல மனைவியென்பவள் (கணவன் ) அவளை நோக்கும் போது அவனை சந்தோஷப்படுத்துவாள். அவன் அவளுக்கு கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவைகளை) பாதுகாத்துக் கொள்வாள். 

*_நூல்_* *_அபூதாவூத் ( 1417 )_* 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (பெண்ணே நீ உன்னுடைய கணவனுக்குச் செய்யும் கடமைகளில் ) என்னிலையில் இருக்கின்றாய் என்பதைக் கவனித்துக் கொள். நிச்சயமாக அவர் ஒன்று உன்னுடைய சொர்க்கமாக இருப்பார். அல்லது நரகமாக இருப்பார்.

 _*நூல் : அஹ்மத் (18233)*_ 

 கட்டுப்பட்டு நடக்க வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  நான் ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிடுபவனாக இருந்தால் மனைவி தன்னுடைய கணவனுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பேன். (ஏனென்றால் அந்த அளவிற்கு அவள் தன்னுடைய கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. ஆனால் அல்லாஹ்வுக்கே தவிர யாரும் யாருக்கும் ஸஜ்தா செய்யக் கூடாது)  

_*நூல் : திர்மிதி (1079)*_ 

நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள் எனக்கு நரகம் காட்டப்பட்டது . அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர். அப்போது இறைவனையா நிராகரிக்கிறார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கணவனை நிராகரிக்கிறார்கள் உதவிகளை நிராகரிக்கிறார்கள் . அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து. பின்னர் (அவளுக்கு பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானாள் உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை. என்று பேசிவிடுவாள். என்றார்கள்  

*_நூல் : புகாரி  (29)_*

இஸ்லாம் கூறிய அடிப்படையில் கணவன் மனைவிக்கு ஆடையாகவும்,மனைவி கணவனுக்கு ஆடையாகவும் ஒருவருக்கொருவர் பாதுகாக்கவும்,குறைகளை மறைக்கவும் எல்லாம் வல்ல இறைவன் க்ற்றுக்கொடுத்ததை செயல்படுத்துவோம்.,இன்ஷா அல்லாஹ்

அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment