*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*⛱ மறுமையின்⛱*
⤵
*⛱ சாட்சிகள் ⛱*
*✍🏻...தொடர் ➖1⃣4⃣*
*☄உயிரற்ற பொருட்களின்*
*சாட்சி { 01 } ☄*
*🏮🍂மறுமை நாளில், ஒருவர் செய்த காரியத்தை நிரூபிப்பதற்கு அவர் அந்தக் காரியத்தை செய்வதற்குப் பயன்படுத்திய பொருட்களே போதுமானதாக இருக்கும். இவ்வாறு நல்லவர்களும் கெட்டவர்களும் பயன்படுத்தும் பொருட்களை தேவைப்படின் அவற்றையும் சாட்சியாகக் கொண்டுவரும் ஆற்றல் அல்லாஹ்விற்கு இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.* ஒருவர் திருடினார் என்பதற்கு அவர் திருடிய பொருளை இறைவன் நாடினால் சாட்சியாகக் கொண்டுவருவான். *ஒருவர் மார்க்கத்தை மக்களுக்குச் சொன்னார் என்பதற்கு அவர் அதற்குப் பயன்படுத்திய மைக்கையோ, எழுதுகோலையோ கூட சாட்சியாகக் கொண்டுவர முடியும்.* இதை விளங்கிய பிறகாவது நமது செயல்களை நாம் சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.
*أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَىٰ غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ ۖ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا*
_*🍃சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையின்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது.*_
*📖(அல்குர்ஆன் 17:78)📖*
ﺣﺪﺛﻨﺎ ﻗﺘﻴﺒﺔ، ﻋﻦ ﻣﺎﻟﻚ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﺃﺑﻲ ﺻﻌﺼﻌﺔ اﻷﻧﺼﺎﺭﻱ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، *ﺃﻧﻪ ﺃﺧﺒﺮﻩ ﺃﻥ ﺃﺑﺎ ﺳﻌﻴﺪ اﻟﺨﺪﺭﻱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ ﻟﻪ: ﺇﻧﻲ ﺃﺭاﻙ ﺗﺤﺐ اﻟﻐﻨﻢ ﻭاﻟﺒﺎﺩﻳﺔ، ﻓﺈﺫا ﻛﻨﺖ ﻓﻲ ﻏﻨﻤﻚ ﻭﺑﺎﺩﻳﺘﻚ، ﻓﺄﺫﻧﺖ ﺑﺎﻟﺼﻼﺓ، ﻓﺎﺭﻓﻊ ﺻﻮﺗﻚ ﺑﺎﻟﻨﺪاء، ﻓﺈﻧﻪ «ﻻ ﻳﺴﻤﻊ ﻣﺪﻯ ﺻﻮﺕ اﻟﻤﺆﺫﻥ ﺟﻦ ﻭﻻ ﺇﻧﺲ ﻭﻻ ﺷﻲء ﺇﻻ ﺷﻬﺪ ﻟﻪ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ» ﻗﺎﻝ ﺃﺑﻮ ﺳﻌﻴﺪ: ﺳﻤﻌﺘﻪ ﻣﻦ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ*
_அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:_
_*🍃அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், "ஆட்டையும் பாலைவனத்தையும் விரும்புபவராக உங்களை நான் காண்கிறேன். நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ, அல்லது பாலைவனத்திலோ இருக்க (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும், பிற பொருள்களும் அதைக் கேட்டு அவருக்காக மறுமை நாüல் சாட்சி சொல்கின்றன'' என்று கூறிவிட்டு, "இதை நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டேன்'' என்று சொன்னார்கள்.*_
*📚 நூல்: புகாரி (3296) 📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment