பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள் - 8

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 08 ]*

*🕌 இறையில்லம்*
                      *அமைத்தல் 🕌*

*🏮🍂அல்லாஹ் மட்டுமே வணங்கப்படவும், துதிக்கப்படவும் பள்ளிவாசலை கட்டிட பொருளாதார உதவியை செய்பவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை பரிசாக அளிப்பதிலிருந்து சொர்க்கவாசிகளின் தகுதிகளில் இதுவும் அடங்கும் என்பதை புரியலாம்.*

حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَهُ أَنَّهُ، *سَمِعَ عُبَيْدَ اللَّهِ الْخَوْلاَنِيَّ، أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ صلى الله عليه وسلم إِنَّكُمْ أَكْثَرْتُمْ، وَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏مَنْ بَنَى مَسْجِدًا ـ قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ ـ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ، بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ ‏"*

_*🍃உஸ்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (நபியவர்களின் காலத்திலிருந்த அமைப்பை மாற்றி விரிவுபடுத்திக்) கட்டத் திட்டமிட்டபோது அது குறித்து மக்கள் (ஆட்சேபனை) கூறினர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்) “நீங்கள் (உங்கள் எதிர்ப்பை) அதிகமாக்கி விட்டீர்கள். யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றை சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன்” என்று கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர் :*
           *உபைதுல்லாஹ்*
              *அல்கவ்லானீ (ரஹ்),*

          *📚நூல் : புகாரி 450 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🕌 பள்ளியுடன் தொடர்பு 🕌*

*🏮🍂சொரக்கம் செல்லும் தகுதி பெற்றவர் பள்ளிவாசலுடன் அதிகத் தொடர்பில் இருப்பார் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.*

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنَ الْجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ ‏"*

_நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:_

_*🍃ஒருவர் பள்ளிவாசலுக்கு (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாளிகையை ஆயத்தப்படுத்துகிறான்.*_

*🎙️அறிவிப்பவர் :*
              *அபூஹூரைரா (ரலி),*

        *📚 நூல் : புகாரி 662 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment