பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

அல்லாஹ்* ⤵ *உருவமற்றவனா - 33

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*

      *🔥 அல்லாஹ்*
                                 ⤵
                    *உருவமற்றவனா❓*

           *✍🏻...தொடர் [ 33 ]*

*☄இறைவனைக்*
             *காண முடியுமா❓[ 06 ]*

*☄திருமுகம் காணும்*
            *அருட்பாக்கியம்*

*🏮🍂இவ்வாறு அல்லாஹ்வை மூன்று தடவை மக்கள் மஹ்ஷர் மைதானத்தில் காண்பார்கள்.* அல்லாஹ்வுடைய இந்தக் காட்சி இத்துடன் நின்று விடுவதில்லை. அந்தக் காட்சி சுவனத்திலும் தொடரும். *இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வைக் காண்கின்ற அந்த மகிழ்ச்சியில் திளைத்து இருப்பார்கள்.*

_*🍃அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.*_

*📖 (அல்குர்ஆன் 75:22, 23)📖*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்து விடும் போது (அவர்களிடம்) அல்லாஹ், "உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா❓'' என்று கேட்பான். அதற்கு அவர்கள் "(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா❓ எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)?'' என்று கேட்பார்கள்.*_

_*அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் காண்பதை விட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.*_

*🎙அறிவிப்பவர்:*
                  *சுஹைப் (ரலி),*

    *📚 நூல்: முஸ்லிம் 266 📚*

_*🍃நபி (ஸல்) அவர்கள், "நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமாகவும் உண்டு'' என்ற (10:26) வசனத்தை ஓதினார்கள். "சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்ததும், "சுவனவாசிகளே! (இதுவரை) உங்களுக்கு அளிக்கப்படாத ஒரு வாக்குறுதி உங்களுக்குக் காத்திருக்கின்றது'' என்று அழைப்பு விடுக்கப்படுவர். "அவன் எங்களது முகங்களை வெண்மையாக்கி, எங்களை சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா❓'' என்று அவர்கள் பதிலளிப்பார்கள். மீண்டும், "(இதுவரை) அளிக்கப்படாத வாக்குறுதி ஒன்று உங்களுக்குக் காத்திருக்கின்றது'' என்று அவர்களிடம் கூறப்படும். அவர்கள் அதே போன்று பதிலளிப்பார்கள். அப்போது, பாக்கியமிக்கவனும் உயர்ந்தோனுமான அவர்களது இறைவன் அவர்களுக்குத் தோன்றுவான். இது தான், "நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமாகவும் உண்டு'' என்ற (10:26) அல்லாஹ்வின் சொல்லாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "பாக்கியமிக்கவனும், உயர்ந்தோனுமாகிய தங்களின் இறைவனுடைய முகத்தைப் பார்ப்பதற்கு வாக்களிக்கப்படுகின்றது'' என்று விளக்கமளிக்கின்றார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                 *சுஹைப் (ரலி),*

*📚 நூல்: முஸ்னத்*
              *அல்பஸ்ஸார் 328📚*

_*🍃"சுவனவாசிகள், சுவனத்திற்குள் நுழைந்ததும், "சுவனவாசிகளே! அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு ஒரு வாக்குறுதி காத்திருக்கின்றது. அதை அவன் அவசியம் உங்களுக்கு நிறைவேற்றுவான்'' என்று ஓர் அழைப்பாளர் அழைப்பு விடுப்பார். "அவன் எங்கள் முகங்களை வெண்மையாக்க வில்லையா❓ எங்களுடைய எடைகளைக் கனமாக்கி, எங்களை சுவனத்தில் நுழைவித்து நரகத்திலிருந்து காக்கவில்லையா❓'' என்று அவர்கள் கேட்பார்கள். அப்போது அவன் திரையை விலக்குவான். அவர்கள் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த தங்களுடைய இறைவனின் முகத்தை அவர்கள் பார்ப்பார்கள். அவனைப் பார்ப்பதை விட வேறெதுவும் அவர்களுக்கு விருப்பமானதாகவும் கண்களுக்குக் குளிர்ச்சியானதாகவும் இருக்காது. அதிகம் என்பது இது தான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                *சுஹைப் (ரலி),*

*📚 நூல்: அர்ருஃயித்து லித்தாரகுத்னீ 112📚*

*🏮🍂இந்த ஹதீஸ்களிலும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் திருமுகத்தை சுவனத்தில் காண்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment