*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*
*🔥 அல்லாஹ்*
⤵
*உருவமற்றவனா❓*
*✍🏻...தொடர் [ 28 ]*
*☄இறைவனைக்*
*காண முடியுமா❓ [ 01 ]*
*🏮🍂இதுவரை, அல்லாஹ்வுக்கு முகம் இருக்கின்றது; கண்கள் இருக்கின்றன; காதுகள் இருக்கின்றன; கைகள் இருக்கின்றன; கால்கள் இருக்கின்றன; அதனால் ஏகனான அவனுக்கென்று திருவுருவம் இருக்கின்றது.* அவன் தகுதிக்கேற்ப அர்ஷில் அமர்ந்திருக்கின்றான். அவன் ஒரு போதும் அடியானுடன் ஒன்றாக மாட்டான். அடியானும் அல்லாஹ்வுடன் கலக்க முடியாது போன்ற விபரங்களைப் பார்த்தோம். *இத்தகைய தன்மைகளைக் கொண்ட அல்லாஹ்வை நாம் பார்க்க முடியுமா❓ எங்கு பார்க்கலாம்❓ நிச்சயமாக மறுமையில் தான் அவனைப் பார்க்க முடியும். இதை நாம் குர்ஆன், ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.*
_*🍃நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது, "என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார். அதற்கு (இறைவன்), "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது, "நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார்.*_
*📖 அல்குர்ஆன் 7:143 📖*
*🏮🍂இந்த வசனத்தில், மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்று கேட்ட போது, அவர்களுக்கு அல்லாஹ் மறுப்புத் தெரிவித்து விடுகிறான்.* "என்னை நீர் பார்க்கவே முடியாது' என்று கூறி விடுகின்றான். மூஸா (அலை) அவர்களால் *அல்லாஹ்வைப் பார்க்க முடியவில்லை என்பதைத் திருக்குர்ஆன் நமக்கு விளக்குகின்றது.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment