பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

அல்லாஹ்* ⤵ *உருவமற்றவனா - 27

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*

      *🔥 அல்லாஹ்*
                                ⤵
                    *உருவமற்றவனா❓*

           *✍🏻...தொடர் [ 27 ]*

*☄தூணிலும் இல்லை,*
        *துரும்பிலும் இல்லை [ 02 ]*

*✍🏻..நேற்றைய*
             *தொடரின்*
                    *தொடர்ச்சி*

*☄நபித் தோழர்கள் எங்கும்*
            *இருக்கிறார்களா❓*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து திரும்பி (வருகையில்) மதீனாவை நெருங்கிய போது, "மதீனாவில் மக்கள் சிலர் இருக்கின்றனர். (அவர்களால் உங்களுடன் புனிதப் போரில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும்) நீங்கள் செல்லும் பாதை, அல்லது நீங்கள் கடந்து செல்லும் பள்ளத்தாக்கு எதுவாயினும் அவர்களும் உங்களுடன் இருக்கின்றார்கள்'' என்று சொன்னார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் மதீனாவில் தானே இருக்கிறார்கள்❓'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், "அவர்கள் மதீனாவில் தான் இருக்கின்றார்கள்; அத்தியாவசியக் காரணங்கள் தாம் அவர்களை (இந்தப் புனிதப் போரில் கலந்து கொள்ள விடாமல்) தடுத்து விட்டன'' என்று பதிலüத்தார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
             *அனஸ் பின்*
                       *மாலிக் (ரலி)*

   *📚 நூல்: புகாரி 4423 📚*

*🏮🍂"உடன்' என்பதற்கு எல்லா இடத்திலும் நேரடி அர்த்தம் தான் கொடுக்க வேண்டும் என்றால்* இந்த ஹதீஸின்படி நபித்தோழர்கள் எங்கும் இருக்கிறார்கள் *என்ற மோசமான கருத்து வந்து விடும்.*

*🏮🍂நபி (ஸல்) அவர்களுடன் வராத ஸஹாபாக்களும், நபியவர்களுடன் தான் இருந்தார்கள் என்ற கருத்து வந்து விடும்.* எனவே இந்த இடத்தில் "மஅ' என்பதற்கு நேரடி அர்த்தம் கொடுக்க முடியாது. *இலக்கிய அர்த்தம் தான் கொடுக்க வேண்டும்.*

*🏮🍂போருக்கு வர வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார்கள்; ஆனால் நோய், வாகனமின்மை போன்ற காரணங்களால் வர முடியாமல் ஆகி விட்டார்கள்.* அவர்கள் போருக்கு வராமல் இருந்தாலும் அவர்களுக்கும் *உங்களைப் போன்ற கூலி உண்டு என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.*

*🏮🍂எனவே, எந்த இடத்தில் இலக்கிய அர்த்தம் கொடுக்க வேண்டுமோ அந்த இடத்தில் இலக்கிய அர்த்தம் தான் கொடுக்க வேண்டும்.* எந்த இடத்தில் நேரடிப் பொருள் கொடுக்க வேண்டுமோ அந்த இடத்தில் நேரடிப் பொருள் கொடுக்க வேண்டும். *இல்லையேல் அது வழிகேட்டில் கொண்டு போய் விட்டு விடும்.*

*🏮🍂மேற்கண்ட குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் கண்ட விளக்கங்களின் படி, வல்ல ரஹ்மான் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான்; அவன் அங்கிருந்து வருவதில்லை.* அல்லாஹ் மனிதர்களுடன் இருக்கிறான் என்று கூறப்படுவதன் பொருள் *அவனுடைய கண்காணிப்பு, உதவி, பாதுகாவல் அவர்களுடன் இருக்கிறது என்பதாகும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment