பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

மவ்லிதும் - மீலாதும் - 5

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*

    *🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*

              *✍🏻.....தொடர் ➖0️⃣6️⃣*

     *🌺ஆறாவது ஆதாரம்:🌺*

_மஸ்ஜிதுன் நபவியில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களும் ஸஹாபா பெருமக்களும் குழுமியிருந்த திருச்சபையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை ஸுஆத் என்ற அழகிய மங்கைக்கு ஒப்பிட்டு கஹ்ப் பின் சுஹைர் ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி கவிஞர் பாடிய போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மகிழ்ச்சியால் தனது மேனியில் இருந்த போர்வையை எடுத்து அந்த ஸஹாபியின் மேல் போர்த்தி அத்துடன் 100 ஓட்டகைகளையும் அன்பளிப்பாக வழங்கி கௌரவித்தார்கள்._

_📚ஹாகிம் – 3-578, ரத்துள் முஹ்தார் – 1-47, அகீததுஸ் சுன்னா 318📚_

*🏮🍂இதை மவ்லிதுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது குறித்து ஆராய்வோம்.*

_இந்தச் செய்தி ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (பாகம்: 3, பக்கம் :670)_

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص – (3 / 670)

 6477 – أخبرني أبو القاسم عبد الرحمن بن الحسين بن أحمد بن محمد بن عبيد بن عبد الملك الأسدي بهمدان ثنا إبراهيم بن المنذر الحزامي حدثني الحجاج بن ذي الرقيبة بن عبد الرحمن بن كعب بن زهير بن أبي سلمى المزني عن أبيه عن جده قال : خرج كعب و بجير ابنا زهير حتى أتيا أبرق العزاف فقال : بجير لكعب : اثبت في عجل هذا المكان حتى أتي هذا الرجل يعني رسول الله صلى الله عليه و سلم فاسمع ما يقول فثبت كعب و خرج بجير فجاء رسول الله صلى الله عليه و سلم فعرض عليه الإسلام فأسلم فبلغ ذلك كعبا فقال :

 ( ألا أبلغا عني بجيرا رسالة على أي شيء ويح غيرك دلكا )

 ( على خلق لم تلف أما و لا أبا عليه و لم تدرك عليه أخا لكا )

 ( سقاك أبو بكر بكأس روية و انهلك المأمون منها و علكا ) . . .

_*🍃இந்த செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளர் பலர் யாரென அறியப்படாதவர்கள். இதில் இடம்பெறும் இப்ராஹீம் பின் அல்முன்திர் என்பவரைத் தவிர வேறு யாரும் ஹதீஸ் துறையில் அறியப்படாதவர்கள்.*_

_*அப்துர்ரஹ்மான், துர்ரகீபா, ஹஜ்ஜாஜ் ஆகியோரின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப் படவில்லை. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.*_

_*இந்தச் செய்தி தொடர்பாக ஹாபிழ் இராக்கீ அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.*_

تحفة الأحوذي – (1 / 351)

وَقَدْ مَدَحَ فِيهِ كَعْبُ بْنُ زُهَيْرٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : بَانَتْ سُعَادُ فَقَلْبِي الْيَوْمَ مَتْبُولُ . إِلَى قَوْلِهِ فِي صِفَةِ رِيقِهَا : كَأَنَّهُ مَنْهَلٌ بِالرَّاحِ مَعْلُولُ . قَالَ الْعِرَاقِيُّ : وَهَذِهِ قَصِيدَةٌ قَدْ رَوَيْنَاهَا مِنْ طُرُقٍ لَا يَصِحُّ مِنْهَا شَيْءٌ ، وَذَكَرَهَا اِبْنُ إِسْحَاقَ بِسَنَدٍ مُنْقَطِعٍ وَعَلَى تَقْدِيرِ ثُبُوتِ هَذِهِ الْقَصِيدَةِ عَنْ كَعْبٍ وَإِنْشَادِهِ بَيْنَ يَدَيْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَيْسَ فِيهَا مَدْحُ الْخَمْرِ وَإِنَّمَا فِيهِ مَدْحُ رِيقِهَا وَتَشْبِيهِهِ بِالرَّاحِ اِنْتَهَى .

_*🍃இந்தக் கவிதைகளைப் பல வழிகளில் நாம் பதிவு செய்துள்ளோம். ஆனால் அவற்றில் எதுவுமே ஆதாரப்பூர்வமானவை இல்லை.*_

*📚(நூல்: துஃபத்துல் அஹ்வதீ, பாகம்: 1, பக்கம்: 351)📚*

_இப்னு கஸீர் அவர்களும் இதே கருத்தை பதிவு செய்துள்ளார்கள்._

البداية والنهاية – (4 / 429)

قلت: وهذا من الامور المشهورة جدا ولكن لم أر ذلك في شئ من هذه الكتب المشهورة باسناد أرتضيه فالله أعلم.

_*இந்தச் செய்தி மிகவும் பிரபலமானது. ஆனால் பிரபலமான எந்த நூலிலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ள அறிவிப்பாளர் வரிசையுடன் நான் பார்க்கவில்லை.*_

*📚(நூல்: அல்பிதாயா வந்நிஹாயா,பாகம்:4, பக்கம்: 429)📚*

*🏮🍂மேலும் தன்னை நபிகளார் எப்படி ஒரு அழகிய பெண்ணுடன் ஒப்பிட்டுப் பாடுவதை அனுமதிப்பார்கள்❓ என்ற கேள்வியும் அதில் உள்ளடங்கியுள்ளது.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment