*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*
*🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*
*✍🏻.....தொடர் ➖0️⃣3️⃣*
*👇 மூன்றாவது ஆதாரம் 👇*
*🏮🍂ஸுவைபா அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்தபோது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார்.* அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம் (மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. *ஆயினும் நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது என்று கூறினார்.*
_ஹழ்ரத் உர்வா (ரலியல்லாஹு அன்ஹு)_
*📚ஸஹீஹுல் புகாரி – 5101📚*
*🏮🍂மவ்லித் ஓதலாம், மீலாது விழக்கள் எடுக்கலாம் என்பதற்கு எடுத்துக் காட்டும் அடுத்த ஆதாரம் இது.*
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (7 / 12(
5101- حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، *قَالَ : أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ أَخْبَرَتْهَا أَنَّهَا قَالَتْ : يَا رَسُولَ اللهِ انْكِحْ أُخْتِي بِنْتَ أَبِي سُفْيَانَ فَقَالَ أَوَتُحِبِّينَ ذَلِكَ فَقُلْتُ نَعَمْ لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي خَيْرٍ أُخْتِي فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ ذَلِكَ لاَ يَحِلُّ لِي قُلْتُ فَإِنَّا نُحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ بِنْتَ أَبِي سَلَمَةَ قَالَ بِنْتَ أُمِّ سَلَمَةَ قُلْتُ نَعَمْ فَقَالَ لَوْ أَنَّهَا لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حَجْرِي مَا حَلَّتْ لِي إِنَّهَا لاَبْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ فَلاَ تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ ، وَلاَ أَخَوَاتِكُنَّ قَالَ عُرْوَةُ وَثُوَيْبَةُ مَوْلاَةٌ لأَبِي لَهَبٍ كَانَ أَبُو لَهَبٍ أَعْتَقَهَا فَأَرْضَعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَلَمَّا مَاتَ أَبُو لَهَبٍ أُرِيَهُ بَعْضُ أَهْلِهِ بِشَرِّ حِيبَةٍ قَالَ لَهُ مَاذَا لَقِيتَ قَالَ أَبُو لَهَبٍ لَمْ أَلْقَ بَعْدَكُمْ غَيْرَ أَنِّي سُقِيتُ فِي هَذِهِ بِعَتَاقَتِي ثُوَيْبَةَ.*
_அறிவிப்பாளர் உர்வா அவர்கள் கூறுகின்றார்கள்:_
_*🍃ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்த போது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம், (மரணத்திற்குப் பிறகு) நீ எதிர் கொண்டது என்ன❓ என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது என்று கூறினார்.*_
*📚 நூல் : (புகாரி 5010) 📚*
*🏮🍂இந்தச் செய்தி நபிகளார் சொன்ன செய்தி கிடையாது. மேலும் நபிகளார் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் அறிவித்ததும் கிடையாது.*
*🏮🍂உர்வா என்ற தாபியீ அறிவித்த செய்தியாகும். இவர் நபித்தோழர் காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். இவர் நபிகளார் பிறந்த தினத்தில் நடந்த செய்தியை அறிந்தவரும் இல்லை. இவரின் கருத்து மார்க்கத்தின் ஆதாரமாகவும் அமையாது.*
*🏮🍂மேலும் இந்தச் செய்தியிலும் இவர்கள் ஓதும் மவ்லித் ஓதலாம் என்பதற்கு எந்த சான்றும் இல்லை.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment