*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*
*🔥 அல்லாஹ்*
⤵
*உருவமற்றவனா❓*
*✍🏻...தொடர் [ 30 ]*
*☄இறைவனைக்*
*காண முடியுமா❓[ 03 ]*
*☄நபி (ஸல்) அவர்கள்*
*அல்லாஹ்வைப்*
*பார்த்தார்களா❓[ 02 ]*
_*🍃நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) "அபூ ஆயிஷாவே, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார் என்று கூறினார்கள். அவை எவை❓ என்று கேட்டேன் அதற்கு அவர்கள், "யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்'' என்று சொன்னார்கள். உடனே சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, "இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே, நிதானித்துக் கொள்ளுங்கள். அவசரப்படாதீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்'' (81:23) என்றும் "அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்'' (53:13) என்றும் கூறவில்லையா❓'' என்று கேட்டேன். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.*_
_*இந்தச் சமுதாயத்தில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான் தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப் பெற்றுள்ள (உண்மைத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறேப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரம்மாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது'' என்று கூறினார்கள்.*_
_*மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா❓ என்று கேட்டார்கள்.*
_*🍃அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (6:103)*_
_அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா❓_
_*"வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.'' (42:51)*_
_(பின்னர் தொடர்ந்து மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்)_
*🎙அறிவிப்பவர்:*
*மஸ்ரூக்,*
*📚 நூல்: முஸ்லிம் 287 📚*
*🏮🍂இந்த ஹதீஸ்கள் மூலம் நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போதும் மற்ற சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்பது தெளிவாகின்றது.*
*🏮🍂இறைத்தூதர்களுக்கே இவ்வுலகில் அல்லாஹ்வைப் பார்க்கும் வாய்ப்புக் கிடையாது எனும் போது* மற்றவர்களுக்கு நிச்சயமாக அந்த வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகின்றது. *இருப்பினும் யாராலும் இவ்வுலகில் இறைவனைக் காண முடியாது என்று முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ் தெளிவுபடுத்தி விடுகின்றது.*
_*🍃"உங்களில் எவரும் அவர் இறக்காத வரை தன் இறைவனைப் பார்க்க முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*📚 நூல்: முஸ்லிம் 5215 📚*
*🏮🍂இந்த ஹதீஸ் சந்தேகமில்லாமல் அல்லாஹ்வை இந்தவுலகில் காண முடியாது என்பதைத் தெரிவிக்கின்றது.*
_மறுமையில் இறைவனைக் காண முடியும் என திருக்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. அதைப்பற்றி நாளைய தொடரில் பார்ப்போம்._
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment