பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள்🍃* - 6

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 06 ]*

     *🍃 இனிய பண்புகள் 🍃*

*🏮🍂திருக்குர்ஆனின் மேலும் சில இடங்களில் அல்லாஹ் சொர்க்கவாசிகளின் பண்புகளை, சொர்க்கம் செல்ல தகுதியானவர்களை மிக விரிவாகவே விளக்குகிறான்.பல்வேறு குணங்களை குறிப்பிட்டு அவை யாவும் சொர்க்கம் செல்ல விரும்புவோரிடம் குடிகொண்டிருக்கும் என்பதாக அல்லாஹ் தெரிவிக்கிறான்.*

_*🍃அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்கள்.உடன்படிக்கையை முறிக்க மாட்டார்கள்.இணைக்கப்பட வேண்டும் என அல்லாஹ் கட்டளை இட்டவற்றை (உறவினரை) இணைத்துக் கொள்வார்கள்; தமது இறைவனுக்கு அஞ்சுவார்கள்; கடுமையான விசாரணைக்கும் அஞ்சுவார்கள்.அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள்.ஹதொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள்.அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு. அவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள்.வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும் அவர்களிடம் வருவார்கள். நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு) நல்லதாக உள்ளது (என்று வானவர்கள் கூறுவார்கள்).*_

*📖அல்குர்ஆன் 13 : 20,21,22,23,24*

_🏮🍂அல்முஃமினூன் எனும் 23வது அத்தியாயத்தின் துவக்கத்தில் முஃமின்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று சொல்லிவிட்டு அந்த வெற்றிக்கு வித்திட்ட குணங்கள் யாவை என்பதை அல்லாஹ் பட்டியலிட்டு கூறுகிறான்._ இவைகள் தான் முஃமின்களை வெற்றி பெறச் செய்து சொர்க்கம் நுழைய தகுதியாக்கியது என்று பின்வரும் வசனங்கள் சான்றளிக்கின்றன.

_*🍃நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்.*_

_*(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள்.அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள்.பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.*_

*📖 அல்குர்ஆன் 23:1 11 📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment