பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

மவ்லிதும் - மீலாதும் - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*

   *🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*

              *✍🏻.....தொடர் ➖0️⃣2️⃣*

*☄️இரண்டாவது ஆதாரம்:*

*🏮🍂நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களிடம் திங்கட்கிழமை நோன்பு நோற்பதன் காரணம் பற்றி வினவப்பட்ட போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அன்றைய தினத்தில் தான் நான் பிறந்தேன். மேலும் அன்று தான் என் மீது வஹீ இறக்கப்பட்டது.*

_ஸஹிஹுல் முஸ்லிம் 1162 – 198, முஸ்னத் அஹ்மத் 5- 299, மிஷ்காத் 2045_

_மீலாதும் மவ்லிதும் ஓதுவதற்கு அவர்கள் காட்டும் இரண்டாவது ஆதாரம் இது._

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (3 / 168)

وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ حَدَّثَنَا مَهْدِىُّ بْنُ مَيْمُونٍ عَنْ غَيْلاَنَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِىِّ *عَنْ أَبِى قَتَادَةَ الأَنْصَارِىِّ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- سُئِلَ عَنْ صَوْمِ الاِثْنَيْنِ فَقَالَ « فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَىَّ*.

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு “அன்று தான் நான் பிறந்தேன்; அதில் தான் எனக்குக் குர்ஆன் (முதன் முதலில்) அருளப்பெற்றது’’ என்று கூறினார்கள்.*_

   *📚 நூல் : (முஸ்லிம் 2153) 📚*

*🏮🍂திங்கட்கிழமை நோன்பு நோற்பது தொடர்பாக கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் அந்த நாளில் தான் பிறந்ததாகவும், அந்த நாளில் தான் திருக்குர்ஆன் இறங்கியதாகவும் விளக்கம் அளிக்கிறார்கள்.*

*🏮🍂இந்தச் செய்தியிலிருந்து என்ன விளங்கலாம். திங்கட்கிழமை நோன்பு நோற்கலாம்; நபிகளார் அனுமதி வழங்கியுள்ளார்கள் என்று விளங்கலாமே தவிர ரபீவுல் அவ்வல் மாதம் மவ்லித் ஓதலாம், மீலாது விழா எடுக்கலாம் என்று எந்த அறிவாளியும் விளங்குவானா❓*

*🏮🍂இதில் சொல்லப்பட்ட முக்கிய விஷயமானது நோன்பாகும். நபிகளார் பிறந்த நாளாக இவர்களால் கருதப்படும் ரபீவுல் அவ்வல் 12ல் இவர்கள் நோன்புதான் நோற்கிறார்களா❓* அன்று தான் கறிச்சோறு ஆக்கி சாப்பிடுகிறார்கள்.

*🏮🍂இந்தச் செய்தியை ஆதாரம் காட்டும் இவர்கள் திங்கட்கிழமை மட்டும் மவ்லீத் ஓதுகிறார்களா❓ இந்தச் செய்தி மவ்லிதைப் பற்றிப் பேசவில்லை என்பது வேறு விஷயம்.*

*🏮🍂எப்படி இந்த நபிமொழியை ஆதாரம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.*

*🏮🍂இந்தச் செய்தியில் ரபீவல் அவ்வல் மாதத்தைப் பற்றியும் பேசவில்லை, மவ்லித் ஓதுவதைப் பற்றியும் பேசவில்லை, மீலாது விழாக் கொண்டாவது பற்றியும் பேசவில்லை என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்வார்கள்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment