பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

அல்லாஹ்* ⤵ *உருவமற்றவனா❓ - 25

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*

      *🔥 அல்லாஹ்*
                                 ⤵
                    *உருவமற்றவனா❓*

           *✍🏻...தொடர் [ 25 ]*

*☄அர்ஷில் அமர்ந்திருக்கும்*
                    *அல்லாஹ் [ 07 ]*

*☄அர்ஷைச் சுமப்போரின்*
              *அற்புத ஆற்றல்*

_*🍃"அர்ஷைச் சுமக்கக் கூடிய அல்லாஹ்வின் மலக்குகளில் ஒரு மலக்கைப் பற்றி அறிவிக்குமாறு எனக்கு அனுமதியளிக்கப்பட்டது. அவருடைய காது சோணையிலிருந்து தோள் புஜம் வரை உள்ள அளவு எழுநூறு ஆண்டு தூரமாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                  *ஜாபிர் (ரலி)*

*📚 நூல்: அபூதாவூத் 4102 📚*

_*🍃"அல்லாஹ்வின் மகிமைக(ளைக் கூறும் வார்த்தைக)ளில், நீங்கள் கூறுகின்ற, "சுப்ஹானல்லாஹி லாயிலாஹ இல்லல்லாஹு அல்ஹம்துலில்லாஹ்' ஆகிய திக்ருகள் அர்ஷைச் சுற்றி வலம் வருகின்றன. அவற்றிற்கு தேனீக்களைப் போன்ற ரீங்காரம் இருக்கின்றது. திக்ருகள் கூறியவரின் பெயரை அவை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. தன்னை இவ்வாறு தொடர்ந்து கூறிக் கொண்டிருப்பவர்கள் இருக்க வேண்டும் என்று உங்களில் ஒருவர் விரும்பாமல் இருப்பாரா❓'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
              *நுஃமான் பின்*
                         *பஷீர் (ரலி)*

*📚 நூல்: இப்னுமாஜா 3799 📚*

_*🍃வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, அர்ஷைச் சுற்றி வருவதை நீர் காண்பீர். அவர்களுக்கிடையே நியாயத் தீர்ப்பு வழங்கப்படும். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறப்படும்.*_

   *📖அல்குர்ஆன் 39:75📖*

_*🍃அர்ஷைச் சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர். எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டுக் காப்பாயாக! என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.*_

   *📖 அல்குர்ஆன் 40:7 📖*

*🏮🍂இவை அனைத்தும் அர்ஷ் என்பது மிகப் பெரிய பரிமாணத்தைக் கொண்ட பிரம்மாண்ட ஆசனம் என்பதையும்,* வானவர்களும் மனிதர்களும் செய்கின்ற திக்ருகள் அதனைச் சுற்றி வலம் வருகின்றன என்பதையும், *இத்தகைய மகத்தான அர்ஷின் மீது தான் அல்லாஹ் அமர்ந்திருக்கின்றான் என்பதையும் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment