*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*
*🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*
*✍🏻.....தொடர் ➖0️⃣8️⃣*
*🌺ஒன்பதாவது ஆதாரம்:🌺*
_அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:_
_🍃திடமாக எனக்குப் பல பெயர்கள் உள்ளன, நான் “முஹம்மத்” (புகழபடுபவன்), நான் “அஹ்மத்” (அல்லாஹ்வினால் அதிகம் புகழப்பட்டவன்), நான் “மாஹி” (குப்ரை அழிப்பவன்). நான் “ஹாஷிர்” (எனக்குப் பின்னால் என் வழி தொடரும் சமுதாயம் கொண்டிருப்பவன்), நான் “ஆகிப்” (எனக்குப் பின்னால் எந்த நபியும் இல்லாது இருப்பவன்)._
_🎙️ஹழ்ரத் ஜுபைர் பின் முத்இம் ரழியல்லாஹு அன்ஹு_
_📚ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹுல் முஸ்லிம் – 2849, திர்மிதி, அஹ்மத்📚_
_இவர்கள் குறிப்பிடும் செய்தி இதுதான் :_
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (4 / 225)
3532- حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ ، قَالَ : حَدَّثَنِي مَعْنٌ ، عَنْ مَالِكٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، *عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ، عَنْ أَبِيهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ وَأَحْمَدُ وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الْكُفْرَ وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي وَأَنَا الْعَاقِبُ.*
_*🍃எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது -புகழப்பட்டவர்- ஆவேன். நான் அஹ்மத் -இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ- அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் ஹாஷிர்- ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத் தூதர்களில்) இறுதியானவர் ஆவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙️அறிவிப்பவர்:*
*ஜுபைர் பின்*
*முத்இம் (ரலி)*
*📚நூல்: புகாரி (3532)📚*
*🏮🍂நபி (ஸல்) அவர்கள் முஹம்மத் (புகழப்பட்டவர்) என்பதால் மவ்லித் ஓதலாம் என்று சொல்ல முடியுமா❓ அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் நபிகளாரைப் புகழ்ந்து பாராட்டியுள்ளான்.* அல்லாஹ் எந்த எல்லையில் நிறுத்தி நபிகள் நாயகம் அவர்களைப் புகழ்கிறானோ அதைக் கடந்து புகழ்வது சரியாகாது.
*🏮🍂நபி (ஸல்) அவர்களைக் கடவுள் நிலைக்குக் கொண்டு செல்ல முடியுமா❓ இறைவனின் சக்தி அவர்களுக்கு உள்ளது என்று சொல்ல முடியுமா❓*
_*🍃“இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்’’ என்று கூறுகின்றனர்.*_
_*அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும்.*_
_*🍃அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.*_
_*அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) “என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!*_
*📖(அல்குர்ஆன் 17:90-93)📖*
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، يَقُولُ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، *عَنِ ابْنِ عَبَّاسٍ، سَمِعَ عُمَرَ ـ رضى الله عنه ـ يَقُولُ عَلَى الْمِنْبَرِ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لاَ تُطْرُونِي كَمَا أَطْرَتِ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ "*
_*🍃நபி (ஸல்) அவர்கள், கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘அல்லாஹ்வின் தூதர்’ என்றும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள் என மிம்பரின் மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.*_
*🎙️அறிவிப்பவர்:*
*இப்னு அப்பாஸ் (ரலி)*
*📚நூல்: புகாரி (3445)📚*
*🏮🍂நபிகளாரைப் புகழ்வதாக இருந்தால் வரம்புக்கு உட்பட்டே புகழ வேண்டும் என்பதே திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறும் உறுதியான அறிவுரை. ஆனால் மவ்லித்களில் இந்த வழிகாட்டுதலை மீறி வரம்பு கடந்த புகழுரை தானே இடம் பெற்றுள்ளது.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment