*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*
*🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*
*✍🏻.....தொடர் ➖0️⃣4️⃣*
*🌺நான்காவது ஆதாரம் :🌺*
*🏮🍂நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களால் அமைக்கப்பட்ட தனி மேடையில் (மிம்பரில்) நின்று ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து கவிதை பாட, அதனைக் கேட்டு மகிழ்ந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் “அல்லாஹ்வின் தூதரை புகழும் காலமெல்லாம், ரூஹுல் குத்ஸியை (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்) அவர்களை கொண்டு ஹஸ்ஸானை நிச்சயமாக அல்லாஹ் வலிமைப்படுத்துவானாக! என்று கூறி ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வாழ்த்தினார்கள்.*
*📚ஸஹிஹுல் புகாரி📚*
*🏮🍂புகாரியில் இடம்பெறும் செய்தியில் பல கைவேலைகளைக் காட்டியுள்ளார்கள். புகாரியில் இடம்பெறும் செய்தியைக் கவனமாக படியுங்கள்.* இவர்களில் புரட்டுக்கள் வெளிப்படும்.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (8 / 45(
6152- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ ، قَالَ : حَدَّثَنِي أَخِي ، عَنْ سُلَيْمَانَ ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، *عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ سَمِعَ حَسَّانَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ فَيَقُولُ يَا أَبَا هُرَيْرَةَ نَشَدْتُكَ بِاللَّهِ هَلْ سَمِعْتَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ يَا حَسَّانُ أَجِبْ عَنْ رَسُولِ اللهِ اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ قَالَ أَبُو هُرَيْرَةَ نَعَمْ.*
_*🍃(கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், ‘‘அபூஹுரைரா! அல்லாஹ்வை முன்னிறுத்தி உங்களிடம் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் சார்பாக (எதிரிகளுக்குக் கவிதைகள் மூலம்) பதிலடி கொடுப்பீராக. இறைவா! தூய ஆன்மா (ஜிப்ரீல்) மூலம் ஹஸ்ஸானை வலுப்படுத்துவாயாக!’ என்று கூறியதை நீங்கள் செவியுற்றீர்கள் அல்லவா❓ என்று விவரம் கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள்.*_
*📚நூல் : (புகாரி 6152) 📚*
6153- حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ ، *عَنِ الْبَرَاءِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : لِحَسَّانَ اهْجُهُمْ ، أَوْ قَالَ هَاجِهِمْ – وَجِبْرِيلُ مَعَكَ.*
_*🍃நபி (ஸல்) அவர்கள் (பனூகுறைழா போரின் போது, கவிஞர்) ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம், எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். (வானவர்) ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார் என்று கூறினார்கள்.*_
*📚 நூல் :புகாரி 6153 📚*
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (8 / 44)
6150- حَدَّثَنَا مُحَمَّدٌ ، حَدَّثَنَا عَبْدَةُ ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، *عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتِ اسْتَأْذَنَ حَسَّانُ بْنُ ثَابِتٍ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فِي هِجَاءِ الْمُشْرِكِينَ ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَكَيْفَ بِنَسَبِي فَقَالَ حَسَّانُ لأَسُلَّنَّكَ مِنْهُمْ كَمَا تُسَلُّ الشَّعَرَةُ مِنَ الْعَجِينِ.*
_*🍃இணைவைப்பாளர்களைத் தாக்கி வசைக் கவி பாட (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குறைஷியரான அவர்களுடன் பின்னிப் பிணைந்துள்ள) என் வமிசப் பரம்பரையை என்ன செய்வாய்❓ என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், குழைத்த மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போன்று தங்களை(யும் தங்கள் வமிசப் பரம்பரையையும் வசையிலிருந்து) உருவியெடுத்துவிடுவேன் என்று பதிலளித்தார்கள்.*_
*📚நூல்: புகாரி 6150📚*
*🏮🍂ஏகத்துவ எதிரிகளான இணைப்பவர்களைத் தாக்கியும் ஏகத்துவக் கொள்கைகளை உயர்த்தியும் பாடிய கவிதைகளை இவர்கள் மவ்லித் ஓதுவதற்கு ஆதாரமாகக் காட்டுவது வியப்பளிக்கிறது.*
*🏮🍂நபிகளாரைப் புகழ்ந்து கொண்டிருக்க ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் அனுமதி கேட்கவில்லை. இணைவைப்பவர்களை வார்த்தைகளால் வெட்டி வீழ்த்தவே அனுமதி கேட்டார்கள். அதற்குத்தான் நபிகளார் அனுமதியும் வழங்கி ஜிப்ரீல் (அலை) அவர்களின் உதவியும் உண்டு என்று குறிப்பிட்டார்கள்.*
*🏮🍂ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் நபிகளாரைப் பார்த்து, ‘நீங்கள் தான் பாவங்களை மன்னிப்பவர்கள்’ என்று பாடினார்களா? ‘எங்கள் பாங்களை மன்னித்துவிடுங்கள்’ என்று கோரிக்கை வைத்தார்களா❓*
*🏮🍂அல்லது ‘என்னை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே!* இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்’ என்ற இணைவைப்பு பாடல்களை பாடினார்களா❓
*🏮🍂மவ்லிதுக்கு ஆதாரம் என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்களின் செய்திகளை ஆதாரம் காட்டுபவர்கள், அவர்கள் பாடிய வரிகளைப் பாடாமல் சுப்ஹான மவ்லித் வரிகளை ஏன் பாடுகிறார்கள்❓*
*🏮🍂இந்தச் செய்திகள் நல்ல கவிதைகள் பாடத் தடையில்லை என்ற கருத்தைத் தான் தருகிறது. மவ்லித் ஓதுவதற்கோ, மீலாத் விழாக் கொண்டாடுவதற்கோ அனுமதியளிக்கவில்லை.*
*🏮🍂புகாரியில் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்குத் தனிமேடை நபிகளார் அமைத்துக் கொடுத்து பாடச் சொன்னார்கள் என்று இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment