*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🍃சுவனத்தில்*
*நுழைவதற்க்கான*
*தகுதிகள்🍃*
*✍🏻....தொடர்... [ 02 ]*
*☄️உறுதியான*
*நம்பிக்கை*
*🏮🍂நம்பிக்கை கொண்டால் மாத்திரம் போதாது. கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருப்பதும் மிக முக்கியமானதாகும்.*
*إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ*
_*🍃எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பின்னர் உறுதியாகவும் நின்றோருக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்களே சொர்க்கவாசிகள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாகும்.*_
*📖அல்குர்ஆன் 46:13,14📖*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*🤲 இறைவனிடம்*
*இறைஞ்சுதல் 🤲*
*🏮🍂சில இடங்களில் சொர்க்கம் நுழைய அல்லாஹ்விடம் இறைஞ்சுதல், தர்மம் செய்தல் போன்ற தகுதியும் வேண்டும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.*
*تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ*
_*🍃அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும்.நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.*_
*📖 அல்குர்ஆன் 32 16, 17📖*{
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment