பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள் - 3

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 03 ]*

               *☄️ பொறுமை ☄️*

*🏮🍂சொர்க்கம் செல்ல பொறுமை எனும் தகுதியும் மிக அவசியம். இதையும் சொர்க்கவாசிகளின் பண்பாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்*.

*وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُبَوِّئَنَّهُم مِّنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ نِعْمَ أَجْرُ الْعَامِلِينَ الَّذِينَ صَبَرُوا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ*

_*🍃நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.உழைத்தோரின் கூலி அழகானது. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்.தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.*_

*📖அல்குர்ஆன் 29:58, 59📖*

*🏮🍂பின்வரும் செய்தியிலிருந்தும் பொறுமை சொர்க்கவாசிகளுக்குரிய தகுதி என்பதை அறியலாம்.*

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِنِسْوَةٍ مِنَ الأَنْصَارِ ‏‏ لاَ يَمُوتُ لإِحْدَاكُنَّ ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ فَتَحْتَسِبَهُ إِلاَّ دَخَلَتِ الْجَنَّةَ ‏"‏ ‏.‏ فَقَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ أَوِ اثْنَيْنِ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ أَوِ اثْنَيْنِ ‏"‏ ‏.‏"*

_*🍃(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிப் பெண்களிடம், “உங்களில் ஒருவருடைய மூன்று பிள்ளைகள் (பருவ வயதை அடைவதற்குமுன்)அ இறந்தும் அப்பெண் நன்மையை எதிர்பார்(த்து பொறுமை கா)த்தால், அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்.*_

_*அப்போது அப்பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! இரு பிள்ளைகள் இறந்தாலுமா❓” என்று கேட்டார். “இரு பிள்ளைகள் இறந்தாலும்தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்*
                *அபூஹூரைரா (ரலி),*

         *📚முஸ்லிம் 5129📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment