*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*
*🔥 அல்லாஹ்*
⤵
*உருவமற்றவனா❓*
*✍🏻...தொடர் [ 34 ]*
*☄இறைவனைக்*
*காண முடியுமா❓[ 07 ]*
*☄நேரடியாகக் காணுதல்☄*
*🏮🍂எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் எந்தவிதமான திரையும் தடையும் இருக்காது.*
_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் இறைவனை (மறுமையில்) கண்கூடாகக் காண்பீர்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*ஜரீர் பின்*
*அப்தில்லாஹ் (ரலி),*
*📚 நூல்: புகாரி 7435 📚*
_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமை நாளில் தனித் தனியாகப்) பேசாமலிருக்க மாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்; தடுக்கின்ற திரையும் இருக்காது.*_
*🎙அறிவிப்பவர்:*
*அதீ பின்*
*ஹாத்திம் (ரலி),*
*📚 நூல்: புகாரி 7443 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄யாருக்கு இந்தப் பாக்கியம்❓*
*🏮🍂அல்லாஹ்வைக் காணும் இந்த மகத்தான பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.* யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கவில்லையோ அவர்களுக்குத் தான் இந்த அருட்பாக்கியம் கிடைக்கும். *இதைத் திருக்குர்ஆன் தெளிவாக அறிவித்து விடுகின்றது.*
_*🍃"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்' என்று (முஹம்மதே!) கூறுவீராக!*_
*📖 (அல்குர்ஆன் 18:110) 📖*
*🏮🍂இணை வைக்காமல் இருந்தால் மட்டும் போதாது. நல்லமல் செய்பவர்களாகவும் தொழுகைகளைப் பேணித் தொழுபவர்களாகவும் இருக்க வேண்டும்.*
_*🍃(முழு நிலவுள்ள ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்து கொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழுநிலவைக் கூர்ந்து பார்த்தபடி, "இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் வெüவேலைகள் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்'' என்று கூறிவிட்டு "சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள்'' எனும் (50:39ஆவது) இறை வசனத்தை ஓதினார்கள்.*_
*🎙அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி),*
*📚 நூல்: புகாரி 554, 573, 4851, 7434 📚*
*🏮🍂இந்த இனிய இறை தரிசனத்தைக் கேட்டுப் பிரார்த்திக்கவும் வேண்டும். இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரார்த்தனையையும் கற்றுத் தந்திருக்கிறார்கள்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment