பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

அல்லாஹ்* ⤵ *உருவமற்றவனா❓ - 32

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*

      *🔥 அல்லாஹ்*
                                 ⤵
                    *உருவமற்றவனா❓*

           *✍🏻...தொடர் [ 32 ]*

*☄இறைவனைக்*
             *காண முடியுமா❓[ 05 ]*

*✍🏻...நேற்றைய*
                  *தொடரின்*
                         *தொடர்ச்சி*

      *☄ முதல் தோற்றம் ☄*

*🏮🍂இந்த ஹதீஸில் "முண்டியடிக்காமல் காண்பீர்கள்' என்பதிலிருந்து, முதலிலேயே ஒரு தோற்றத்தில் அல்லாஹ் தோன்றி காட்சியளிக்கிறான்.* அந்தக் காட்சி தான் இறை நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் பதிந்து விடுகின்றது.

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄இரண்டாவது தோற்றம்☄*

*🏮🍂இதற்குப் பிறகு இரண்டாவது தடவையாக, முதல் தடவைக்குச் சற்று வித்தியாசமான வேறொரு தோற்றத்தில் தோன்றுகிறான்.* இதை நாம், "அவர்கள் ஏற்கனவே (அல்லது முதலில்) பார்த்த தோற்றத்திற்கு நெருக்கமான (வேறு) ஒரு தோற்றத்தில் தூயவனும் உயர்ந்தோனுமாகிய *அகிலத்தாரின் இரட்சகன் அவர்களிடம் வருவான்'' என்பதிலிருந்து இதை விளங்கிக் கொள்ளலாம்.*

*🏮🍂இவ்வாறு அவன் முதல் தோற்றத்திற்கு சற்று நெருக்கமான வேறு தோற்றத்தில் வருவதால் தான் இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகின்றார்கள்;* தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றார்கள். அப்போது தான் அல்லாஹ், *அவர்களிடம் அடையாளத்தையும் ஆதாரத்தையும் கேட்கிறான். அவர்களும் பதில் சொல்கின்றார்கள்.*

*🏮🍂"ஏற்கனவே பார்த்த' என்று இந்த ஹதீஸின் வாக்கியப் பின்னணி மூலம் அல்லாஹ், இரண்டாவது தடவையாகக் காட்சியளிக்கிறான்* என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளங்கிக் கொள்ளலாம். *இதற்குப் பின்னால் வருகின்ற வாக்கிய அமைப்பு இன்னும் இதைத் தெளிவாக விளக்குகின்றது.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄மூன்றாவது தோற்றம்☄*

*🏮🍂பின்னர், "அவர்கள் தம் தலையை உயர்த்துவார்கள்; அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்திற்கு இறைவன் திரும்பி, "நானே உங்கள் இறைவன்'' என்று கூறுவான். அதற்கு அவர்கள், "நீயே எங்கள் இறைவன்'' என்று கூறுவார்கள்.*

*🏮🍂அதாவது இரண்டாவது தடவையாகத் தோன்றுவதற்கு முன்பாக, முதலில் ஒரு தடவை தோற்றமளித்து விட்டான் என்பதை இந்த வாசகமும் தெளிவாக நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.* மொத்தத்தில் அல்லாஹ் மூன்று முறை தோற்றமளிக்கின்றான் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

_மறுமையில் அல்லாஹ் காட்சியளிப்பது தொடர்பான இந்த ஹதீஸ் புகாரியில் 806, 6574, 7438, 4581, 7440 ஆகிய எண்களிலும், முஸ்லிமில் 267, 269 ஆகிய எண்களிலும் பதிவாகியுள்ளது. ஆனால் முஸ்லிமில் பதிவாகியுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் இம்மூன்று காட்சிகள் விளக்கமாக இடம் பெற்றிருப்பதால் இதை நாம் இங்கு குறிப்பிட்டுள்ளோம்._

*🏮🍂இந்த ஹதீஸ்களில் புகாரி 4851, 7440 ஹதீஸ்களிலும், முஸ்லிம் 269 ஹதீஸிலும், "அல்லதீ ரஅவ்ஹு - முதலில் பார்த்த தோற்றத்தில்' என்று இடம் பெறுகின்றது. புகாரி, முஸ்லிமின் தமிழாக்கங்களில் (அவனின் தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றத்தில்....'' என்று இதற்கு மொழியாக்கம் செய்கின்றனர்.*

*🏮🍂அதாவது, "பார்த்த' என்று மொழிபெயர்ப்பதற்குப் பதிலாக, "உள்ளத்தில் நினைத்திருந்த' என்று மொழிபெயர்த்துள்ளனர்.* இப்படி இவர்கள் சொல்வதற்குரிய காரணமே இந்த ஹதீஸ்களில் அல்லாஹ்வின் முதல் தோற்றம் பற்றி வெளிப்படையாக இடம் பெறவில்லை என்பது தான். *அவ்வாறு இடம்பெறவில்லை என்பது உண்மை தான். ஆனால் அதை முஸ்லிமில் இடம் பெறும் 269வது ஹதீஸ் நன்கு தெளிவாக விளக்கி விடுகின்றது.*

_*"முதல் தோற்றத்திற்குத் திரும்பி'' என்ற வாசகத்திலிருந்து, அல்லாஹ் மூன்று முறை தோற்றமளிக்கின்றான் என்பதைத் தெளிவாக்கி விடுகின்றது. எனவே, "உள்ளத்தில் நினைத்திருந்த...'' என்று அர்த்தம் செய்வது தேவையற்றதாகி விடுகின்றது.*_

_இங்கு முக்கியமான இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும்._

*🏮🍂1. இந்த ஹதீஸில் "ரஅவ்ஹு' என்பது இரண்டு இடங்களில் வருகின்றது. முதலில் வருகின்ற இந்த வார்த்தைக்கு,* 'உள்ளத்தில் கற்பனை செய்திருந்த..' என்று அர்த்தம் கொடுக்கின்றனர். இரண்டாவது இடம் பெறும் "ரஅவ்ஹு' என்ற வார்த்தைக்கு பார்த்தல் என்று அர்த்தம் செய்கின்றனர். *ஒரே வார்த்தைக்கு, முதலில், உள்ளத்தில் கற்பனை செய்திருந்த' என்றும், "பார்த்த' என்றும் அர்த்தம் செய்வது ஒன்றுக்கொன்று முரண் என்பதைப் புரியத் தவறி விடடனர்.* இந்த மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும் போதே இந்த முரண்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

*🏮🍂எனவே, "ரஅவ்ஹு' என்பதற்கு இரண்டு இடங்களிலும், "பார்த்த' என்று அர்த்தம் கொடுத்து விட்டால் ஒரு முரண்பாடும் வராது. மாறாக இந்த அர்த்தம் அதற்கு விளக்கமாகவும் அமைந்து விடுகின்றது.*

*🏮🍂2. மூன்றாவது தோற்றம் என்ற தலைப்பின் கீழ், "அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்திற்கு இறைவன் திரும்பி...' என்று மொழிபெயர்த்துள்ளோம்.* இவ்வாறு மொழிபெயர்ப்பதற்குக் காரணம், இந்த ஹதீஸின் மூலத்தில், "தஹவ்வல' என்ற அரபி வார்த்தை இடம் பெறுகின்றது. *இதற்கு, மாறுதல், திரும்புதல் என்று பொருள்.*

*🏮🍂முஸ்லிம் தழிழாக்க நூல்களில், "முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்தில்'' என்று தான் இடம் பெறுகின்றது.* "தஹவ்வல' என்பதற்குரிய, மாறுதல், திரும்புதல் என்ற அர்த்தம் *இதற்குக் கொடுக்கப்படவில்லை என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment