பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

அல்லாஹ்* ⤵ *உருவமற்றவனா❓* - 31

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*

      *🔥 அல்லாஹ்*
                                 ⤵
                    *உருவமற்றவனா❓*

           *✍🏻...தொடர் [ 31 ]*

*☄இறைவனைக்*
             *காண முடியுமா❓[ 04 ]*

_மறுமையில் இறைவனைக் காண முடியும் என திருக்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது._

_*🍃அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.*_

*📖அல்குர்ஆன் 75:21, 22📖*

_*🍃நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்' என்று (முஹம்மதே!) கூறுவீராக!*_

*📖 அல்குர்ஆன் 18:110 📖*

*🏮🍂நபி (ஸல்) அவர்களும் அல்லாஹ்வைக் காண்பது தொடர்பாக விரிவான விளக்கத்தைத் தருகிறார்கள்.*

*☄முன்னவன் அல்லாஹ்வின் மூன்று தோற்றங்கள்☄️*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர்  "அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா❓'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம் (காண்பீர்கள்); மேகமே இல்லாத தெளிவான நண்பகல் நேரத்தில் சூரியனைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு சிரமப்படுவீர்களா❓ மேகமே இல்லாத தெளிவான பௌர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதற்கு நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு சிரமப்படுவீர்களா❓'' என்று கேட்டார்கள். மக்கள் "இல்லை, அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர்.*_

_*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே மறுமை நாளில் - சுபிட்சமும் உயர்வும் மிக்க - அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள். மறுமை நாள் ஏற்படும்போது அழைப்பாளர் ஒருவர் "ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகத்தில்) தாம் வழிபட்டு வந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்'' என்று அழைப்பு விடுப்பார். அப்போது, அல்லாஹ்வை விடுத்து பொய்த் தெய்வங்களையும் சிலைகளையும் வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் கூட எஞ்சாமல் அனைவரும் நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வழிபட்டுக் கொண்டிருந்த நல்லவர்களும் (அல்லாஹ்வை வழிபட்டுப் பாவங்களும் புரிந்து வந்த) பாவிகளும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்களும் தாம் எஞ்சியிருப்பர்.*_

*அப்போது (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களிடம், "நீங்கள் எதை  வழிபட்டு வந்தீர்கள்?'' என்று கேட்கப்படும். அவர்கள், "அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை நாங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தோம்'' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், "நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை'' என்று கூறப்படும். மேலும், "இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், "எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!'' என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையை)ச் சுட்டிக் காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.*

_*🍃பிறகு, கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, "நீங்கள் எதை வழிபட்டுக் கொண்டிருந்தீர்கள்❓'' என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) வழிபட்டுக் கொண்டிருந்தோம்'' என்று கூறுவர். அப்போது அவர்களிடம், "நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை'' என்று சொல்லப்படும். மேலும், அவர்களைப் பார்த்து, "உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், "எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!'' என்று (யூதர்கள் கூறியதைப் போன்றே) கூறுவார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையை)ச் சுட்டிக் காட்டப்படும். பிறகு (அந்தத் திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போன்று காட்சி தரும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.*_

_*இறுதியில் அல்லாஹ்வை வழிபட்டு(க்கொண்டு நன்மைகளும் புரிந்து) வந்த நல்லோர் மற்றும் (அல்லாஹ்வையும் வழிபட்டுக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். அவர்கள் ஏற்கனவே (அல்லது முதலில்) பார்த்த தோற்றத்திற்கு நெருக்கமான (வேறு) ஒரு தோற்றத்தில் தூயவனும் உயர்ந்தோனுமாகிய அகிலத்தாரின் இரட்சகன் அவர்களிடம் வருவான். அப்போது "நீங்கள் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்❓ ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றார்களே!'' என்று அவன் கேட்பான். அவர்கள், "எங்கள் இறைவா! உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின் தொடர்வோம்?)'' என்று பதிலளிப்பார்கள்.*_

_*அப்போது இறைவன், "நானே உங்கள் இறைவன்'' என்று கூறுவான். (அவர்களால் உறுதிசெய்ய முடியாத தோற்றத்தில் அப்போது அவன் இருப்பதால்) அதற்கு அவர்கள், "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம்; நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்'' என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவார்கள். (அந்தச் சோதனையான கட்டத்தில்) அவர்களில் சிலர் பிறழ்ந்துவிடும் அளவுக்குப் போய் விடுவார்கள். அப்போது இறைவன், "அவனை இனங்கண்டு கொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள் "ஆம் (இறைவனின் கணைக்கால் தான் அடையாளம்)'' என்று கூறுவார்கள். உடனே (இறைவனின்) கணைக்காலை விட்டும் (திரை) விலக்கப்படும். அப்போது (உலகத்தில்) மனப்பூர்வமமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து கொண்டிருந்தவர் யாரோ அவர் சிரம்பணிய இறைவன் அனுமதிப்பான். தற்காப்புக்காகவோ, பாராட்டுக்காகவோ சிரம் பணிந்து கொண்டிருந்தவருடைய முதுகை (நெடும் பலகையைப் போன்று) ஒரே நீட்டெலும்பாக அல்லாஹ் ஆக்கி விடுவான். அவர் சிரம்பணிய முற்படும் போதெல்லாம் மல்லாந்து விழுந்து விடுவார். (அவரால் சிரம் பணிய முடியாது.)*_

_*பின்னர் அவர்கள் தம் தலையை உயர்த்துவார்கள். அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்தில் இறைவன் காட்சியளித்து "நானே உங்கள் இறைவன்'' என்று கூறுவான். அதற்கு அவர்கள் "நீயே எங்கள் இறைவன்'' என்று கூறுவார்கள். பிறகு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும்; (பாவம் புரிந்த இறை நம்பிக்கையாளர்களுக்காகப்) பரிந்துரை செய்ய அனுமதி கிடைக்கும். அப்போது மக்கள், "அல்லாஹ்வே! காப்பாற்று; காப்பாற்று'' என்று பிரார்த்திப்பார்கள்.... (ஹதீஸின் ஒரு பகுதி)*_

*🎙அறிவிப்பவர்:**
             *அபூசயீத்*
                     *அல்குத்ரீ (ரலி)*

    *📚 நூல்: முஸ்லிம் 269 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment