*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*
*🔥 அல்லாஹ்*
⤵
*உருவமற்றவனா❓*
*✍🏻...தொடர் [ 26 ]*
*☄தூணிலும் இல்லை,*
*துரும்பிலும் இல்லை [ 01 ]*
*🏮🍂நாம் இது வரை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து, அல்லாஹ் வானத்திற்கு மேல் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்று தெளிவாக விளங்கிக் கொள்கிறோம்.* இது தான் ஒரு முஸ்லிமுடைய நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
*🏮🍂இன்று தமிழகத்தில் அரபி மதரஸாக்களில் படித்த ஆலிம்கள் கூட, "அல்லாஹ் தூணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்' என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.* பாமர மக்கள் இந்த நம்பிக்கையில் இருந்தால் அது ஆச்சரியமில்லை. ஆனால் ஆலிம்கள் இப்படி இருப்பது தான் ஆச்சரியமாகும். *அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற குர்ஆன் வசனங்களை இந்த ஆலிம்கள் படிக்கிறார்கள். ஹதீஸ்களைப் பார்க்கின்றார்கள். அதற்குப் பிறகும் இவர்களிடம் எந்த மாற்றமுமில்லை.*
*🏮🍂இதற்கு அடிப்படைக் காரணம், அல்லாஹ்வுக்கு உருவமில்லை, அவன் அர்ஷில் இல்லை, தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்* என்ற நம்பிக்கை இவர்களிடம் ஆழமாகப் பதிந்திருப்பது தான். இவர்கள் ஏற்கனவே ஒரு முடிவு எடுத்து வைத்து விட்டனர். *இப்படிச் சொன்னால் தான் அவ்லியாக்களிடம் அல்லாஹ் இருக்கிறான்; அதனால் அவ்லியாக்களும் அல்லாஹ்வும் ஒன்று என்ற வழிகேட்டை நிறுவ முடியும்.* அதனால் குர்ஆன் ஹதீசுக்குத் தக்க தாங்கள் வளைவதற்குப் பதிலாக, தங்களுக்குத் தக்க குர்ஆன், ஹதீஸை இவர்கள் வளைக்கிறார்கள். *தாங்களும் வழிகெட்டு, பிறரையும் வழிகெடுக்கிறார்கள். மக்களை நரகப் படுகுழியில் தள்ளுகிறார்கள். அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.*
*🏮🍂எனவே இஸ்லாத்தின் சரியான கடவுள் கொள்கையின்படி அல்லாஹ் வானத்தின் மேலே அர்ஷில் அமர்ந்திருக்கிறான்.* அல்லாஹ் தூணிலும் இல்லை, துரும்பிலும் இல்லை என்பது தான் சரியான கடவுள் கொள்கையாகும். *நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் இதைத் தெளிவுபடுத்துகின்றன.*
*🏮🍂இங்கே ஒரு கேள்வி எழலாம். அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்றால், அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான், அல்லாஹ் அவர்களுடன் இருக்கிறான் என்றெல்லாம் வருகிறதே!* அல்லாஹ் எங்கும் எதிலும் இருக்கிறான் என்பதற்கு இது ஆதாரமாக அமைகின்றதே! என்பது தான் அந்தக் கேள்வியாகும். *இதற்கு விடை காண்பதற்கு முன்னால் அந்த வசனங்களைப் பார்ப்போம்.*
_*🍃அவர்கள் மக்களிடம் மறைத்து விடலாம். அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. இறைவனுக்குப் பிடிக்காத பேச்சுக்களை இரவில் பேசி அவர்கள் சதி செய்த போது அவன் அவர்களுடன் இருந்தான். அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவனாக இருக்கிறான்.*_
*📖 அல்குர்ஆன் 4:108 📖*
_*🍃வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.*_
*📖 அல்குர்ஆன் 57:4 📖*
_*🍃வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா❓ மூவரின் இரகசியத்தில் அவன் நான்காமவனாக இல்லாமல் இல்லை. ஐவரில் அவன் ஆறாமவனாக இல்லாமல் இல்லை. இதை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுடன் அவன் இல்லாமல் இருப்பதில்லை. பின்னர் கியாமத் நாளில் அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.*_
*📖 அல்குர்ஆன் 58:7 📖*
*🏮🍂உங்களுடன், அவர்களுடன் என்ற வார்த்தையில் இடம் பெறுகின்ற, "மஅ' என்ற அரபிப் பதத்திற்கு இடைச் சொல்லுக்குரிய அர்த்தமாகும்.* "மஅ' என்ற இடைச் சொல்லுக்கு, உடன் என்று பொருள் கொள்ளலாம். *உதாரணமாக, உங்களுடன், உங்களோடு என்ற பதத்தில் வரும்.*
_முதலில் தமிழில் இதற்குரிய விளக்கத்தைப் பார்ப்போம்._
*🏮🍂ஒரு பேருந்தில் இரண்டு இருக்கைகளில் அடுத்தடுத்து நானும் என் மகனும் இருக்கிறோம் என்றால் அதை,* "நான் என் மகனுடன் அமர்ந்திருக்கிறேன்' என்று சொல்லலாம். இப்போது, *உடன் என்பது நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றது.*
_இதே வார்த்தைக்கு கருத்து அர்த்தம், இலக்கிய அர்த்தமும் செய்யப்படும்._
*🏮🍂ரபீக் என்பவர் ஒரு பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். அவருக்கு எதிராக இன்னொருவர் காவல்துறையில் புகார் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.* புகார் செய்யச் செல்பவரிடம் பொது மக்கள், "அவருக்கு எதிராகவா புகார் கொடுக்கப் போகிறாய்❓ காவல்துறை அவரோடு இருக்கிறது. ஆளுங்கட்சியும் அதிகார வர்க்கமும் அவருடன் இருக்கிறது' என்று சொல்கின்றனர். இப்போது இந்த இடத்தில், அவருடன் - அவரோடு என்பதில் உடன் என்ற இடைச் சொல், இலக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் கருத்து என்ன❓ ரபீக்குக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ஆளுங்கட்சி அவருக்குத் துணை நிற்கும். *காவல்துறை அவருக்கு உதவியாக இருக்கும். அதிகார வர்க்கம் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பது தான் இதன் அர்த்தம்.*
*🏮🍂உடன்' என்ற இடைச் சொல் இங்கு இலக்கியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.* இதைப் போன்று தான் அரபியில், "மஅ' என்ற இடைச் சொல் இரண்டு விதமான அர்த்தங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.
*🏮🍂மேலே நாம் பார்த்த இந்த வசனங்களில், அல்லாஹ் உடன் இருக்கிறான் என்றால், அல்லாஹ் அவருக்கு உதவியாக இருக்கிறான்; கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பது தான் அதன் பொருள்.*
_2:153, 2:249, 8:19, 9:40, 9:123, 16:127 ஆகிய வசனங்களில் "மஅ' என்ற இடைச் சொல், "அல்லாஹ்வுடைய உதவி இருக்கின்றது' என்ற கருத்து அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது._
_2:14, 7:71, 18:28, 48:29 ஆகிய வசனங்களில் 'மஅ - உடன்' என்பது நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றது._
*🏮🍂இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாத குழப்பவாதிகள்,* இறைவன் எங்கும் இருக்கிறான்; எதிலும் இருக்கிறான் என்ற குஃப்ரான கொள்கைக்குச் சென்று விட்டனர். *அத்வைதம் என்ற அமிலக் கருத்தையும் மார்க்கத்தில் திணித்து விட்டனர். இப்படி ஓர் அர்த்தத்தை எல்லா இடத்திலும் கொடுக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள ஹதீஸில் ஒரு உதாரணத்தைக் காணலாம்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment