பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

மன்னிக்கும் குணம்

*மன்னிக்கும் குணம்*
——————————
*ஆதமின் மக்கள் அனைவரும் பகலிலும் இரவிலும் தவறிழைக்கின்றனர்* என்பது நபிமொழி.

நூல்: *அஹ்மத் 20451*

சண்டையிட்டுக் கொள்ளும் சகோதரர்களுக்கு இடையே *நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.*

*நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள்தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.*

(அல்குர்ஆன் *49:11)*

இந்த வசனம், சண்டையிட்டுக் கொள்பவர்களை சமாதானம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுவதோடு, நாம் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என்பதையும் எடுத்துக் கூறுகிறது.

*ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கள் கிழமைகளில் (நாம் செய்த) அமல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படும். அப்போது அல்லாஹ்விற்கு இணை வைக்காத ஒவ்வொரு மனிதனின் தவறுகளையும் அந்நாளில் அல்லாஹ் மன்னிப்பான். தன் சகோதரனுக்கிடையில் சண்டையிட்டுள்ள ஒருவனைத் தவிர! ‘அவர்கள் இருவரும் சமாதானம் செய்து கொள்ளும் வரை அவனை விட்டு விடுங்கள்’* என்று கூறப்படும்.

நூல்: *முஸ்லிம் 4653*

*நாம் மன்னித்தால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் .*

*பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!*

(அல்குர்ஆன் *7:199)*

*தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.*

(அல்குர்ஆன் *2:263)*

*தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.*

(அல்குர்ஆன் *4:114)*

*கணவன் மனைவியிடம் பிரச்சனை வந்தால் இருவரும் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும்*.

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. *சமாதானமே சிறந்தது.*

(அல்குர்ஆன் *4:128)*

*போர்க்களங்களில் கூட எதிரிகள் சமாதானத்திற்கு வந்தால் அதையே ஏற்க வேண்டும்*

(*முஹம்மதே!) அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்*.

(அல்குர்ஆன் *8:61)*

அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

(அல்குர்ஆன் *4:90)*

*நம்மை வெறுப்பவர்களைக் கூட நண்பர்களாக மாற்ற முயற்சிக் வேண்டும். அவர்களுடன் சேர்ந்து வாழ முயல வேண்டும்.*

ஏகத்துவம்

No comments:

Post a Comment