பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

அல்லாஹ்* ⤵ *உருவமற்றவனா - 24

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*

      *🔥 அல்லாஹ்*
                                 ⤵
                    *உருவமற்றவனா❓*

           *✍🏻...தொடர் [ 24 ]*

*☄அர்ஷில் அமர்ந்திருக்கும்*
                    *அல்லாஹ் [ 06 ]*

*☄அர்ஷின் காலைப்*
         *பிடிக்கின்ற மூஸா நபி*

_*🍃வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.*_

*📖 அல்குர்ஆன் 69:17 📖*

ﺣﺪﺛﻨﺎ ﻣﻮﺳﻰ ﺑﻦ ﺇﺳﻤﺎﻋﻴﻞ، ﺣﺪﺛﻨﺎ ﻭﻫﻴﺐ، ﺣﺪﺛﻨﺎ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﻳﺤﻴﻰ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، _*ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪ اﻟﺨﺪﺭﻱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: ﺑﻴﻨﻤﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺟﺎﻟﺲ ﺟﺎء ﻳﻬﻮﺩﻱ، ﻓﻘﺎﻝ: ﻳﺎ ﺃﺑﺎ اﻟﻘﺎﺳﻢ ﺿﺮﺏ ﻭﺟﻬﻲ ﺭﺟﻞ ﻣﻦ ﺃﺻﺤﺎﺑﻚ، ﻓﻘﺎﻝ: ﻣﻦ؟ "، ﻗﺎﻝ: ﺭﺟﻞ ﻣﻦ اﻷﻧﺼﺎﺭ، ﻗﺎﻝ: «اﺩﻋﻮﻩ»، ﻓﻘﺎﻝ: «ﺃﺿﺮﺑﺘﻪ؟»، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺘﻪ ﺑﺎﻟﺴﻮﻕ ﻳﺤﻠﻒ: ﻭاﻟﺬﻱ اﺻﻄﻔﻰ ﻣﻮﺳﻰ ﻋﻠﻰ اﻟﺒﺸﺮ، ﻗﻠﺖ: ﺃﻱ ﺧﺒﻴﺚ، ﻋﻠﻰ ﻣﺤﻤﺪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﺄﺧﺬﺗﻨﻲ ﻏﻀﺒﺔ ﺿﺮﺑﺖ ﻭﺟﻬﻪ، ﻓﻘﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺗﺨﻴﺮﻭا ﺑﻴﻦ اﻷﻧﺒﻴﺎء، ﻓﺈﻥ اﻟﻨﺎﺱ ﻳﺼﻌﻘﻮﻥ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ، ﻓﺄﻛﻮﻥ ﺃﻭﻝ ﻣﻦ ﺗﻨﺸﻖ ﻋﻨﻪ اﻷﺭﺽ، ﻓﺈﺫا ﺃﻧﺎ ﺑﻤﻮﺳﻰ ﺁﺧﺬ ﺑﻘﺎﺋﻤﺔ ﻣﻦ ﻗﻮاﺋﻢ اﻟﻌﺮﺵ، ﻓﻼ ﺃﺩﺭﻱ ﺃﻛﺎﻥ ﻓﻴﻤﻦ ﺻﻌﻖ، ﺃﻡ ﺣﻮﺳﺐ ﺑﺼﻌﻘﺔ اﻷﻭﻟﻰ*_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்த போது யூதர் ஒருவர் வந்து, "அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்து விட்டார்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(அந்தத் தோழர்) யார்❓'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அன்சாரிகளில் ஒருவர்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "அவரைக் கூப்பிடுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், "இவரை நீர் அடித்தீரா❓'' என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, "இவர் "மனிதர்கள் அனைவரையும் விட மூசாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று கடைவீதியில் ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். உடனே நான், "தீயவனே! முஹம்மதை விடவா (மூசா மேன்மை வாய்ந்தவர்)❓' என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரது முகத்தில் அறைந்து விட்டேன்'' என்று கூறினார்.*_

_*இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் போசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூசாவை அர்ஷின் கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். "மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒüயை அவர் கண்ட போது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
             *அபூசயீத்*
                     *அல்குத்ரீ (ரலி)*

   *📚 நூல்: புகாரி 2412 📚*

*🏮🍂இந்த இறை வசனம், ஹதீஸைப் பார்த்த பின்பும் யாரேனும் "அர்ஷில் அமர்ந்தான்' என்பதற்கு மாற்றுப் பொருள் கொடுக்க முடியுமா❓ அப்படி மாற்றுப் பொருள் கொடுத்தால் அவர் வழிகேட்டில் இருக்கிறார் என்பதைத் தவிர வேறில்லை.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment