பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

மவ்லிதும் - மீலாதும் - 1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*

*🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*

              *✍🏻.....தொடர் ➖0️⃣1️⃣*

*🏮🍂மவ்லிதும் மீலாதும் என்ற தலைப்பில் ‘மவ்லித் ஓதுவதற்கும், மீலாது விழா கொண்டாடுவதற்கும் மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது; அதற்கு நபிமொழிகளில் சான்றுகள் உள்ளன’ என்று சில ஆதாரங்களை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற ஊடகங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர்.*

*🏮🍂இந்த ஆதாரங்கள் சரியானவையா❓ அவர்கள் கூறும் கருத்துக்குச் சான்றாக இருக்கிறதா❓ என்பதைப் பார்ப்போம்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

       *☄️முதல் ஆதாரம்☄️*

_*🍃நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்களுக்கு நபித்துவம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் (அவர்களின் பிறந்த தினத்தில்) அவர்களுக்காக சில மிருகங்களை அறுத்து   பங்கிட்டார்கள்.*_

*📚பைஹகி 43, தபரானி, பத்ஹுல் பாரி📚*

*🏮🍂இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதா? என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னர் இந்தச் செய்தி மவ்லித் ஓதுவதற்கோ அல்லது மீலாது விழா கொண்டுவதற்கோ ஆதாரமாகத் திகழ்கிறதா❓ என்பதைப் பார்ப்போம்.*

*🏮🍂நபித்துவம் கிடைத்த போது நபிகளார் சில மிருகங்களை அறுத்துப் பலியிட்டார்கள் என்ற செய்தியில் “அவர்களின் பிறந்த தினத்தில்” என்று அடைப்புக் குறியில் போட்டுள்ளார்கள்.*

*🏮🍂அடைப்புக் குறியில் உள்ளது ஹதீஸ் நூலில் உள்ளது அல்ல. இவர்களின் சொந்தச் சரக்கு! பிறந்த தினத்தில் தான் இதைச் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடையாது.*

*🏮🍂நபித்துவத்திற்குப் பின்னர் அறுத்துப் பலியிட்டார்கள் என்பது எப்படி மவ்லித் ஓதுவதற்கும் மீலாது விழா கொண்டாடுவதற்கும் ஆதாரமாக அமையும்❓*

_அவர்கள் காட்டிய நூலில் இடம்பெறும் செய்திதான் என்ன❓_

السنن الكبرى للبيهقي – (9 / 505)

19273 – أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ دَاوُدَ الْعَلَوِيُّ رَحِمَهُ اللهُ , أنبأ حَاجِبُ بْنُ أَحْمَدَ بْنِ سُفْيَانَ الطُّوسِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ حَمَّادٍ الْأَبْيُورْدِيُّ، ثنا عَبْدُ الرَّزَّاقِ، أنبأ عَبْدُ اللهِ بْنُ مُحَرَّرٍ، *عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَ النُّبُوَّةِ. قَالَ عَبْدُ الرَّزَّاقِ: إِنَّمَا تَرَكُوا عَبْدَ اللهِ بْنَ مُحَرَّرٍ لِحَالِ هَذَا الْحَدِيثِ. قَالَ الْفَقِيهُ رَحِمَهُ اللهُ: وَقَدْ رُوِيَ مِنْ وَجْهٍ آخَرَ عَنْ قَتَادَةَ , وَمِنْ وَجْهٍ آخَرَ عَنْ أَنَسٍ , وَلَيْسَ بِشَيْءٍ*

_*🍃நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்குப் பின்னர் தமக்காக அகீகா கொடுத்தார்கள்.*_

*📚நூல்: ஸுனனுல் குப்ரா – பைஹகீ,*

*📚பாகம்: 9, பக்கம்: 505📚*

*🏮🍂இது தான் அந்தச் செய்தியில் உள்ளது. இந்தச் செய்தியை எப்படி திசை திருப்புகிறார்கள்❓ என்று பாருங்கள்.*

_அவர்கள் இந்தச் செய்திக்குக் கொடுக்கும் விளக்கம் இதோ :_

*🏮🍂ஹதீஸ் விளக்கம்: நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் பிறந்த போதே அவர்களுக்காக அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அகீகா கொடுத்து விட்டார்கள். ஏற்கனவே செய்து முடித்த ஷரியத்துடைய அமல் ஒன்றைத் திரும்பச் செய்ய முடியாது. எனவே, இது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் தமது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காகவும், அத்தினத்தில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் இந்த மிருகங்களை அறுத்து உணவு சமைத்து மக்களுக்கு பங்கிட்டுள்ளார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது முஸ்தஹப் (விரும்பத்தக்க நற்செயல்) ஆகும் என மாபெரும் ஹதீஸ் கலை வல்லுநர், இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பத்வா வழங்கியுள்ளார்கள்.*

_இந்த விளக்கம் சரியானது தானா என்று பார்ப்போம்._

_*🏮🍂‘நபி (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்தார்கள்’ என்றால் ‘அகீகா கொடுத்தார்கள்’ என்று மட்டும் தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இவர்களோ அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அகீகா கொடுத்து விட்டார்கள். (அப்துல் முத்தலிப் ஷரீஅத் படி நடந்தவரா❓ இஸ்லாத்தை ஏற்றவரா❓ என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது) எனவே முடித்த அமலை மீண்டும் செய்யக் கூடாது என்று இவர்களாக முடிவு செய்துவிட்டு, நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடத் தான் மிருகங்களை அறுத்துப் பலியிட்டார்கள் என்று சுய விளக்கத்தைத் திணித்துள்ளார்கள்.*

*🏮🍂நபிமொழியில் இவர்கள் சொல்லும் எந்த விளக்கமும் இல்லை. இவர்கள் விளங்குவது போல் விளங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுள்ளார்கள்.*

*🏮🍂நபிமொழியின் நேரடி மொழிபெயர்ப்பைப் பார்த்தால் இவர்கள் எவ்வளவு மோசடி செய்துள்ளார்கள் என்பது விளங்கும்.*

*🏮🍂நபிமொழியை ஆதாரம் காட்டுவதை விட்டு விட்டு முற்கால அறிஞர்கள் சொன்னார்கள் என்ற அவர்களின் கூற்றின் மூலம், நபிமொழியில் மீலாதுக்கும் மவ்லிதுக்கும் ஆதாரமில்லை என்பதைச் சுட்டிக்காட்டி விட்டார்கள்.*

*🏮🍂மேலும் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதும் இல்லை. இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவர் பலவீனமானவராவார்.*

التاريخ الكبير – (5 / 212)

681 – عبد الله بن محرر (3) عن قتادة، منكر الحديث، العامري الجزرى.

_*அப்துல்லாஹ் பின் முஹர்ரர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று புகாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.*_

*📚நூல்: அத்தாரிகுல் கபீர், பாகம்:5, பக்கம்: 212📚*

الجرح والتعديل – (5 / 176)

824 – عبد الله بن محرر الرقى قاضى الجزيرة روى عن قتادة ويزيد ابن الاصم روى عنه أبو نعيم سمعت ابي يقول ذلك.نا عبد الرحمن قال قرئ على العباس بن محمد الدوري قال سمعت (562 ك) يحيى بن معين يقول: ابن محرر ليس بشئ. نا عبد الرحمن نا محمد بن ابراهيم حدثنى عمرو ابن علي الصيرفى قال: عبد الله بن محرر متروك الحديث. نا عبد الرحمن قال سألت ابي عن عبد الله بن محرر فقال: متروك الحديث، منكر الحديث، ضعيف الحديث، ترك حديثه عبد الله بن المبارك.

_*அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்களும், ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்று அம்ர் பின் அலீ அவர்களும், ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர், நிராகரிக்கப்பட்டவர், பலவீனமானவர் மேலும் அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் இவரின் செய்தியை நிராகரித்துள்ளார் என்றும் அபூஹாத்திம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.*_

*📚நூல்: அல் ஜரஹ் வத்தஃதீல்,*

*📚பாகம்:5, பக்கம்: 176📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment