*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️*
*🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕*
*🌹🌹🌹🌹*
*❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤*
*🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋*
*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉 தொடர் பாகம் 65 👈👈👈*
*📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚*
*56. 🙋♂️🙋♂️🙋♂️பொறாமை☪️ நன்மையைத் 🛑தின்று 🟣(அழித்து)🔴 விடும்📚 ஹதீஸ்📚📚📚*
*57. 🧕🧕🧕தாயின் காலடியில்🧕🧕 சொர்க்கம்❓📚 ஹதீஸ்📚📚📚*
*58. 🕋🕋🕋இமாம்கள் 🛑பலவீனம் ⚫என🟣 ஒதுங்கியவை📚 ஹதீஸ்📚📚📚*
*59. 🙋♂️🙋♂️🙋♂️யாரின்🙋♀️🙋♀️🙋♀️ பக்கம்☪️ நீ ☪️ திரும்பிப் 🕋பார்க்கிறாய்📚 ஹதீஸ்📚📚📚*
*60. 🕋🕋🕋சொர்க்கம்🔥🔥🔥 நரகம்🔥🔥 ஆயிரம்🙋♂️🙋♂️ ஆண்கள்🙋♀️ மூடப்பட்டன📚 ஹதீஸ்📚📚📚*
*🌐56. பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும் ஹதீஸ்🌐*
*✍️✍️✍️பொறமை கொள்வது கூடாது என்பதை வலியுறுத்தும் பல ஆதாரப்பூர்வமான செய்திகள் இருப்பதைப் போன்று சில பலவீனமான ஹதீஸ்களும் உள்ளது✍️✍️✍️.*
*ஹதீஸ் 1*
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالْحَسَدَ فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ أَوْ قَالَ الْعُشْبَ
*🕋🕋🕋நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும்🕋🕋🕋.*
*அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி) அபூதாவூத் 4257*
*🙋♂️🙋♂️🙋♂️இந்தச் செய்தி ஷூஅபுல் ஈமான் (பாகம் 9 பக்கம் 10) முஸ்னது பஸ்ஸார் (8412) உள்ளிட்ட இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இப்றாஹீம் பின் அபீ அசீத் என்பாரின் பாட்டனார் இடம் பெற்றுள்ளார். இவரது பெயர் எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. இவர் யாரென்று அறியப்படாத நபர் ஆவார். இவரது நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாததால் இது பலவீனமான செய்தியாகிறது.🙋♀️🙋♀️🙋♀️*
*ஹதீஸ் 2*
الحسد يفسد الإيمان كما يفسد الصبر العسل.
*✍️✍️✍️கசப்புக்காய் தேனைப் பாழாக்கி விடுவதைப் போன்று பொறாமை இறைநம்பிக்கையைப் பாழாக்கி விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் முஆவியா பின் ஹீதா✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️இந்தச் செய்தி அபூமன்சூர் அவர்களின் முஸ்னது தைலமீ எனும் நூலில் (பாகம் 2 பக்கம் 100) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் மகீஸ் பின் தமீம் என்பார் இடம் பெற்றுள்ளார். இவரது நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இதை அபூஹாதம் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்🙋♀️🙋♀️🙋♀️.*
*(இலலுல் ஹதீஸ் பாகம் 1 பக்கம் 442)*
*✍️✍️எனவே இந்த செய்தியும் பலவீனமானதாகும்✍️✍️.*
*🛑57. தாயின் காலடியில் சொர்க்கம்❓ ஹதீஸ்🛑*
*🧕தாயின் காலடியில் சொர்க்கம்?🧕*
*3053* أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ طَلْحَةَ عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ فَقَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ قَالَ نَعَمْ قَالَ فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا رواه النسائي
*✍️✍️✍️ஜாஹிமா (ரலிலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் போர் செய்ய நாடுகிறேன். இது தொடர்பாக உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன் என்று கூறினார்கள். உமக்கு தாய் இருக்கிறார்களா? என்று கேட்டார்கள். அவர்கள் ஆம் என்றார்கள். அவர்களை✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️அவசியமாக்கிக் கொள். ஏனெனில் சொர்க்கம் அவளின் (தாயின்) பாதங்களுக்கு கீழ் உள்ளது என்று கூறினார்கள்.🙋♀️🙋♀️🙋♀️*
*அறிவிப்பவர் : முஆவியா பின் ஜாஹிமா, நூல் : நஸாயீ (3053)*
*✍️✍️✍️இதே செய்தி இப்னுமாஜா (2771),ஷுஅபுல் ஈமான்லிபைஹகீ, பாகம்:16, பக்கம் :340,341, முஃஜமுல் கபீர்லி தப்ரானீ, பாகம்:2, பக்கம் : 418,ஹாகிம் 2502,7248, ஸுனஸ் ஸுக்ரா லி நஸாயீ (3067), மஃரிபத்துஸ் ஸஹாபா அபூ நுஐம் உஸ்பஹானீ (5494) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️முஃஜமுல் கபீர்லி தப்ரானீ, பாகம்:2, பக்கம் : 418, மஃரிபத்துஸ் ஸஹாபாலி அபூநுஐம் உஸ்பஹானீ (5494) ஆகிய இரு நூல்களைத் தவிர மற்ற அனைத்து நூல்களிலும் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மானின் மகன் முஹம்மத் பின் தல்ஹா என்பவர் இடம்பெற்றுள்ளார்.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️இந்த முஹம்மத் பின் தல்ஹா என்பவரை யாரும் நம்பகமானவர் என்று கூறவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் நம்பகமானவர் என்ற தமது நூலிலில் இவரை பதிவுசெய்துள்ளார்கள். இமாம் இப்னுஹிப்பான் அவர்கள் ஒருவரை யாரும் குறைகூறவில்லையானால் அவரை நம்பகமானவர் பட்டியலிலில் சேர்ப்பது அவரின் வழக்கமாகும். எனவே இமாம் இப்னு ஹிப்பான் மட்டும் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்க மாட்டார்கள். எனவே இந்த முஹம்மத் பின் தல்ஹா என்பவர் யாரென அறியப்படாதவர் என்ற நிலையில் பலவீனமானவராகிறார்✍️✍️✍️* .
*🧕🧕🧕தாய்மார்களின் பாதங்களுக்கு கீழ் சொர்க்கம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🧕🧕🧕*
*அறிவிப்பவர் : அனஸ் பின்மாலிலிக் (ரலிலி), நூல்:முஸ்னத் ஷிஹாப் (113)*
*🙋♂️🙋♂️🙋♂️இதே செய்தி அபூஷைக் அல்உஸ்பஹானீ அவர்களுக்குரிய அல்பவாயித் (ஹதீஸ் எண் : 25), இதே ஆசிரியரின் தபாத்துல் முகத்திஸீன், பாகம் :4, பக்கம்: 19 ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️இச்செய்தியில் இடம்பெறும் மன்சூர் பின் முஹாஜிர், அபுந் நள்ர் அல்அபார் என்ற இருவரும் யாரென அறியப்படாதவர்கள். இவர்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை✍️✍️✍️.*
*🟣58. இமாம்கள் பலவீனம் என ஒதுங்கியவை ஹதீஸ்🟣*
*🙋♂️🙋♂️🙋♂️(அல்லாஹ் அனுமதித்த காரணமின்றி ஒருவர் நோன்பை விட்டுவிட்டு அதற்காக காலமெல்லாம் அவர் நோன்பு நோற்றாலும் அந்த நோன்பை நிறைவேற்றியவராகமாட்டார்)என்ற இந்த ஹதீஸ் அவர்களுக்குரிய தன்ஷீ ஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (2/148) ம் பக்கத்திலும், தர்கீப், தர்ஹீப்’ என்ற நூலில் (2/74) ம் பக்கத்திலும், பலவீனமானது என்று உள்ளது.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️(இரும்பு துருப்பிடிப்பது போல உள்ளங்களிலும் துருப்பிடிக்கும் பாவ மன்னிப்புத் தேடுவது உள்ளத்தின் துருவை அகற்றிவிடும்) என்ற இந்த ஹதீஸ் ”ஃதகீரதுல் ஹுஃப்பாழ்’ என்ற நூலில் (2/1978) ம் பக்கத்திலும், ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (2242) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️(எனது உம்மத்தவர் கருத்துவேறுபாடு கொண்வது அருளாகும்) என்ற இந்த ஹதீஸ் ”அல்அஸ்ராருல் மர்ஃபூஆ” என்ற நூலின் (506)ம் பக்கத்தி லும், ”தன்ஸீஹுஷ் ஷரீஆ” என்ற நூலின் (2/402) பக்கத்திலும் இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ் என்று உள்ளது. அல்பானி அவர்கள் ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (11)ம் பக்கத்தில் இது ஆதார அடிப்படையற்றது எனக் கூறியுள்ளார்கள்🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️(உங்களின் உணவின் கடைசியாக தண்ணீரைப் பயன்படுத்தாதீர்கள்) என்ற இந்த ஹதீஸ் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (2096) ம் பக்கத்தில் எவ் வித ஆதா அடிப்படை அற்றது என்று உள்ளது.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️(எனது சமுதாயத்தில் இருசாரார் இருக்கிறார்கள், அவர்கள் இருவரும் சீராக இயங்கினால் மனித சமுதாயம் அனைத்தும் சீராக இயங்கும், அவ்விருவர் தலைவர்கள், அறிஞர்கள் ஆவர்) இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவர் பெரும் பொய்யர், ஹதீஸை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறினார்கள் அஹ்மத் பின் ஹம்பல் போலவே இப்னு முஈனும் தாரக்குத்னியும் கூறியுள்ளளார்கள், அல்பானி அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள். ”தக்ரீஜுல் அஹ்யா” (6 /1) ”அழ்ழயீஃபா” (16)🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️(மலக்குல் மவ்த் உயிரைக் கைப்பற்றும் போது ஏற்படும் வேதனை ஆயிரம் முறை வாளால் வெட்டுவதை விட கடினமாக இருக்கும்) என்ற என்ற இந்த ஹதீஸ் தஹபி அவர்களுக்குரிய தர்தீபுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (1071) ம் பக்கத்திலும், இப்னுல் ஜவ்ஸி அவர்களுக்குரிய அல் மவ்ழூஆத்’ என்ற நூலில்(3/220) ம் பக்கத்திலும் முற்றிலும் பலவீனமானது என்று உள்ளது✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️(நானே அரசர்களுக்கெல்லாம் அரசன், அரசர்களின் உள்ளங்கள் எனது கையில் இருக்கிறது, மக்கள் எனக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவர் களுடைய உள்ளங்களை கோபம், தண்டனையைக் கொண்டு திருப்பி விடு வேன், அப்படி திரப்பிவிட்டால் அவர்களை மோசமாகக் கொடுமைப் படுத் துவார்கள் எனவே நீங்கள் அவர்களுக்கு பாதகமாக துஆச் செய்வதில் ஈடுபட வேண்டாம் என நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்) என்ற இந்த ஹதீஸ் ஈஸவி அவர்களுக் குரிய அல்அஹாதீஸுல் குதுஸிய்யா’ என்ற நூலில் (43) ம் பக்கத்திலும் அழ் ழயீஃபா’ என்ற நூலில் (602) ம் பக்கத்திலும், முற்றிலும் பலவீனமானது என்று உள்ளது🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️(யார் தன்னை அறிந்துவிட்டானோ அவன் தனது இறைவனை அறிந் தவனாவான்) என்ற இந்த ஹதீஸ் ”அல்அஸ்ராருல் மர்ஃபூஆ” என்ற நூலின் (506)ம் பக்கத்திலும், ”தன்ஸீஹுஷ் ஷரீஆ” என்ற நூலின் (2/402) பக்கத்திலும் ”தத்கிரதுல் மவ்ழூஆத்” என்ற நூலின் (11)ம் பக்கத் திலும் இட்டுக்கட்டப்பட்டத என்று உள்ளது.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️(நான் அரபி, குர்ஆன் அரபி, சுவர்க்கவாசிகளின் மொழி அரபி) என்ற இந்த ஹதீஸ் ”தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (112)ம் பக்கத்தி லும், ”அல்மகாசிதுல் ஹஸனா’ என்ற நூலில் (31)ம் பக்கத்திலும் ”தன்ஸீஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (2/30) ம் பக்கத்திலும் இட்டுக்கட் டப்பட்டது என்றுள்ளது.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️(ஹஜ் செய்த ஒருவர் எனது கப்;ரை ஸியாரத் செய்யவில்லையானால் அவர் எனக்கு அநீதி இழைத்தவராவார்) என்ற இந்த ஹதீஸை தஹபி அவர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று ”தர்த்தீபுல் மவ்ழூஆத்” என்ற நூலின் (600)ம் பக்கத்திலும், ஸன்ஆனி அவர்கள் ”மவ்ழூஆத்” என்ற நூலின் (52)ம் பக்கத்திலும் ஷவ்க்கானி அவர்கள் ”அல்டஜ்மூஆ” என்ற நூலின் (326)ம் பக்கத்திலும் கூறியுள்ளார்கள்.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️(ஹஜ் செய்த ஒருவர் எனது மரணத்திற்குப் பிறகு எனது கப்;ரை ஸியாரத் செய்தால் அவர் என்னை உயிருடனுள்ளபோது சந்தித்தவரைப் போன்றவரார்) என்ற இந்த ஹதீஸை இப்னுத் தைய்மிய்யா அவர்கள் ”காயிததுன் ஜலீலா” என்ற நூலின் (57)ம் பக்கத்தில் பலவீனமானது என்றும், அல்பானி அவர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (47)ம் பக்கத்திலும், ஃபைஸரானி அவர்களின் ”தத்கிரத்துல் ஹுஃப்பாழ்” (4/5250)என்ற நூலிலும் இது இட்டுக்கட்டப் பட்ட ஹதீஸ் என்று உள்ளது.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️(ஜிப்ரீல் (அலை) இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று நாற்பது அண்டை வீட்டாரை கவனித்துக் கொள்ளும்படி உபதேசித்தார்கள்) என்ற இந்த ஹதீஸ் பலவீனமானது என்று ‘கஷ்புல் ஃகஃபா’ என்ற நூலில் (1/1054) ம் பக்கத்திலும் ‘தக்ரீஜுல் அஹ்யா’ என்ற நூலில் (2/232) ம் பக் கத்திலும் ஸகாவி அவர்களுக்குரிய ‘அல்மகாஸிதுல் ஹஸனா’ என்ற நூலில் (170) ம் பக்கத்திலும் உள்ளது.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️(கண்ணியமிக்க அல்லாஹ்வின் நேசரான இப்ராஹீம்(அலை)அவர்களைப் போன்ற முப்பது மேன் மக்கள் இருப்பார்கள், அவர்களில் ஒருவர் மரணமடைந்துவிட்டால் அந்த இடத்தில் அல்லாஹ் வேறு ஒருவரைப் பகரமாக்கி விடுவான்) என்ற இந்த ஹதீஸ் அலி அல்காரி அவர்களுக்குரிய ”அல்அஸ் ராருல் மர்பூஆ’ என்ற நூலில் (470) ம் பக்கத்திலும் இப்னுத் தபீஃ அவர்க ளுக்குரிய ”தம்யீஷீத் கய்யிம் மினல் கபீஃத்’ என்ற நூலில் (7) ம் பக்கத் திலும், இப்னுல் கய்யிம் அவர்களுக்குரிய ”அல்மனாருல் முனீஃப்’ என்ற நூலில் (308) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️(ஒரு வரிசை பூர்த்தியான பின் உங்களில் ஒருவர் வரிசையில் தனியாக நின்றால் தனக்கு பக்கத்தில் நிற்பதற்காக ஒருவரை இழுத்துக் கொள்ள வேண்டும்) என்ற இந்த ஹதீஸ் ”அத்தல்கீஸில் கபீர்’ என்ற நூலில் (2/37) ம் பக்கத்திலும் இப்னு ஹஜர் அவர்களுக்குரிய ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (921) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️(உலகத்தைத் தேடுவது பாவங்களுக்கெல்லாம் தலையாய பாவமாகும்) என்ற இந்த ஹதீஸ் இப்னுத் தைமிய்யா அவர்களுக்குரிய ‘அஹாதீதுல் கிஸாஸ்’ என்ற நூலின் (7) ம் பக்கத்திலும் ‘அல் அஸ்ராருல் மர்பூஆ’ என்ற நூலில் (1/163) ம் பக்கத்திலும் ‘தத்கிரதுல் மவ்ழூஆ’ என்ற நூலின் (173) ம் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️(ஹலாலானதைத் தேடுவது ஜிஹாதாகும், தொழில் செய்யும் முஃமினை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்) என்ற இந்த ஹதீஸ் அஸ்ஸன்பாவி அவர்களுக்குரிய ‘அன்நுக்பதுல் பஹிய்யா’ என்ற நூலின் (57) ம் பக்கத்திலும் ‘அல் கஷ்ஃபுல் இலாஹி’ என்ற நூலில் (1/518) ம் பக்கத்திலும் ‘அழ்ழ யீஃபா’ என்ற நூலிலும் (1301) ம் பக்கத்தி லும் பலவீனமானது என்று உள்ளது.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️(எல்லாப் பொருளுக்கும் மிகச் சிறப்பான ஒன்று உள்ளது, குர்ஆனில் மிகச் சிறந்தது அர்ரஹ்மானாகும்) என்ற இந்த ஹதீஸ் அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1350) ம் பக்கத்தில் வெறுக்கத்தக்கது என்று உள்ளது🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️(நபி(ஸல்)அவர்கள் ஒருவருக்கு காற்றுப் பிரிந்துள்ளது என அறிந்தார் கள் அப்போது இக்காற்றுப் பிரிந்தவர் எழுந்து சென்று ஒளுச் செய்து கொள்ளட்டும் எனக் கூறினார்கள், அம்மனிதர் எழுந்து செல்ல வெட்கப்பட்டார் மீண்டும் (ஸல்)அவர்கள் காற்றுப் பிரிந்தவர் எழுந்து சென்று ஒளுச் செய்து கள்ளட்டும் எனக் கூறி அல்லாஹ் உண்மையானவற்றுக்கு வெட்கப்படுவதில்லை என்று கூறினார்கள், அப்போது அப்பாஸ் அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எல்லோரும் சென்று உளுச் செய்து வரட் டுமா? எனக் கேட்டார்கள், அதற்கு (ஸல்)அவர்கள் எல்லோரும் சென்று உளுச் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்) என்ற இந்த ஹதீஸ் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலின் (1132)ம் பக்கத்தில் பொய்யானது என்று உள்ளது✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️(தவறான பார்வை இப்லீஸின் அம்பாகும், அப்பார்வையை ஒருவர் அல்லாஹ்வின் பயத்தின் காரணமாக விட்டு விட்டால் அல்லாஹ் அவருக்கு ஈமான் வழங்குகிறான், அவன் உள்ளத்தில் அதன் சுவையை அறிகிறான்) என்ற இந்த ஹதீஸ் முன்திரி அவர்களுக்குரிய ”அத்தர்கீப் வத்தர்ஹீப்’ என்ற நூலின் (4/106) ம் பக்கத்திலும், ஹைஃதமி அவர்களுக்குரிய ”மஜ்மவுஸ் ஸவாயித்’ என்ற நூலின் (63/8)ம் பக்கத்திலும் தஹபி அவர்களுக்குரிய ”தல்கீசுல் முஸ்தத்ரக்’ என்ற நூலின் (4/314) ம் பக்கத்திலும் முற்றிலும் பலவீனமானது என்று உள்ளது🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️ஜஸாக்கல்லாஹ் (அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் சுவர்க்கத்திற்கு தவிழ்ந்து செல்வார்)என்ற இந்த ஹதீஸ் இப்னுல் கய்யிம் அவர்களுக்குரிய ”அல்மனா ருல் முனீஃப்’ என்ற நூலில் (306) ம் பக்கத்திலும், ஷவ்கானி அவர்களுக்கு ரிய அல் ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (1184) ம் பக்கத்திலும், பலவீன மானது என்று உள்ளது✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️(ஏழு காரியங்களை விரைவாகச் செய்யுங்கள் ஏனெனில் அழித்துவிடக் கூடிய நோய், தள்ளாத வயோதிகம், அழிவை ஏற்படுத்தும் செல்வம் அல்லது கடும் ஏழ்மை, அல்லது தஜ்ஜால் அதாவது எதிர் நோக்கும் மறை வான தீமை, அல்லது மிகக் கடுமையான கசப்பான மறுமை நாள் இவைகளைத் தவிர வேறு எதனையும் நீங்கள் எதிர் பார்க்கமுடியாது) என்ற இந்த ஹதீஸ் இப்னு தாஹிர் அவர்களுக்குரிய ”தக{ரதுல் ஹுஃப்பாழ்’ என்ற நூலில் (2/2313) ம் பக்கத்திலும், ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1666) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️(ஒரு சமுதாயத்தின் தலைவன் அவர்களின் சேவகன்) என்ற இந்த ஹதீஸ் அஸ்ஸகாவி அவர்களுக்குரிய ‘அல்துமகாஸீதுல் ஹஸனா’ என்ற நூலில் (579) ம் பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1502) ம் பக்கத்தி லும் பலவீனமானது என்று உள்ளது✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️(தேன், குர்ஆன் ஆகிய இரண்டு நிவாரணிகளைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்) என்ற இந்த ஹதீஸ் அல்வதாயி அவர்களுக்குரிய அஹாதீ துன் முஅல்லதுன் ழாஹிருஹா அஸ்ஸிஹ்ஹது’ என்ற நூலில் (247) ம் பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1514) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️(உமய்யா பின் அபீஸல்த்தின் கவிதை ஈமான் கொண்டுள்ளது, அவன் உள்ளம் காஃபிராக உள்ளது) என்ற என்ற இந்த ஹதீஸ் தராபல்ஸி அவர்களுக்குரிய ‘கஷ்ஃபுல் ஃகஃபாஃ’ என்ற நூலில் (1/19)பக்கத்திலும்’அழ்ழ யீஃபா’ என்ற நூலில் (1546) பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️(நல்லது அழிந்துபோகாது, பாவம் மறக்கப்படாது, கடன்காரன் தூங்க முடியாது எனவே நீ விரும்பியவாறு இருந்து கொள், நீ கொடுப்பது போல கொடுக்கப்படுவாய்) என்ற இந்த ஹதீஸ் தராபல்ஸி அவர்களுக்குரிய கஷ்ஃபுல் இலாஹி’என்ற நூலில் (681) பக்கத்திலும் அல் மஷீஷி அல்லு லுஃலுல் மர்சூஃ’ என்ற நூலில் (414) பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️(தீர்ப்பு வழங்குவதின் மீது மிக்க பலமிக்கவராக இரக்கிறாரோ அவர் நரக நெருப்பின் மீதும் பலமுறையாக இருப்பார்) என்ற இந்த ஹதீஸ் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1814)ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️88 (முஃமினின் கூறிய பார்வையை பயந்து கொள், ஏனெனில் நிச்சயமாக அவன் அல்லாஹ்வின் ஒளியைக் கொண்டு பார்க்கிறான்) என்ற இந்த ஹதீஸ் கனானி அவாகளுக்குரிய ‘தன்ஸுஹுஷ் ஸரீஆ’ என்ற நூலில் (2/305) ம் பக்கத்திலும், ஸகானி அவர்களுக்குரிய ‘அல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (74) ம் பக்கத்திலும் பலவீன மானது என்று உள்ளது🙋♀️🙋♀️🙋♀️* .
*✍️✍️✍️(இவ்வுலகம் வீடில்லாதவருக்கு வீடு, பொருளில்லாதவருக்கு பொருள், இவ்வுலகிற்காக புத்தியில்லாதவர் சேமித்துக் கெண்டிருப்பார்) என்ற இந்த ஹதீஸ் சுபுகி அவாகளுக்குரிய ‘அல்அஹரீதுல்லதீ லா அஸல லஹா ஃபில் அஹ்யாஇ’ என்ற நூலில் (344) ம் பக்கத்திலும், ஃபத்னா அவர்களுக்குரிய தத்திகிரத்துல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (174) ம் பக்கத்திலும் முற்றிலும் பலவீனமானது என்று உள்ளது✍️✍️✍️.*
*🟢59. யாரின் பக்கம் நீ திரும்பிப் பார்க்கிறாய் ஹதீஸ்🟢*
*🙋♂️🙋♂️🙋♂️”(ஒரு அடியான் தொழுகைக்காக நின்றுவிட்டால் அவன் ரஹ்மானுடைய கண் பார்வையில் இருக்கிறான், அவன் திரும்பிப் பார்த்தால் அவனிடம் ஆதமுடைய மகனே! யாரின் பக்கம் நீ திரும்பிப் பார்க்கிறாய்? என்னை விட சிறந்தவரின் பக்கமா? என ரப்பு-இறைவன்- கேட்கிறான், ஆதமுடைய மகனே! தொழுகையில் என் பக்கம் முன்னோக்கு நீ யார் பக்கம் திரும்ப நினைக்கிறாயோ அவர்களின் நானே மிகச் சிறந்தவன்)” என்ற இந்த ஹதீஸ் ஈஸவி அவர்களுக்குரிய ”அல்அஹாதீசுல் குதுஸிய்யதிழ் ழயீஃபதி வல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (46) ம் பக்கத்திலும் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1024) ம் பக்கத்திலும் முற்றிலும் பலவீனமானது என்று உள்ளது.🙋♀️🙋♀️🙋♀️*
*⚫60. சொர்க்கம் நரகம் ஆயிரம் ஆண்கள் மூடப்பட்டன ஹதீஸ்⚫*
*✍️✍️✍️”(ஜிப்ரீலே! நரகத்தைப் பற்றிக் கூறும் என நபி(ஸல்)அவர்கள் கேட்டார்கள், அப்போது ஜிப்ரீல் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் நரகத்திற்கு ஆணையிட்டான் அது வெண்மையாக ஆகுமளவிற்கு ஆயிரம் ஆண்டுகள் மூட்டப்பட்டது, பின்னர் அல்லாஹ் நரகத்திற்கு ஆணையிட்டான் அது சிகப்பாக ஆகுமளவிற்கு ஆயிரம் ஆண்டுகள் நெருப்புமூடப்பட்டது, பின்னரும் அல்லாஹ் நரகத்திற்கு ஆணையிட்டான் அது கருப்பாக ஆகுமளவிற்கு ஆயிரம் ஆண்டுகள் நெருப்புமூடப்பட்டது இறுதியாக அது இருள் நிறைந்த கருப்பாக ஆகிவிட்டது)” என்ற இந்த ஹதீஸ் ”ஹைதமி’ என்ற நூலில் (10/387) ம் பக்கத்திலும் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (910) ம் பக்கத் திலும் பலவீனமானது என்று உள்ளது✍️✍️✍️.*
*61. 🏭🏭🏭மதீனா🏭🏭🏭 பள்ளியில்🕋🕋🕋 தொழுதால்🔥🔥🔥 நகரத்திலிருந்து🔥🔥🔥 விடுதலை📚 ஹதீஸ்📚📚📚*
*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 66*
*🌹🌹🌹*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
No comments:
Post a Comment