பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, August 2, 2020

இஸ்லாத்தை அறிந்து - 54

*☪️☪️மீள்☪️ பதிவுவ☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 54  👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 


 *4. 🧕🧕பெண்👹👹 ஷைத்தான்👹👹 வடிவத்தில்🧕🧕 வருவாள்🧕🧕* 


 *5. 🧕🧕🧕பெண்களுக்கு கல்வி வேண்டாம்🧕🧕🧕* 


 *6. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பொறாமை மார்க்கத்தை மழித்துவிடும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *🧕🧕🧕பெண் ஷைத்தான் வடிவத்தில் வருவாள்🧕🧕🧕.* 

 *2718* عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى امْرَأَةً فَأَتَى امْرَأَتَهُ زَيْنَبَ وَهِيَ تَمْعَسُ مَنِيئَةً لَهَا فَقَضَى حَاجَتَهُ ثُمَّ خَرَجَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ إِنَّ الْمَرْأَةَ تُقْبِلُ فِي صُورَةِ شَيْطَانٍ وَتُدْبِرُ فِي صُورَةِ شَيْطَانٍ فَإِذَا أَبْصَرَ أَحَدُكُمْ امْرَأَةً فَلْيَأْتِ أَهْلَهُ فَإِنَّ ذَلِكَ يَرُدُّ مَا فِي نَفْسِهِ رواه مسلم
 

 *✍️✍️✍️ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். (இது போன்ற சமயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக) உடனே அவர்கள் தம் துணைவியார் சைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து✍️✍️✍️,* 


“” *🧕🧕🧕ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்” என்று கூறினார்கள்.🧕🧕🧕* 

 *முஸ்லிம் 2718* 



 *5. 🧕🧕🧕 பெண்களுக்கு கல்வி வேண்டாம் 🧕🧕🧕* 


 *📚பெண்களுக்கு கல்வி வேண்டாம்📚* 


 *✍️✍️பெண்களை அறைகளில் தங்க வைக்காதீர்கள்! எழுதும் முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள்! கைத்தறியையும் அந்நூர் அத்தியாயத்தையும் கற்றுக் கொடுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍️✍️.* 

 *அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: ஹாகிம் (3494)* 


 *✍️✍️✍️இதே கருத்து தப்ரானியின் முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலிலும் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற பழமொழியை நபி (ஸல்) அவர்கள் தான் சொல்லித் தந்திருப்பார்களோ என்று நாம் எண்ணும் வண்ணம் இந்த செய்தி அமைந்துள்ளது. பெண்கள் வேலை செய்தவற்கு என்றே படைக்கப்பட்டவர்கள்; அவர்களுக்கு படிப்புத் தேவையில்லை; அவர்கள் சிறு தொழிலை கற்றுக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கட்டும்; மார்க்கம் தொடர்பான செய்திகளை அறிந்து நூர் அத்தியாயத்தைக் கற்றுக் கொள்ளட்டும்; அவர்களை நல்ல அறைகளில் தங்க வைக்க வேண்டாம்! என்று இச்செய்தி நமக்கு உணர்த்துகிறது!✍️✍️✍️* 


 *✍️✍️✍️முதலில், இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசைப் படி சரியானதா? என்பதை நாம் பார்ப்போம். இச் செய்தியைப் பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்கள், ‘இந்தச் செய்தி ஆதாரப்பூர்மானது’ என்று இச்செய்தியைப் பதிவு செய்து விட்டு அதன் இறுதியில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இவர்களின் இக்கூற்று சரியானது அல்ல என்பதை இந்த நூலுக்கு விளக்கவுரை எழுதிய இமாம் தஹபீ, தனது தல்கீஸ் எனும் நூலில் ‘இது இட்டுக்கட்டப்பட்டது’ என்றும் இந்த செய்தியின் அபாயகரமான நபர் (இச் செய்தியின் ஐந்தாவது அறிவிப்பாளர்) அப்துல் வஹ்ஹாப் என்பவராவார். இவரைப் பெரும் பொய்யர் என்று அபூஹாத்திம் கூறியுள்ளார்கள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.✍️✍️✍️* 


 *✍️✍️✍️மேலும் இவரைப் பற்றி இமாம் புகாரீ அவர்கள், ‘இவரிடம் (அடிப்படை இல்லாத) புதுமையான செய்திகள் உண்டு’ என்றும் ‘இவர் இட்டுக்கட்டி சொல்பவர்’ என்று இமாம் அபூதாவூத் அவர்களும், ‘இவர் விடப்பட வேண்டியவர்’ என்று இமாம் உகைலீ, தாரகுத்னீ, பைஹகீ ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர். இமாம் நஸயீ அவர்கள் ‘இவர் நம்பகமானவர் இல்லை’ என்றும் இவருடைய பெரும்பாலான செய்திகள் இட்டுக்கட்டப் பட்டவை என்று ஸாலிஹ் பின் முஹம்மத் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.✍️✍️✍️* 


 *நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 6, பக்கம்: 395* 


 *✍️✍️✍️எனவே இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில் ஆதாரத்திற்கு ஏற்றது அல்ல என்பது நிரூபணமாகிறது. இதே செய்தி இடம் பெறும் தப்ரானீயின் அல்முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலில் அப்துல் வஹ்ஹாப் என்பவர் அல்லாமல் வேறு அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதிலும் பலவீனம் இருக்கிறது. இந்த நூலில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர், முஹம்மத் பின் இப்ராஹீம் என்பவர் ‘பெரும் பொய்யர்’ என்று இமாம் தாரகுத்னீ அவர்களும் ‘இவருடைய செய்திகளை (இட்டுக்கட்டப்பட்டது என்று) தெளிவு படுத்துவதற்காகவே தவிர அறிவிக்கக் கூடாது✍️✍️✍️.* 


 *✍️✍️ஏனெனில் இவர் (நபிகளார் மீது) இட்டுக்கட்டிச் சொல்பவர்’ என்று இப்னுஹிப்பான் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். ‘இவருடைய பெரும்பாலான செய்திகள் சரியானவை அல்ல’ என்று இப்னு அதீ அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்✍️✍️.* 


 *நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 6, பக்கம்: 33* 


 *✍️✍️✍️எனவே இந்தச் செய்தியும் அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில் பின்பற்றுவதற்குரிய தகுதியை இழக்கிறது. மேலும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் யாவும் பெண்கள் கற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தையே தருகிறன. இஸ்லாமிய மார்க்கம், கல்வியின் சிறப்பைப் பற்றிப் பேசும் போது ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பேசவில்லை. பொதுவாகவே பேசுகிறது. மேலும் அடிமைகள் நிறைந்த அந்தக் காலத்தில், அடிமைப் பெண்களுக்கும் கூட நபி (ஸல்) அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஆர்வமூட்டியுள்ளார்கள்✍️✍️✍️.* 


 *6. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பொறாமை மார்க்கத்தை மழித்துவிடும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *👹பொறாமை மார்க்கத்தை மழித்துவிடும்👹* 


حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ حَرْبِ بْنِ شَدَّادٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ يَعِيشَ بْنِ الْوَلِيدِ، أَنَّ مَوْلَى الزُّبَيْرِ، حَدَّثَهُ أَنَّ الزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ دَبَّ إِلَيْكُمْ دَاءُ الأُمَمِ قَبْلَكُمُ الْحَسَدُ وَالْبَغْضَاءُ هِيَ الْحَالِقَةُ لاَ أَقُولُ تَحْلِقُ الشَّعْرَ وَلَكِنْ تَحْلِقُ الدِّينَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلاَ تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَفَلاَ أُنَبِّئُكُمْ بِمَا يُثَبِّتُ ذَاكُمْ لَكُمْ أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ ‏”‏

 *📚📚📚நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. அவை தான் மழித்துவிடக் கூடியது. கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.📚📚📚* 


 *✍️அறிவிப்பவர் ஜூபைர் பின் அவ்வாம் (ரலி). நூல் : திர்மிதீ 2434 இந்தச் செய்தி அஹ்மத் 1338 மற்றும் முஸ்னது பஸ்ஸார் 2232, முஸ்னது அபீயஃலா 661 உள்பட பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.✍️* 


 *✍️✍️இதன் அறிவிப்பாளர் வரிசையில் யயீஷ் பின் வலீத் என்பாருக்கு ஜூபைரின் அடிமை அறிவித்தார் என்று இடம் பெற்றுள்ளது. அவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார். அவர் யார்?அவரது நம்பகத்தன்மை என்னவென்று உறுதி செய்யப்படாததால் இது ஏற்கத்தக்க செய்தியல்ல. ஃபைளுல் கதீர் எனும் புத்தக ஆசிரியர் மனாவீ இந்தக் காரணத்தைக் குறிப்பிட்டு இந்த ஹதீஸை குறை கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.✍️✍️* 


 *✍️✍️✍️*பார்க்க ( பைளுல் கதீர் பாகம் 3 பக்கம் 516) முஃஜமுஸ் ஸஹாபா பாகம் 1 பக்கம் 223 எனும் நூலிலும் இந்தச் செய்தி பதிவு* *செய்யப்பட்டுள்ளது. எனினும் இதில் பஹ்ர் பின் கனீஸ், உஸ்மான் பின் மிக்ஸ் என்பவர்கள் இடம் பெற்றுள்ளார்கள் இவர்களை பல அறிஞர்களும்* *பலவீனமானவர்கள் என்று விமர்சித்துள்ளனர்.மேலும் சில அறிவிப்புகளில்* *(முஸ்னது ஷாஷி ஹதீஸ் எண் 52), யயீஷ் பின் வலீத் நேரடியாக ஜூபைர் அவர்களிடமிருந்து அறிவிப்பதாகவும்* *உள்ளது. ஆனால் யயீஷ் என்பார் ஜூபைர் அவர்களின் காலத்தை அடையவில்லை. எனவே இது ஆதாரப்பூர்வமானதல்✍️✍️✍️** .


 *✍️✍️மேலும் இதை கருத்தை கொண்ட செய்தி இப்னு அப்பாஸ் ( ரழி ) அவர்கள் அறிவிப்பதாக இப்னு அதீ எனும் அறிஞரின் அல்காமில் (பாகம் 4 பக்கம் 198) எனும் நூலில் உள்ளது. இதில் அப்துல்லாஹ் பின் அராதா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்✍️✍️.* 


 *(பார்க்க தக்ரீபுத் தஹ்தீப் பாகம் 1 பக்கம் 314* 


 *7. 📚📚📚நற்செயல் காரணமாக வாழ்நாள் அதிகமாகும்🌐🌐🌐*


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 55* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment