பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, August 6, 2020

ஜோஷியம் பார்த்தல், பால் கிதாப் பார்த்தல், குறிப்பார்த்தல்

*ஜோஷியம் பார்த்தல், பால் கிதாப் பார்த்தல், குறிப்பார்த்தல் போன்ற காரியங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா❓*

நமக்கு நாளை என்ன நடக்கும் என்ற மறைவான விசயங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான். ஜோசியக்காரர்கள், குறிகாரர்கள் நமக்கு நாளை நடக்கவிருப்பது நல்லதா? கெட்டதா? என்பதை அறிவார்கள் என்று நம்புவது இணைவைத்தலாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : *யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி(ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்துவிட்டான்.*

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி­)
நூல் : *அஹ்மத் 9171*

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : *யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.*

அறிவிப்பாளர் : ஸஃபிய்யா
நூல் : *முஸ்­லிம் 4137*

பரவலாக முஸ்­லிம்களுக்கு மத்தியில் பால்கிதாப் பார்த்தல் என்ற ஒரு நடைமுறை காணப்படுகிறது. இதுவும் ஜோதிடத்தில் சேர்ந்ததுதான். எனவே, பால்கிதாப் பார்ப்பதும் இணைவைப்புக் காரியமேயாகும்.

*மறைவான ஞானம் ஏகனுக்குறியது*

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. *அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறியமாட்டார். தாம், எங்கே மரணிப்போம்* என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

அல்குர்ஆன் (34 : 31) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : *மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும்.* அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். *நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். கருவறையில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மேலும் மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.* 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : *புகாரி (4697)*


*ஏகத்துவம்*

No comments:

Post a Comment