பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, August 5, 2020

இஸ்லாத்தை அறிந்து - 57

*☪️☪️மீள்☪️ பதிவுவ☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 57  👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 


 *14. 🧶🧶🧶போர்க்களத்தில்⚫⚫⚫ துஆ🕋🕋🕋 மறுக்கப்படாது📚📚 ஹதீஸ் ☪️☪️☪️* 


 *15. ☪️☪️அம்மார்📚 (ரலி) 📚யின்🕋 கொலை☪️☪️* 


 *16. 🤲🤲துஆ🤲🤲 ஏற்படும்☪️ நேரம்☪️ சம்மந்தமாக📚 வரும்📚 ஹதீஸ்📚📚* 


 *17. 🕋🕋ஜும்மாவில்🕋🕋 இமாம்☪️ மிம்பரில்☪️ அமரும்📚 போது 📚துஆ🤲🤲 கேட்டல் 🤲ஹதீஸ்📚📚* 


 *18.☪️☪️முஹம்மது☪️ இல்லாவிடில்🕋 உலகத்தை🌐 படைத்திருக்க🌐 மாட்டேன்📚 ஹதீஸ்📚📚* 


 *19. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️குழப்பமான🌐 காலத்தில்🔴 சுன்னத்திற்க்கு 🔵100🟣 ஷஹீத் ⚫நன்மை📚 ஹதீஸ்📚📚📚* 


*20. 🕋🕋ஹம்ஸாவின்🕋🕋 ஈரலை 🧶வெட்டிய🧶 ஹிந்த்📚 ஹதீஸ்📚📚* 


 *14போகர்காளத்தில் துஆ மறுக்கப்படாது ஹதீஸ்* 

 *✍️✍️✍️“பாங்கின் போதும், சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள் மறுக்கப்படுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️* 

 *அறி: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: அபூதாவூத் 2540* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த ஹதீஸில் இடம்பெறும் 3வது அறிவிப்பாளரான மூஸா பின் யாகூப் அஸ்ஸம்ஈ (مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ) அவர்கள் பலஹீனமானவர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானது.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *15. அம்மார் (ரலி) யின் கொலை ஹதீஸ்* 


 *✍️✍️✍️அம்மார் (ர­லி) அவர்களை மக்கா காஃபிர்கள் பிடித்து, அவர்களின் ஒரு காலை ஒரு ஒட்டகத்திலும் இன்னொரு காலை இன்னொரு ஒட்டகத்திலும் கட்டி இரு ஒட்டகங்களையும் இருவேறு திசையில் ஓடச் செய்து, இருகூறாக பிளந்து கொலை செய்யப்பட்டார்கள்✍️✍️✍️.* 


 *📚📚இந்த செய்தியை நாம் அறிந்த வரையில் எந்த நூ­லும் பார்க்க முடியவில்லை📚📚.* 


 *16. துஆ ஏற்கப்படும் நேரம் சம்மந்தமாக ஹதீஸ்* 


 *❌❌கீழே உள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகும்❌❌* .


 *🕋🕋பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்…🕋🕋* 


 ✍️✍️✍️ *“பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர்: அனஸ் (ரலி)* 

 *நூல்: அபூதாவூத் 521* 


 *🙋‍♂️🙋‍♂️இச்செய்தி இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் ஸைத் அல்அம்மீ என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்🙋‍♂️🙋‍♂️.* 


 *☪️நோன்பாளி நோன்பு துறக்கும் போது…☪️* 


 *✍️✍️✍️பிரயாணம் என்பது ஒரு சிரமமான காரியம். நபி (ஸல்) அவர்கள், பிரயாணத்தை நரக வேதனையின் ஒரு பகுதி என்று கூறியுள்ளார்கள். எனவே இந்தப் பிரயாணத்தின் போது கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும்.அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையும் ஏற்கப்படும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன. எனினும் கீழ்காணும் ஹதீஸ் பலவீனமானது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. நோன்பாளி நோன்பு துறக்கும் போது செய்யும் பிரார்த்தனை. பிரயாணியின் பிரார்த்தனை✍️✍️✍️* 

 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 3909 இந்த ஹதீஸ் பலவீனமானது.* 


 *17. ஜும்மாவில் இமாம் மிம்பரில் அமரும் போது துஆ கேட்டல் ஹதீஸ்* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ அவர்கள் கூறுகிறார்கள் :என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ர-லி) அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம் ; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அது, இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *❌❌இந்த அறிவிப்பு சரியான அறிவிப்பு இல்லை❌❌.* 


صحيح ابن خزيمة – *(3 / 120)* *1739* – أنا أبو طاهر نا أبو بكر نا أحمد بن عبد الرحمن بن وهب نا عمي أخبرني مخرمة عن أبيه عن أبي بردة بن أبي موسى الأشعري قال : قال لي عبد الله بن عمر أسمعت أباك يحدث عن رسول الله صلى الله عليه و سلم في شأن ساعة الجمعة ؟ قال : قلت نعم سمعته يقول : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول : هي ما بين أن يجلس الإمام على المنبر إلى أن تقضى الصلاة

 *✍️✍️✍️சஹீஹ் இப்னி ஹுஸைமா* 
 *இதில் அஹ்மது பின் அப்திர் ரஹ்மான் பின் வஹப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் இவரை ஆதாரமாக எடுக்க இயலாது என்றும் கூறியுள்ளனர். எனவே மனனத் தன்மை பாதிப்புக்குள்ளான இவர் அறிவித்த இந்த அறிவிப்பை ஏற்கக்கூடாது.✍️✍️✍️* 

 *♻️♻️முக்கிய குறிப்பு♻️♻️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இங்கே, இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரம் என்பதைத் தான் பலவீனம் என்கிறோம். எனினும், வெள்ளிக் கிழமையில் ஜும்ஆ தொழுகையில் அந்த நேரம் இருக்கிறது என்று கருத்துப்படும் வகையில் வேறு சரியான ஹதீஸ்கள் உள்ளன🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *18. முஹம்மது இல்லாவிடில் உலகத்தை படைத்திருக்க மாட்டேன் ஹதீஸ்* 


 *✍️✍️✍️முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான் படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி இப்னு அசாகீர் என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றது✍️✍️✍️* .


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானவர்களும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்களான இப்ராஹீம் அபுஸ்ஸிக்கீன் மற்றும் யஹ்யா ஆகியோர் பலவீனமானவர்கள் என்று இமாம் தஹபீ இமாம் தாரகுத்னீ இமாம் இப்னுல் ஜவ்ஸீ மற்றும் இமாம் அஹ்மது ஆகியோர் குறைகூறியுள்ளனர்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *✍️✍️✍️இந்த செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் இதன் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் பெரும் பொய்யர் என்றும் இமாம் இப்னுல் ஜவ்ஸீ தெரிவித்துள்ளார். மேலும் இதே கருத்தில் திர்மிதீ மற்றும் ஹாகிம் ஆகிய நூல்களிலும் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே பலவீனமான செய்திகளாகும்.✍️✍️✍️* 


 *19. குழப்பமான காலத்தில் சுன்னத்திற்க்கு 100 ஸஹீத் நன்மை ஹதீஸ்* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️என்னுடைய சமுதாயம் சீரழிந்திருக்கும் வேளையில் என்னுடைய வழிமுறையை பின்பற்றுபவனுக்கு நூறு ஷஹீத் (உயிர் தியாகியின்) நன்மை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),* 

 *நூல் : அல்காமில் ஃபீ லுஅஃபாயிர்ரிஜால், பாகம் :2, பக்கம் :327)* 


 *✍️✍️✍️இதே செய்தி இப்னு பஷ்ரான் அவர்களின் அல்அமாலீ என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது* .
 *இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள அல்ஹஸன் பின் குதைபா என்பவர் பலவீனமானவராவார்✍️✍️✍️.* 


 *20. ஹம்ஸாவின் ஈரலை வெட்டிய ஹிந்த் ஹதீஸ்* 


 *🙋‍♂️🙋‍♂️ஹம்சா (ரலி) கொல்லப்பட்டது தொடர்பாக வந்துள்ள பலவீனமான செய்திகள்🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️1. ஹம்சா (ரலி) அவர்களை வஹ்ஷீ அவர்கள் கொன்றுவிட்டு அவர்களின் ஈரலை வெட்டி எடுத்துக் கொண்டு ஹிந்த் அவர்களிடம் கொண்டு சென்றார். அவர் அதை கடித்து விழுங்க முயற்சித்து தோற்றுப் போனார் என்ற ஒரு செய்தி இப்னு கஸீர் அவர்களின் அல்பிதாயா வந்நிகாயா என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த செய்திக்கு இமாம் இப்னு கஸீர் அவர்கள் அறிவிப்பாளர் தொடர் குறிப்பிடாததால் இந்த செய்தி பலவீனம் அடைகிறது✍️✍️✍️* .


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️2. ஹம்சா (ரலி) அவர்களின் ஈரலை ஹிந்த் அவர்களே வெட்டி எடுத்தார்கள் என்றும் உஹுத் போரில் கலந்துகொண்ட முஸ்லிம் ஆண்களின் காதுகளையும் மூக்குகளையும் வெட்டி கால் சலங்கைகளாக மாற்றிக் கொண்டார்கள் என்ற செய்தி இப்னு ஹிஷாம் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தியும் முழு அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் இடம் பெற்றுள்ளதால் இதுவும் பலவீனம் அடைகிறது.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️3. ஹம்சா (ரலி) அவர்களைக் கொன்ற வஹ்ஷீ அவர்கள் தம்முடைய எஜமான்,ஜுபைர் பின் முத்இம் அவர்களிடம் காட்டுவதற்காக ஹம்சா (ரலி) அவர்களின் ஈரலை மக்காவிற்கு எடுத்துச் சென்றார் என்று வாகிதி அவர்களின் மகாஸீ என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாஸீ என்ற நூலை எழுதி வாகிதி என்பவர் பொய்யர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர். எனவே இந்தச் செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.✍️✍️✍️* 


 *☪️☪️☪️ஹம்சா (ரலி) அவர்களை வஹ்ஷீ அவர்கள் கொன்றது உண்மை, ஆனால் அவர்களின் உடலை வெட்டி ஈரலை எடுத்த ஹிந்த் அவர்கள் கடித்து துப்பியதாக வரும் மூன்று செய்திகளும் ஆதாரமற்றது☪️☪️☪️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️(குறிப்பு – வஹ்ஷீ அவர்களும், ஹிந்த் அவர்களும் பின்னர் இஸ்லாத்தை ஏற்று விட்டனர் என்பது முக்கிய செய்தியாகும்.)🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *21.☪️☪️ முஹம்மது☪️☪️ என்று 🕋பெயர்🕋 வையுங்கள்📚📚 ஹதீஸ்📚📚* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 58* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment