பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, August 5, 2020

இஸ்லாத்தை அறிந்து - 55

*☪️☪️மீள்☪️ பதிவுவ☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 55  👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 


 *7. 📚📚📚 நற்செயல் காரணமாக வாழ்நாள் அதிகமாகும் 🌐🌐🌐*


 *8. ☪️🤲🤲🤲 பிரார்த்தனை இறைவனிடம் மதிப்பு மிக்கது 🤲🤲🤲☪️* 


 *9. 🕋🤲🤲🤲பிரார்த்தனை வணக்கங்களின் மூளை❓🤲🤲🤲🕋* 


*10. 📚🤲📚பிரார்த்தனை விதியை மாற்றி விடுமா❓🕋🤲🕋* 


 *♻️நற்செயல் காரணமாக வாழ்நாள் அதிகமாகும்♻️* 


 *✍️✍️✍️நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அந்த வழியே செல்லும் ஒரு மனிதரைப் பார்த்து இந்த மனிதர் திரும்பி வர மாட்டார். அதாவது மரணித்து விடுவார் என்று சொன்னார்கள், ஆனால் சில தினங்களுக்குப் பின் அந்த வழியாக மீண்டும் அந்த மனிதர் வந்தார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து நீங்கள் சில தினங்களுக்கு முன் ஏதாவது செய்தீர்களா என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் சில ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தேன் என்று கூறினார். அவர் சென்ற பின் அவர் செய்த நற்செயல் காரணமாக அவர் வாழ்நாளை அல்லாஹ் அதிகரித்திருக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள்,* 
 *இது போன்று எந்தச் செய்தியையும் நாம் ஹதீஸ் நூற்களில் காணவில்லை. இது போன்று பலவீனமான செய்தி கூட ஹதீஸ்களில் எதுவும் இல்லை.✍️✍️✍️* 


 *♻️♻️எனினும், கீழ்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது♻️♻️.* 


 *🙋‍♂️🙋‍♂️ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்🙋‍♂️🙋‍♂️.* 

 *அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),* 

 *நூல்: புகாரி 2067* 


 *🤲🤲பிரார்த்தனை இறைவனிடம் மதிப்பு மிக்கது🤲🤲* 


 *✍️நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை✍️.* 


 *அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி (3292)* 


 *✍️✍️✍️இந்தச் செய்தி பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இரண்டு பலவீனங்கள் உள்ளன.* 
 *முதலாவது இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ”கதாதா” என்பவர் ”முதல்லிஸ்” ஆவார். அதாவது தமது ஆசிரியரிடமிருந்து கேட்காத செய்தியையும் நேரடியாகக் கேட்டதைப் போன்று அறிவிப்பவர் ஆவார்.*  
 *இரண்டாவது இந்தச் செய்தியின் மற்றொரு அறிவிப்பாளரான ”இம்ரான் அல்கத்தான்” என்பவர் பலவீனமானவர் ஆவார்✍️✍️✍️.* 


” *🙋‍♂️🙋‍♂️இவர் உறுதியானவர் இல்லை” என்றும், இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என்றும், யஹ்யா இப்னு ஸயீத் இவரிடமிருந்து அறிவிக்கவில்லை என்றும் இமாம் யஹ்யா இப்னு முயீன் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.🙋‍♂️🙋‍♂️* 

 
 *🕋அல்லாஹ் கோபப்படுகின்றான்🕋* 


حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ عَنْ أَبِي الْمَلِيحِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَسْأَلْ اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ  (رواه الترمدي *3295* )

 *✍️✍️யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபப்படுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்✍️✍️* .


 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 3295* 


 *✍️✍️✍️மேற்கண்ட செய்தி இப்னு மாஜா, அஹ்மத், ஹாகிம் போன்ற கிரந்தங்களிலும் இதே அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ளது.* 
 *இதன் அறிவிப்பாளர் வரிசையில் ”அபூ ஸாலிஹ் அல்ஹவ்சிய்யு” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்* .
 *துன்பம் நீங்கும் வரை பிரார்த்தித்தல் வணக்கங்களில் சிறந்தது✍️✍️✍️* 


حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ الْبَصْرِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ وَاقِدٍ عَنْ إِسْرَائِيلَ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ أَنْ يُسْأَلَ وَأَفْضَلُ الْعِبَادَةِ انْتِظَارُ الْفَرَجِ قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى حَمَّادُ بْنُ وَاقِدٍ هَذَا الْحَدِيثَ وَقَدْ خُولِفَ فِي رِوَايَتِهِ وَحَمَّادُ بْنُ وَاقِدٍ هَذَا هُوَ الصَّفَّارُ لَيْسَ بِالْحَافِظِ وَهُوَ عِنْدَنَا شَيْخٌ بَصْرِيٌّ وَرَوَى أَبُو نُعَيْمٍ هَذَا الْحَدِيثَ عَنْ إِسْرَائِيلَ عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ عَنْ رَجُلٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا وَحَدِيثُ أَبِي نُعَيْمٍ أَشْبَهُ أَنْ يَكُونَ أَصَحَّ

 *🕋🕋🕋அல்லாஹ்வின் அருட்கொடையை அவனிடம் நீங்கள் கேளுங்கள்! ஏனெனில் தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் பெரிதும் விரும்புகிறான். (இறைவன் அல்லாதவர்களிடம் கையேந்திவிடாமல்) துன்பம் நீங்கும் வரை (பிரார்த்தித்தவனாக இறையருளை) எதிர்பார்ப்பதுதான் வணக்கங்களில் மிகச் சிறந்ததாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🕋🕋🕋* 


 *அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: திர்மிதீ 3494* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக ”ஹம்மாத் இப்னு வாகித்” என்பார் இடம் பெற்றுள்ளார். இந்தச் செய்தியை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே ”இவர் (ஹதீஸ்களை) மனனம் செய்தவராக இல்லை” என்று விமர்சித்துள்ளார்கள்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 
 *🤲🤲பிரார்த்தனை வணக்கங்களின் மூளை🤲🤲* 


حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ ابْنِ لَهِيعَةَ (رواه الترمدي *3293* )


 *✍️நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையாகிறது வணக்கங்களின் மூளையாகும்✍️.* 


 *அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : திர்மிதி (3293)* 


 *✍️✍️✍️இந்தச் செய்தியும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ”இப்னு லஹீஆ” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையாகிறது வணக்கங்களின் மூளையாகும். பிறகு ”என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; ( திருக்குர்ஆன் 40 : 59) என்ற வசனத்தை ஓதினார்கள்          அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)✍️✍️✍️* 


 *நூல் : நிஹாயத்துல் முராத் மின் கலாமி ஹைரில் இபாத் பாகம் : 1 பக்கம் : 52)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதன் அறிவிப்பாளர் தொடரில் ”அல்பள்லு இப்னு முஹம்மத் இப்னு ஸயீத்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் ”யாரென்றே அறியப்படாதவர் ஆவார்”. எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* .            

 *🤲🤲பிரார்த்தனை விதியை மாற்றி விடுமா🤲🤲* 


 *✍️✍️பிரார்த்தனை விதியை மாற்றிவிடும் என்ற கருத்தில் ஒரு செய்தி ஹதீஸ் நூற்களில் இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூர்வமான செய்தி இல்லை.✍️✍️* 

 *87* حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ وَلَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِخَطِيئَةٍ يَعْمَلُهَا رواه إبن ماجه

 *✍️✍️✍️அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :* 
 *(பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது. பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரகத் கிடைக்காமல் போகின்றது✍️✍️✍️.* 

 *அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)* 

 *நூல் : இப்னு மாஜா 87* 


 *✍️✍️✍️இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் அபில் ஜஃது என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர வேறு யாரும் நம்பகமானவர் என்று சான்று அளிக்கவில்லை. இமாம் இப்னுல் கத்தான் அவர்கள் இவருடைய நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை எனக் கூறியுள்ளார்.* 
 *இமாம் இப்னு ஹிப்பான் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை நம்பகமானவர்களின் பட்டியலில் குறிப்பிடும் அலட்சியப் போக்குடையவர் என்பதால் இவருடைய கூற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று முடிவு செய்ய முடியாது.* 
 *இவருடைய நம்பகத்தன்மைக்கு மற்ற அறிஞர்கள் யாரும் நற்சான்று அளிக்கவில்லை. எனவே இவர் பலவீனமானவானர். பலவீனமான இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது✍️✍️✍️.* 


 *11. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அண்டைவீட்டார் மூன்று வகைப்படுவர்🧕🧕🧕* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 56* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment