பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, August 20, 2020

இஸ்லாத்தை அறிந்து - 70

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமியலாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 70 👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 


 *87. 🕋🕋🕋கஅபாவை🕋🕋🕋 பார்த்து ☪️☪️☪️கேட்கும் 🤲🤲🤲துஆ🤲🤲🤲 அங்கீகரிக்கப்படுமா❓📚📚 ஹதீஸ்📚📚📚* 


 *88. ☪️☪️☪️ஷாபான்☪️☪️ மாதம்🕋 பற்றிய🕋 பலவீனமான📚 ஹதீஸ்கள்📚 அனைத்தும் 📚ஹதீஸ்📚📚📚* 


 *89.🧶🧶🧶 ஸலவாத்து 🕋🕋பற்றிய ☪️☪️பலவீனமான📚📚 ஹதீஸ்கள்📚📚 அனைத்தும்📚📚 ஹதீஸ்📚📚📚*  *90. 🕋🕋🕋தூரத்தில்🧕🧕 மணம் 🧕🧕செய்து☪️☪️ கொள்ளுங்கள்☪️☪️ ஹதீஸ்📚📚📚* 


 *91. 🕋🕋🕋ஆஷுரா🕋🕋 நாளில்☪️☪️ குடும்பத்திடம்☪️☪️ தாராளமாக 📚📚நடந்து 📚📚கொள்📚📚 ஹதீஸ்📚📚📚* 


 *🌐87. கஅபாவை பார்த்து கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா❓ ஹதீஸ்🌐* 


 *🕋🕋🕋கஅபத்துல்லாஹ்வை பார்த்து கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படும் என்று சில ஹதீஸ் உள்ளன. அவை பலவீனமானவையாகும். இது தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூலில் இரண்டு இடங்களிலும் பைஹகீயில் ஒரு இடத்திலும் இடம்பெற்றுள்ளது.🕋🕋🕋* 
 

 *☪️தப்ரானியின் அறிவிப்பு : 1☪️* 


 *✍️✍️✍️நான்கு இடங்களில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 1. அல்லாஹ்வுடைய பாதையில் (போர்க்களத்தில்) அணி வகுத்து (எதிரிகளை) சந்திக்கும் போது. 2. மழை பொழியும் போது. 3. தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது 4. கஅபாவைக் காணும் போது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி),* 

 *நூல் : அல்முஃஜமுல் கபீர் – தப்ரானீ, பாகம் :8 பக்கம் :169* 

 
 *☪️தப்ரானியின் அறிவிப்பு : 2☪️* 


المعجم الكبير – *(8 / 171)* 

 *7719* – حدثنا أحمد بن المعلى الدمشقي ثنا هشام بن عمار ثنا الوليد بن مسلم ثنا عفير بن معدان عن سليم بن عامر عن أبي أمامة : عن النبي صلى الله عليه و سلم قال : : تفتح أبواب السماء ويستجاب دعاء المسلم عند إقامة الصلاة وعند نزول الغيث وعند زحف الصوف وعند رؤية الكعبة


 *☪️பைஹகீயின் ஸுனனுல் குப்ரா அறிவிப்பு :☪️* 

سنن البيهقي الكبرى – ( *3* / *360* )

 *6252* – أخبرنا أبو نصر بن قتادة أنبأ أبو محمد عبد الله بن أحمد بن سعد الحافظ ثنا محمد بن إبراهيم البوشنجي ثنا الهيثم بن خارجة أبو أحمد ثنا الوليد بن مسلم عن عفير بن معدان ثنا سليم بن عامر عن أبي أمامة سمعه يحدث عن رسول الله صلى الله عليه و سلم قال : تفتح أبواب السماء ويستجاب الدعاء في أربعة مواطن عند التقاء الصفوف وعند نزول الغيث وعند إقامة الصلاة وعند رؤية الكعبة


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த மூன்று இடங்களிலும் உஃபைஃர் பின் மஃதான் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் அனைத்த அறிஞர்களாலும் பலவீனமானவர் என்று சொல்லப்பட்டவர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️உஃபைஃர் பின் மஃதான் என்பவர் மதிப்பற்றவர் என்று இப்னு மயீன், துஹைம் ஆகியோர் கூறியுள்ளனர்.அபூஹாத்திம் அவர்கள் இவர் பலவீனமானவர், இவர் சுலைம் பின் ஆமிர், அபூஉமாமா ஆகியோர் வழியாக மறுக்கப்படவேண்டிய அடிப்படையில்லாத செய்திகளை அறிவிப்பவர் என்று அபூஹாத்திம் அவர்கள் கூறியுள்ளார்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே கஅபத்துல்லாஹ்வை பார்க்கும் போது துஆ ஏற்கப்படும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 
 *🛑88. ஷாபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஹதீஸ்🛑* 


 *✍️✍️✍️ஷஃபான் மாதத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இடம்பெறக்கூடிய சில பலவீனமான அல்லது, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை நாம் இங்கு குறிப்பிடுகின்றோம்.✍️✍️✍️* 


 *🕋🕋🕋1. “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பார்கள். சிலவேளை அவற்றை நோற்காமல் அவ்வருடத்தில் (விடுபட்ட) முழு நோன்பும் ஒன்று சேரும் வரை பிற்படுத்துவார்கள். பின்பு (விடுபட்ட) அந்த நோன்புகளை அவர்கள் ஷஃபானில் நோற்பார்கள்”.🕋🕋🕋* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இச்செய்தி தபராணியில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இப்னு அபீலைலா என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🕋🕋🕋2. “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜப் மாதம் நுழைந்தால்: ‘இரட்சகனே! எங்களுக்கு ரஜபிலும் ஷஃபானிலும் பரகத் செய்வாயாக மேலும், ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக’ என்று பிரார்த்திப்பார்கள்”🕋🕋🕋.* 


 *✍️✍️✍️இச்செய்தி பஸ்ஸார், தபராணீ ஆகிய நூற்களில் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஸாஇதா இப்னு அபிர்ருகாத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் குறித்து இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: “இவரது ஹதீஸ் மறுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்கள். இமாம் நஸாஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: “இவர் யார் என்று எனக்குத் தெரியாது” என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்னு ஹிப்பான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: “இவரது செய்தியைக் கொண்டு ஆதாரம் எடுக்க முடியாது” என்று கூறியுள்ளார்கள். மேலும், இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸை “தப்யீனுல் அஜப்” என்ற நூலில் பலவீனம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.✍️✍️✍️* 


 *🕋🕋🕋3. “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுக்குப் பிறகு ரஜப், ஷஃபான் ஆகிய மாதங்களைத் தவிர வேறு மாதங்களில் நோன்பு நோற்கவில்லை”.🕋🕋🕋* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்ட இச்செய்தியை இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “தப்யீனுல் அஜப்” என்ற நூலில் பலவீனம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஏனெனில், இதன் அறிவிப்பாளர் வரிசையில் யூஸுப் இப்னு அதிய்யா என்பவர் இடம்பெறுகிறார். இவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *☪️☪️☪️4. “ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் இந்த உம்மத்தின் மாதம்”☪️☪️☪️.* 


 *✍️✍️✍️இச்செய்தி இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஒரு செய்தியாகும். இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் வரக்கூடிய அபூபக்ர் என்பவர் பலவீனமானவரும், இவரது ஹதீஸ் விடப்பட்டதுமாகும் என்று இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அல்மீஸான்” என்ற நூலில் கூறியுள்ளார்கள். மேலும், இச்செய்தி மற்றோர் அறிவிப்பாளர் வரிசையினூடாக “முஸ்னதுல் பிர்தவ்ஸ்” என்ற நூலில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஹஸன் இப்னு யஹ்யா என்பவர் இடம்பெறுகின்றார். இவரது அறிவிப்பை இமாம் தாரகுத்னி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஏற்காமல் விட்டுள்ளார்கள் என்று இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், இச்செய்தியை இமாம் ஸுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.✍️✍️✍️* 


 *🕋🕋🕋5. “ஷஃபான் என்னுடைய மாதமாகும். எனவே, எவர் ஷஃபானை கண்ணியப்படுத்துகின்றாரோ அவர் எனது கட்டளையை கண்ணியப்படுத்திவிட்டார்”.🕋🕋🕋* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இச்செய்தியும் இட்டுக்கட்டப்பட்ட ஒரு ஹதீஸ் என்று இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “தப்யீனுல் அஜப்” என்ற நூலில் கூறியுள்ளார்கள். நூஹ் அல்ஜாமிஃ என்பவரால் இட்டுக்கட்டப்பட்டதே இச்செய்தியாகும். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்று அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் பலவீனமானவர் என்பதில் அனைத்து ஹதீஸ் கலை அறிஞர்களும் உடன்பட்டுள்ளதாக அல்ஹலீலீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🌐🌐🌐6. “ஏனைய மாதங்களை விட ஷஃபானுக்கு உள்ள சிறப்பு, ஏனைய நபிமார்களை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உள்ள சிறப்பைப் போன்றதாகும்”🌐🌐🌐.* 


 *✍️✍️✍️இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியையும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறக்கூடிய அஸ்ஸிக்தி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுவதில் பிரசித்தி பெற்றவராவார்✍️✍️✍️.* 


 *☪️☪️☪️7. “ஏன் ஷஃபான் மாத்திற்கு ஷஃபான் என்று பெயர் வைக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஏனெனில், அம்மாத்தில் ரமழானுக்காக வேண்டி அதிக நலவுகள் பெருகிவிடுகின்றன”☪️☪️☪️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இமாம் சுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தி குறித்து இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் சியாத் இப்னு மய்மூன் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பொய்யைக் கொண்டு அறியப்பட்டவராவார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🕋🕋🕋8. “ரமழானுக்குப் பின் மிகச் சிறந்த நோன்பு ஷஃபானுடைய நோன்பாகும்”.🕋🕋🕋* 


 *✍️✍️✍️இமாம் திர்மிதி, பைஹகி ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் இந்த ஹதீஸை அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவித்துள்ளார்கள். இமாம் சுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இச்செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஸதகா இப்னு மூஸா என்பவர் இடம்பெறுகின்றார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இச்செய்தி பின்வரும் ஹதீஸுக்கும் முரணாக அமைந்துள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ரமழானுக்குப் பின்பு மிகச் சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும்”. (முஸ்லிம்)✍️✍️✍️* 


 *🧕🧕🧕9. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பை விடமாட்டாரோ என்று நாம் கருதும் அளவுக்கு அவர்கள் நோன்பு நோற்பார்கள். அவர்கள் நோன்பு நோற்க மாட்டார்களோ என்று நாம் கருதும் அளவுக்கு அவர்கள் நோன்பை விடுவார்கள். அவருடைய அதிகமான நோன்பு ஷஃபான் மாதத்தில் அமைந்திருந்தது. ‘அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானில் நீங்கள் அதிகமாக நோன்பு நோற்பதை நான் காணக்கூடியதாக இருக்கின்றதே?” என்று நான் அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள்: ‘ஆயிஷாவே! இம்மாதத்தில் உயிரைக் கைப்பற்றும் வானவருக்கு எவர்களது உயிர்;கள் கைப்பற்றப்பட இருந்ததோ அவர்களது உயிர்கள் கைப்பற்றப்படாமல் மாற்றப்பட்டுக் கொடுக்கப்படும். எனவே, நான் நோன்பாளியாக இருக்கும் போதே அன்றி எனது பெயர் மாற்றப்படக்கூடாது என்று நான் விரும்புகின்றேன்’ என்றார்கள்”.🧕🧕🧕* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அபூஹாதிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தி குறித்து மறுக்கப்பட்ட செய்தி எனக் கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸின் ஆரம்பப் பகுதி புஹாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. ஷஃபானில் அதிகம் நோன்பு நோற்பதற்குரிய காரணத்தைத் தெளிவுபடுத்தும் பகுதி மறுக்கப்பட்ட செய்தியாகும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *☪️☪️☪️10. ”ஷஃபானுடைய பதினைந்தாம் இரவு வந்தால் அதன் இரவில் நீங்கள் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்”.☪️☪️☪️* 


 *✍️✍️✍️அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அஸ்ஸில்ஸிலா அள்ளஈபா” என்ற நூலில் இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாளர் வரிசை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்று இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும், இவர் பலவீனமானவர் என்று யஹ்யா இப்னு மஈன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் புஹாரி, இப்னுல் மதீனி ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று கூறியுள்ளார்கள்.✍️✍️✍️* 


 *⚫⚫⚫11. ”ஐந்து இரவுகளில் கேட்கப்படும் துஆ மறுக்கப்பட மாட்டாது. அவை ரஜப் மாதத்தின் முதல் இரவு, ஷஃபானுடைய பதினைந்தாம் இரவு, ஜும்ஆ இரவு, நோன்புப் பெருநாள் இரவு, ஹஜ்ஜுப் பெருநாள் இரவு”⚫⚫⚫.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அஸ்ஸில்ஸிலா அள்ளஈபா” என்ற நூலில் இச்செய்தி குறித்து இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *☪️☪️☪️12. ”எவர் ஷஃபானுடைய பதினைந்தாம் இரவு குல்ஹுவல்லாஹு அஹத் சூராவை ஆயிரம் தடவைகள் ஓதுகின்றாரோ, அவருக்கு நன்மாராயம் கூறக்கூடிய ஒரு இலட்சம் வானவர்களை அல்லாஹ் அவரிடம் அனுப்பி வைப்பான்☪️☪️☪️”* 
.

 *✍️✍️✍️இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அல்மனாருல் முனீப்” என்ற நூலிலும் இப்னுல் ஜவ்ஸீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அல்மவ்ழூஆத்” என்ற நூலிலும் இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளனர்கள்.✍️✍️✍️* 


 *🟣89. ஸலவாத்து பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஹதீஸ்🟣* 


 *🕋🕋🕋சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தை காணாமல் மரணிக்க மாட்டார்🕋🕋🕋* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️என் மீது யார் ஒரு (ஜூம்ஆ) நாளில் ஆயிரம் முறை ஸலவாத் கூறுவாரோ அவர் சொர்க்கத்தில் உள்ள தமது இருப்பிடத்தை காணாமல் மரணிக்க மாட்டார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி).* 

 *இந்த செய்தி அல்அமாலி பாகம் 1 பக் 172, அத்தர்கீப் பாகம் 1 பக் 22 மற்றும் இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.* 


 *✍️✍️✍️இது முழுக்க பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹகம் பின் அதிய்யா பலவீனமானவர் ஆவார்.✍️✍️✍️* 

 *☪️நெருக்கமானவர்☪️* 


 *🕋🕋🕋நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உலகில் அதிமாக என் மீது ஸலவாத் கூறியவரே மறுமை நாளில் உங்களிலே எல்லா வகையிலும்  எனக்கு நெருக்கமானவர் ஆவார். ஜூம்ஆ பகலிலும் இரவிலும் என் மீது ஸலவாத் கூறியவரின் நூறு தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்து விடுவான்.🕋🕋🕋* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எழுபது தேவைகள் மறுமை தொடர்புடையதாகவும், முப்பது தேவைகள் உலகத் தொடர்புடையதாகவும் இருக்கும். பிறகு இதற்கென ஒரு வானவரை அல்லாஹ் நியமிப்பான். அவர் பலிப்பிராணிகள் உங்களிடம் நுழைந்து வருவதைப் போன்று எனது கப்ரில் நுழைந்து வருவார். என் மீது ஸலவாத் கூறியவரின் பெயர், அவரது பாரம்பரியம் என அவரது குடும்பத்தார் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தையும் எனக்கு அவ்வானவர் தெரிவிப்பார். என்னிடத்தில் உள்ள வெள்ளைப் பதிவேட்டில் அவற்றை நான் குறித்துக் கொள்வேன்.             அறிவிப்பவர் அனஸ் ரலி🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️இந்தச் செய்தி ஷூஅபுல் ஈமான் 2773, அல்ஃபவாயித் பக் 71,  அத்தர்கீப் வத்தர்ஹீப் பாக1 பக் 525 ஹயாதுல் அம்பியா பாக 1 பக் 94 இன்னும் பிற நூல்களில் சில வார்த்தைகள் மாறுபட்ட நிலையில் பதிவாகியுள்ளது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதன் எல்லா அறிவிப்புகளில் ஹக்காமா என்பவர் தம் தகப்பனார் உஸ்மான் பின் தீனார் வழியாக அறிவிப்பதாகவே உள்ளது.* 
 *ஹக்காமா என்பவர் ஹதீஸ் துறையில் எந்த மதிப்பும் அற்றவர் என்று இப்னு ஹிப்பான் விமர்சனம் செய்துள்ளார். ஸிகாத் பாகம் 7 பக் 194🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 
 *☪️☪️☪️காலையிலும் மாலையிலும் 10 முறை ஸலவாத்☪️☪️☪️* 


 *✍️✍️✍️யார் காலையிலும் மாலையிலும் என் மீது பத்து முறை ஸலவாத் கூறுகிறாரோ மறுமையில் அவருக்கு எனது பரிந்துரை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍️✍️✍️.* 
 *அறிவிப்பவர் அபுத்தர்தா (ரலி), அஸ்ஸலாது அலன் நபி பாக 1 பக் 48* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதுவும் பலவீனமான செய்தியாகும். ஏனெனில் இந்தச் செய்தியில் சில குறைபாடுகள் உள்ளன.* 
 *முதலாவது இதில் அறிவிப்பாளர் வரிசை தொடர்பு அறுந்து உள்ளது.* 
 *காலித் பின் மஃதான் என்பவர் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் செவியுறவில்லை என்று இமாம் அஹ்மத் கூறுகிறார். (ஜாமிஉத் தஹ்ஸீல்)🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *☪️ஜூம்ஆ நாளிலும் நாற்பது முறை☪️* 


 *✍️✍️✍️நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு ஜூம்ஆ நாளிலும் நாற்பது முறை யார் என் மீது ஸலவாத் ஓதுகிறாரோ அவரது நாற்பது வருட பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். ஒரு முறை என் மீது ஸலவாத் ஓதினால் அது அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டு எண்பது வருட பாவங்களை அல்லாஹ் அழித்து விடுகிறான்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : அனஸ் (ரலி)* 

 *நூல் : அத்தர்கீப் வத்தர்ஹீப், பாகம் : 2, பக்கம்: 329* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதில் முஹம்மத் பின் ரஸாம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர். ஆகையினால் ஹதீஸ் கலை நிபுணர்கள் இவரைப் புறக்கணித்து விட்டனர் என்று அஸதீ அவர்களும், இவர் தவறான செய்திகளை அறிவிப்பவர் என்று தாரகுத்னீ அவர்களும் விமர்சித்துள்ளனர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 
 *☪️ஸிராத் எனும் பாலத்தில் ஒளி☪️* 


 *✍️✍️✍️என் மீது ஸலவாத் சொல்வது (மறுமையின் இருள் நிறைந்த) ஸிராத் எனும் பாலத்தில் ஒளி தருவதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதில் அவ்ன் பின் உமாரா, ஹஜ்ஜாஜ் பின் ஸினான், மற்றும் அலி பின் ஜைத் ஆகிய மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இவர்களை எண்ணற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள்* .
 *பார்க்க : தஹ்தீபுல் கமால், பாகம்: 20, பக்கம்: 439, லிஸானுல் மீஸான் பாகம்:2, பக்கம்: 263, தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:8, பக்கம் :173✍️✍️✍️* 

 
 *☪️புத்தகத்தில் (எழுத்தில்) ஸலவாத்☪️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️யார் என் மீது புத்தகத்தில் (எழுத்தில்) ஸலவாத் சொல்வாரோ அப்புத்தகத்தில் என் பெயர் இருக்கும் வரை  மலக்குமார்கள் அவருக்காக பாவமன்னிப்பு கோரிக் கொண்டே இருப்பார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி).* 

 *இந்தச் செய்தி தப்ரானீ 447, முஃஜமுல் அவ்ஸத் 1835, ஆகிய நூற்களில் பதிவு  செய்யப்பட்டுள்ளது.* 


 *✍️✍️✍️இது மிகவும் பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பில் உள்ள யஸீத் பின் இயாழ் என்பவரை அனைத்து அறிஞர்களும் பலவீனமானவர் என்று சான்றளித்துள்ளனர்✍️✍️✍️.* 


 *🟢90. தூரத்தில் மணம் செய்து கொள்ளுங்கள் ஹதீஸ்🟢* إحياء علوم الدين ومعه تخريج الحافظ العراقي – *(2 / 300* (
قال صلى الله عليه وسلم (لا تنكحوا القرابة القريبة فإن الولد يخلق ضاويا)


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நெருங்கிய உறவினர்களைத் திருமணம் செய்யாதீர்கள். ஏனெனில் குழந்தை பலவீனமானதாகப் படைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஹ்யாவு உலுமித்தீன், பாகம் 2, பக்கம் 300 இஹ்யாவு உலூமித்தீன் என்ற நூலில் இடம்பெறும் செய்திகள் எந்த நுலில் இடம்பெற்றுள்ளது என்பதை ஆய்வு செய்த ஹாபிழ் இராகீ அவர்கள். இது அடிப்படையில்லாத செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.*


تخريج أحاديث الإحياء – (2 / 42(قال ابن الصلاح : لم أجد له أصلا معتمدا


 *✍️✍️✍️இந்தச் செய்திக்கு நம்பகமான எந்த அடிப்படையையும் நான் பெற்றுக் கொள்ளவில்லை என்று இப்னுஸ் ஸலாஹ் அவர்கள் கூறியுள்ளார்.✍️✍️✍️* 

 *நூல் தக்ரீஜ் அஹாதீஸில் இஹ்யா, பாகம் 2, பக்கம் 42*


 *🔴91. ஆஷுரா நாளில் குடும்பத்திடம் தாராளமாக நடந்து கொள் ஹதீஸ்🔴* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️இது அபூஹுரைரா (ரலி) அவர் களின் அறிவிப்பாக ஷுஅபுல் ஈமான் (ஹதீஸ் எண் 3795), ஜுஸ்உ காஸிம் பின் மூஸா (பக்கம் 17) உள்ளிட்ட இன்னும் சில நூற்களில் பதிவாகி உள்ளது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹஜ்ஜாஜ் பின் நுஸைர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார்* .
 *இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்றும் பலவீனமானவர் என்றும் இமாம் அபூஹாதம் குறிப்பிட்டுள்ளார்.* 
 *இவரது ஹதீஸ்கள் செல்லாததாக ஆகி விட்டன என்று அலீ இப்னுல் மதீனீ விமர்சித்துள்ளார்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 3, பக்கம் 167* 

 
 *✍️✍️✍️இதேபோன்று ஆஷுரா நாளில் குளித்தவருக்கு நோய் ஏற்படாது, கண்ணில் சுருமா தீட்டியவருக்குக் கண்வலி வராது என்ற இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களும் உள்ளன. இவை அனைத்துமே பலவீனமான ஹதீஸ்களாகும்✍️✍️✍️.* 


 *92. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆணும் பெண்ணும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ பார்க்கவே 🌐கூடாது📚 ஹதீஸ்📚📚📚* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 71* 


 *🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment