பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, August 15, 2020

இஸ்லாத்தை அறிந்து - 63

*☪️☪️மீள்☪️ பதிவுவ☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 63 👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 


 *46. 🏭🏭🏭பள்ளியில் 🕋🕋பேசுவது🙋‍♂️🙋‍♂️ நன்மைகளை ☪️உண்டு ☪️விடும்📚📚ஹதிஸ்📚📚📚* 


 *47. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அனாதைகள்🧕🧕🧕 பெண்கள் உரிமையில் 🕋அதீதமாக 🧶நடப்போரை🟣 எச்சரிக்கிறான்📚 ஹதீஸ்📚📚📚* 


 *48. 🧕🧕🧕தலாக் கூறினால் 🕋🕋அர்ஷ் 🌐நடுங்கும்📚 ஹதீஸ்📚📚📚*  *49. 🕋🕋🕋7 வருடம்☪️ பாங்கு🧶 சொன்னால்🔥🔥 நகரிலிருந்து🔥🔥 விடுதலை📚 ஹதீஸ்📚📚📚* 


 *50. 🌐🌐மனோ இச்சையை🟣🟣 எதிர்ப்பதே  👹சிறந்த🙋‍♂️🙋‍♂️ ஜிஹாத்📚 ஹதீஸ்📚📚📚* 


 *46. பள்ளியில் பேசுவது நன்மைகளை உண்டு விடும் ஹதிஸ்* 


 *✍️✍️✍️கால்நடைகள் புற்பூண்டுகளைத் திண்பதைப் போன்று பள்ளிவாசல்களில் பேசுவது நன்மைகளைத் தின்றுவிடும்✍️✍️✍️* .


الحديث في المسجد يأكل الحسنات كما تأكل النار الحطب.


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நெருப்பு விறகை எரித்துவிடுவதைப் போன்று பள்ளியில் பேசுவது நன்மைகளை (எரித்து) உண்டு விடும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️கஸ்ஸாலி, இந்தச் செய்தியை நபிகள் நாயகம் கூறியதுபோல தனது இஹ்யாவு உலூமீத்தீன் என்ற நூலில் கூறியுள்ளார்✍️✍️✍️.* 


 *(பாகம் 1 பக்கம் 152)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆனால் இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கு எந்த அடிப்படையும் அறவே கிடையாது. இது அறிவிப்பாளர் தொடர் இல்லாத அடிப்படை ஆதாரமற்ற செய்தியாகும். பல அறிஞர்கள் இது அடிப்படையில்லாத செய்தி என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .


 *47. அனாதைகள் பெண்கள் உரிமையில் அதீதமாக நடப்போரை எச்சரிக்கிறான் ஹதீஸ்* 


 *✍️✍️✍️”இறைவா! அனாதைகள் பெண்கள் ஆகிய இந்த இரண்டு பலவீனமானவர்களின் உரிமையில் (அநீதமாக நடப்போரை) நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.”*✍️✍️✍️ 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இமாம் நஸாயீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அஸ்ஸுனனுல் குப்ரா எனும் நூலில் பதிவுசெய்துள்ளார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இமாம் நவவீ அவர்கள் அனாதைகள் பெண்கள் பலவீனர் ஏழைகள் ஆகியோரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுதல் அவர்களுக்கு நன்மை செய்தல் இரக்கம் காட்டுதல் என்ற 29 வது தலைப்பின் கீழ் 268 வது செய்தியாக இதை பதிவுசெய்துள்ளார்கள்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த செய்தியில் முஹம்மது பின் அஜ்லான் என்பவரும் அப்துல்லாஹ் பின் சயீத் பின் அபீ சயீத் என்பவரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இரு வரும் பலவீனமானவர்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️எனவே இந்த ஹதீஸ் பலவீனமானது.✍️✍️* 


 *48. தலாக் கூறினால் அர்ஷ் நடுங்கும் ஹதீஸ்* 


 *🧕🧕🧕விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறதா❓🧕🧕🧕* 


أخبار أصبهان – ( *2* / *289* ( عن علي ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « تزوجوا ولا تطلقوا ، فإن الطلاق يهتز له العرش


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️திருமணம் செய்யுங்கள் ஆனால் விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 
.
 *அறிவிப்பவர் அலி ரலி,* 

 *நூல்கள் : அக்பாரு உஸ்பஹான் 540, தாரீகு பக்தாத் 6654* 


 *✍️✍️✍️இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஜூவைபிர் என்பவர் மிகவும் பலவீனமானவர். இவரை ஹதீஸ் துறை இமாம்களான யஹ்யா பின் ஸயீத், அஹ்மத், இப்னு மயீன், நஸாயீ, தாரகுத்னீ ஆகியோர் முறையே பலவீனமானவர் இவரது ஹதீஸில் கவனம் செலுத்தப்படாது ஹதிஸ் துறையில் மதிப்பில்லாதவர் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட்டவர் என்று விமர்சித்துள்ளார்கள்✍️✍️✍️* 


 *நூல் : அல்லுஆபாஉ வல் மத்ருகீன் பாகம் 1 பக்கம் 177* 


 *49. 7 வருடம் பாங்கு சொன்னால் நகரிலிருந்து விடுதலை ஹதீஸ்* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️”யார் நன்மையை எதிர்பார்த்து ஏழுவருடங்கள் பாங்கு சொல்வாரோ அவருக்கு நரகத்திலிருந்து விடுதலை வழங்கப்படும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 
.

 *அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),* 

 *நூல்கள் : திர்மிதீ (190), இப்னுமாஜா (719),தப்ரானீ-கபீர்,பாகம் :9, பக்கம்:290* 


 *✍️✍️✍️இந்தச் செய்தியில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் ஜாபிர் பின் யஸீத் பின் அல்ஹாரிஸ் அல்ஜஅஃபீ என்பவர் பொய்யர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஜாபிர் ஒரு பொய்யர் என்றும் இவருடைய செய்திகளை பதிவுசெய்யக்கூடாது என்று யஹ்யா பின் மயீன் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் ஹதீஸ்துறையில் விடப்பட்டவர் என்றும் இவர் நம்பகமானவர் இல்லை என்றும் இவருடைய செய்திகளை பதிவு செய்யக்கூடாது என்று இமாம் நஸாயீ குறிப்பிட்டுள்ளார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 
.

 *(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் :2, பக்கம் : 41)* 


 *✍️✍️எனவே, இது பலவீனமானதாகும்✍️✍️* 


 *50. மனோ இச்சையை எதிர்ப்பதே  சிறந்த ஜிஹாத் ஹதீஸ்* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️”ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (போரிலிருந்து திரும்பிய) போர் வீரர்கள் குழு வந்தனர். அப்போது நபியவர்கள் நீங்கள் சிறிய ஜிஹாதிலிருந்து பெரிய ஜிஹாதின் பக்கம் வருகை அளித்துள்ளீர்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் பெரிய ஜிஹாத் என்றால் எது என்று கேட்க ஒரு அடியான் தனது மனோ இச்சையை எதிர்த்து போர்புரிவதே (பெரிய ஜிஹாத்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️”* 


 *நூல் : பைஹகீ அவர்களின் ஸூஹ்துல் கபீர் பாகம் 1 பக்கம் 388* 


 *✍️✍️✍️தப்லீக் ஜமாஅத்தவர்கள் குறிப்பாக சூஃபியாக்கள் இதை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மக்களுக்கு மத்தியில் சொல்கின்றனர்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இது பைஹகீ அவர்களின் ஸூஹ்துல் கபீர் மற்றும் தாரீகு பக்தாத் எனும் நூலிலும் 7345 ஆவது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இதன் இறுதியில் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடரைக் கொண்ட செய்தி என்று விமர்சித்துள்ளார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றிருக்கும் லைசு பின் அபீ சுலைம் ஹதீஸ் கலை அறிஞர்களால் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்கள். இவரது ஹதீஸ்கள் பலவீனமானவையாகும். இவர் உறுதியானவர் அல்ல என்று அபூஇஸ்ஹாக் அல்ஜவ்ஸஜானீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.✍️✍️✍️* 


 *(நூல் அஹ்வாலுர் ரிஜால் 1 91)*  *51. 🟣🟣🟣(ISIS)⚫⚫ கருப்புக்கொடி🟢🟢 வந்தால்🔵🔵 சேர்த்து 🔴🔴கொள்📚📚 ஹதீஸ்📚📚📚* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 64* 


 *🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment